Published:Updated:

`பாழான மண்ணை மீட்கும் அமுதக் கரைசல்!' - ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் 6 மாணவிகள் விழிப்புணர்வு

விவசாயியிடம் விளக்கும் மாணவி

கணியம்பாடி கிராமத்தில் வீடு எடுத்து 6 மாணவிகளும் தங்கினர். 120 நாள்களாக சுற்றியுள்ள கீழ் அரசம்பட்டு, சிங்கிரி, துத்திப்பட்டு, விருப்பாட்சிபுரம், நெல்வாய், பென்னாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களுக்குப் பயணித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

`பாழான மண்ணை மீட்கும் அமுதக் கரைசல்!' - ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் 6 மாணவிகள் விழிப்புணர்வு

கணியம்பாடி கிராமத்தில் வீடு எடுத்து 6 மாணவிகளும் தங்கினர். 120 நாள்களாக சுற்றியுள்ள கீழ் அரசம்பட்டு, சிங்கிரி, துத்திப்பட்டு, விருப்பாட்சிபுரம், நெல்வாய், பென்னாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களுக்குப் பயணித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Published:Updated:
விவசாயியிடம் விளக்கும் மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம், கலவைப் பகுதியிலிருக்கும் ஆதிபராசக்தி தோட்டக்கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகளான கார்த்திகா, ஜீவிதா, ஜோஸ்புவனா, காவ்யா, கீர்த்தனா, லலிதா ஆகிய 6 பேரும் இயற்கை உரங்கள் குறித்து கடந்த 3 மாதங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்காக, டிசம்பர் 25-ம் தேதியன்று கணியம்பாடி கிராமத்தில் வீடு எடுத்து 6 மாணவிகளும் தங்கினர். அப்போதிலிருந்து சுமார் 120 நாள்களாகக் கணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கீழ் அரசம்பட்டு, சிங்கிரி, துத்திப்பட்டு, விருப்பாட்சிபுரம், நெல்வாய், பென்னாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களுக்குப் பயணித்து, விவசாயிகள் பயிர் செய்யும் முறைகளைக் கேட்டறிந்தனர், பார்வையிட்டனர்.

வேளாண் கண்காட்சி
வேளாண் கண்காட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர், இயற்கை உரங்களான அமுதக் கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா ஆகியவற்றைத் தயாரிக்கும் முறை, பயன்படுத்தும் முறை, அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விவசாயி களுக்கு விளக்கினர். கிராமங்களில் 120 நாள்கள் தங்கியிருந்த மாணவிகள், இறுதியாக வேளாண் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கண்காட்சியில் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், வீட்டுக்கழிவு உரம் போன்றவற்றைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அத்துடன் தாங்கள் சென்ற விவசாய நிலங்களிலிருந்து சேகரித்த நோய் மற்றும் பூச்சி தாக்கிய இலை மாதிரிகள், மண் வகைகள், காய்கறி நாத்துகள், விதைகளையும் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து மாணவிகளிடம் பேசினோம். ``நாங்கள் 6 பேரும் கணியம்பாடி கிராமத்தில் 120 நாள்கள் தங்கியிருந்ததில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் விவசாய முறையைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். சிங்கிரி, கீழ் அரசம்பட்டு ஆகிய கிராமங்களில் மஞ்சள், வாழை விவசாயம் அதிகம் செய்கிறார்கள். நெல்வாய், பென்னாத்தூர் கிராமங்களில் கத்திரி அதிகம் பயிரிடப்படுகிறது. வல்லம் கிராமத்தில் சம்பங்கி மலர் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்துகிறார்கள்.

விவசாயிகளுடன் உரையாடிய மாணவிகள்
விவசாயிகளுடன் உரையாடிய மாணவிகள்

சிங்கிரி, கீழ் அரசம்பட்டு ஆகிய 2 கிராமங்களிலும் பெரும்பாலும் இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார்கள். மற்ற கிராமங்களில் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகம் காணப்படுகிறது. ரசாயன உரங்கள் மண்ணுக்கு விளைவிக்கும் தீங்கு குறித்து நான்கைந்து கூட்டங்கள் நடத்தி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினோம். ஒவ்வொரு கூட்டத்திலும் 60, 70 விவசாயிகளுக்கு மேல் கலந்துகொண்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமுத கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா ஆகிய இயற்கை உரங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினோம். இந்த 3 வளர்ச்சி ஊக்கிகளும் பசுஞ்சாணம், கோமியம் ஆகிய கலவைகளைக் கொண்டது என்றாலும் பயன்பாட்டிலும், பயனிலும் வித்தியாசம் கொண்டவை என எடுத்துரைத்தோம். பஞ்சகவ்யா மிகச் சிறந்த நன்மை தரக்கூடியது. சில தீமை தரக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும். மண்ணுக்குத் தேவையான நோய் எதிர்ப்புக் காரணிகளை உருவாக்கும். மேலும், சீர்கெட்டுக் கிடக்கும் நிலத்தில் இன்றைக்கே மாற்றத்தைக் காண வேண்டுமெனில், அமுத கரைசலே தீர்வு என்பதையும் எடுத்துச் சொன்னோம்.

தோட்டக்கலை அலுவலருடன் மாணவிகள்
தோட்டக்கலை அலுவலருடன் மாணவிகள்

ஒரு நாள் சாணம், ஒரு நாள் கோமியத்துடன் நாட்டு சர்க்கரையோ, நாட்டு வெல்லமோ, கருப்பட்டியோ கலந்து ஒரே நாளில் நொதிக்கச் செய்யும் பொருள்தான் அமுத கரைசல். சாணம், கோமியம், பயிர் மாவு, நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டியைச் சேர்த்து 3 நாள்கள் நொதிக்கச் செய்து, அதை மண்ணுக்கு இடுவதன் மூலம் நுண்ணுயிரிகளைப் பெருக்க வைக்கலாம். இந்த முறைக்குப் பெயர் ஜீவாமிர்தம். அமிர்தக்கரைசலைவிட கொஞ்சம் அதிகமான அமிலத்தன்மையோடு பயன்படுத்துகிற பொருள்தான் ஜீவாமிர்தம். இதில், பயிருக்குத் தேவையான தாமிரம் சத்து அதிகம் உள்ளது என விவசாயிகளிடம் விளக்கிக் கூறியிருக்கிறோம். அவர்களின் மனங்களிலும் மண்ணிலும் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism