Published:Updated:

வேலூர் டு சென்னை... ஒன்றே முக்கால் மணி நேரம் - சாலை வழியாக ஆம்புலன்ஸில் வந்த இளைஞரின் இதயம்!

பிரத்யேகப் பெட்டியில் இளைஞரின் இதயம்...

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 21 வயது இளைஞரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு, 41 வயதாகும் நபருக்குப் பொறுத்தப்பட்டது.

வேலூர் டு சென்னை... ஒன்றே முக்கால் மணி நேரம் - சாலை வழியாக ஆம்புலன்ஸில் வந்த இளைஞரின் இதயம்!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 21 வயது இளைஞரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு, 41 வயதாகும் நபருக்குப் பொறுத்தப்பட்டது.

Published:Updated:
பிரத்யேகப் பெட்டியில் இளைஞரின் இதயம்...

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள மதனஞ்சேரி குந்தன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, பெயின்ட்டர். இவரின் மனைவி ரோஜி. இந்தத் தம்பதியருக்கு மூன்று மகள்கள். 21 வயதில் தினகரன் என்ற ஒரு மகனும் இருந்தார். தினகரன் கட்டுமானத் தொழில் செய்துவந்தார். ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6 மணியளவில், குடியாத்தம் பகுதியில் வேலை செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் தினகரன். பேரணாம்பட்டு அருகே வந்தபோது, மரத்தின்மீது பைக் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

தினகரன்
தினகரன்

வேலூரிலுள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தினகரன் நேற்று காலை 7:05 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். இந்தத் தகவலை அறிந்த பெற்றோரும், சகோதரிகளும், `ஒரே ஆண் பிள்ளையை இழந்துவிட்டோமே...’ என்று கதறி அழுதனர். இதையடுத்து, தினகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சி.எம்.சி மருத்துவமனையே எடுத்துக்கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதயம் மட்டும், தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையம் மூலம் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 41 வயதாகும் நோயாளிக்குப் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணிக்கு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலிலிருந்து இதயம் பிரித்து எடுக்கப்பட்டு, பிரத்யேகப் பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸை அப்போலோ ஓட்டுநர் தினகரன் ஓட்டினார்.

இதயத்தைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்
இதயத்தைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்

வேலூரிலிருந்து வரும் பகுதிகளான ஆற்காடு, ராணிப்பேட்டை தொடங்கி வானகரம், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு வழியாக சென்னை கிரீம்ஸ் சாலை வரையிலும் போலீஸார் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலனஸ் சிக்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்தனர். ஒன்றே முக்கால் மணி நேரத்தில், அதாவது மாலை 4:45 மணிக்கு அப்போலோ மருத்துவமனையை ஆம்புலனஸ் சென்றடைந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 41 வயதாகும் நபருக்கு, இளைஞரின் இதயம் பொருத்தப்பட்டது. இதயம் கடந்து வந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism