Published:Updated:

`கோவை புறக்கணிக்கப்படுகிறது?' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி

வேலுமணி
வேலுமணி

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கொறாடாவுமான வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மத்திய, மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகளை ரத்து செய்யக் கூடாது, தொகுதிகளில் அரசுப் பணி நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்

மனு
மனு
`சாதிரீதியாகச் செயல்படும் வேலுமணி' - சசிகலாவிடம் குமுறிய கோவை அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகி

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

அதன் பிறகு எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``பொதுமக்களைக் காக்க வைக்காமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். மழைநீரை முறைப்படி சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்களுக்குத் தேவையான திட்டங்களை, தற்போதைய அரசு ரத்து செய்துவருகிறது.

வேலுமணி
வேலுமணி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்துவிட்டு, எந்தப் பதவியிலும் இல்லாத ஆளுங்கட்சிக்காரர்களை உடன் வைத்துக்கொண்டு பூமி பூஜை உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சாதிரீதியாகச் செயல்படும் வேலுமணி' - சசிகலாவிடம் குமுறிய கோவை அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகி

அது போன்ற சம்பவங்களை இதன் பிறகாவது தவிர்க்க வேண்டும். தி.மு.க அரசால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் எங்களுக்கும் மக்களுக்கும் வருகிறது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கோவை
கோவை

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, வாரா வாரம் கூட்டம் நடத்தி பல்வேறு பணிகளை ஆய்வு செய்வாம். அதேபோல, இந்த ஆட்சியிலும் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு