Published:Updated:

`திமுகவை விட பலமா இருக்கோம்... மேயர் தேர்தல்ல பிடிக்கிறோம்!' - எஸ்.பி.வேலுமணி

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற கூட்டம் என்பதால், இதில் பொன்விழா ஆண்டைவிட, தேர்தல் குறித்தே அதிகம் பேசப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரிய வெற்றிபெற, அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ‘ஆளுங்கட்சின்னா எப்படி ஜெயிப்பாங்கன்னு தெரியாதா... திமுக வெற்றி. புறவாசல் வெற்றி’ என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கூறியுள்ளனர். இந்த நிலையில், அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வேலுமணி
வேலுமணி
`சந்தை விலை ரூ.105; வேலுமணி டிரஸ்ட்டுக்கு வெறும் 5 ரூபாய்' கோவை மாநகராட்சியில் அறப்போர் இயக்கம் மனு!

இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற கூட்டம் என்பதால், இதில் பொன்விழா ஆண்டைவிட, தேர்தல் குறித்தே அதிகம் பேசப்பட்டது.

கூட்டத்தில் பேசிய வேலுமணி, ``இந்த தடவை நாம ஜெயிச்சுருந்தா திமுக-வே இல்லை. வெற்றி தோல்வி சகஜம்தான். இதையெல்லாம் மீறி 200-க்கும் மேற்பட்ட யூனியன் கவுன்சில்களை ஜெயிச்சுருக்கோம். நம்ம மாவட்டத்துல (கோவை) முதல் வெற்றி நமக்குத்தான் கிடைச்சுது. 1996-ல இதைவிட மோசமான சூழ்நிலையில இருந்தோம். அப்ப இந்தக் கட்சியே இருக்காதுனு பலரும் சொன்னாங்க. 2006 பென்னாகரம் இடைத்தேர்தல்ல நமக்கு டெபாசிட்டே கிடைக்கலை.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

2011-ல நம்ம கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிச்சுது. திமுக-வால எதிர்க்கட்சியாகூட ஆக முடியலை. 1977 எம்.ஜி.ஆர் வந்தார். 1987 அவர் மறைந்த வரை வந்த எல்லா தேர்தல்லயும் நாமதான் ஜெயிச்சோம். நம்ம கட்சி திமுக-வைவிட பலமா இருக்கு. மக்களுக்கு சேவை செஞ்சா மக்கள் நம்மைக் கைவிட மாட்டாங்க. துணிவோட சந்திச்சா போதும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகம்!

மேயர் போஸ்ட்டை நாமதான் பிடிக்கறோம். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி எல்லாம் ஜெயிக்கறோம். ரெண்டுல ஒண்ணு பார்த்துறலாம். இது நமக்கு ஒரு பாடம். யாருக்கும் பயப்பட மாட்டோம். நாங்க வேலூர்ல வேலை பார்த்தோம். அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல வேலூர் முழுவதும் நாம வெற்றி பெறுவோம். மக்கள் மனநிலை அப்படித்தான் இருக்கு. அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக செய்யுது. அவங்க கொடுத்த வாக்குறுதிகளை செய்யப்போறது இல்லை.

வேலுமணி
வேலுமணி

மக்களை ஏமாத்த டிராமா பண்ணிக்கிட்டு இருக்காங்க. கடந்த 50 வருஷத்துல, 30 வருஷம் நாமதான் ஆட்சியில இருந்துருக்கோம். வெகுண்டெழுந்து வருவோம். நாம அதிக இடத்தைப் பிடிப்போம். இதைவிட மோசமான தோல்விய திமுக சந்திக்கும். அதுதான் வரலாறு” என்றார்.

இடையில் திமுக எத்தனை ஆண்டு ஆட்சியில் இருந்தது என்ற கணக்கைக் குறிப்பிடும்போது வேலுமணிக்குக் குழப்பம் ஏற்பட்டது. ``1977-ல இருந்து எப்ப வரை தலைவர் இருந்தாரு?” என்று மேடையில் இருந்தவர்களிடம் கேட்டார். அதற்கு, 1986, 1987, 1989 என்று மாறுபட்ட பதில்கள் வந்தன.

கூட்டம்
கூட்டம்

ஒருவழியாக, ``13 வருஷம் திமுக ஆட்சியில இல்லாம இருந்தாங்க. ஆகவே... இதைப் பத்தி நாம கவலைப்பட வேண்டாம்” என்றார் வேலுமணி.

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேசும்போது, ``கடந்த ஆட்சி நினைவில் முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் கேட்டு...’ என்று ஏதோ சொல்லவர, வேலுமணி, ``முன்னாள்னு சேர்த்துச் சொல்லுங்க” என்றார். சற்று ஆவேசமாகப் பேசிய ஜெயராமன், ``அதிமுக வலுவா இருந்த இடத்துலகூட திமுக ஜெயிச்சுருக்கு. கொரோனாவால மக்கள் வேலை வெட்டி இல்லாம கஷ்டப்படறாங்க.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

இது தீபாவளி நேரம். மக்களுக்குக் காசு தேவை. ஓட்டுக்கு 2,000 ரூபா வரை திமுக கொடுத்துருக்காங்க. ஒரு வீட்டுக்கு 10,000 ரூபா வரை போயிருக்கு. அதனால மக்கள் வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாம திமுக-வுக்கு ஓட்டுப் போட்டுட்டாங்க” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு