Published:Updated:

மாணவிகளுக்கான சிறப்புப் பேருந்தை வழிமறித்த கல்லூரி இளைஞர்கள்... வைரலான வீடியோ - என்ன நடந்தது?

வீடியோ காட்சிகள்

மாணவிகள் செல்லும் அந்த அரசுப் பேருந்தை, வடவானூர் பகுதியில் கல்லூரி இளைஞர்கள் சிலர் வழிமறித்து ஏறுவதற்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

மாணவிகளுக்கான சிறப்புப் பேருந்தை வழிமறித்த கல்லூரி இளைஞர்கள்... வைரலான வீடியோ - என்ன நடந்தது?

மாணவிகள் செல்லும் அந்த அரசுப் பேருந்தை, வடவானூர் பகுதியில் கல்லூரி இளைஞர்கள் சிலர் வழிமறித்து ஏறுவதற்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
வீடியோ காட்சிகள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள அய்யந்தோப்பு பகுதியில் இயங்கிவருகிறது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இருபாலர் மாணவர்கள் பயிலும் இந்தக் கல்லூரியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்தக் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்காக செஞ்சி பணிமனையிலிருந்து சிறப்பு அரசுப் பேருந்துகள் கல்லூரி நாள்களில் இயக்கப்படுகின்றன. அதில், மாணவிகள், பெண்கள் செல்லும் வகையில் ஓர் அரசுப் பேருந்தும் தனியாக இயக்கப்பட்டுவருகிறது. இந்தப் பேருந்தில் மட்டும், பெரும்பாலும் கல்லூரி மாணவிகளே பயணிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

திண்டிவனம்
திண்டிவனம்

இந்நிலையில், மாணவிகள் செல்லும் அந்த அரசுப் பேருந்தை, வடவானூர் பகுதியில் கல்லூரி இளைஞர்கள் சிலர் வழிமறித்து ஏறுவதற்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ``இது பெண்கள் மட்டும் செல்வதற்காக இயக்கப்பட்டும் பேருந்து. இதில் ஏறக் கூடாது" என்று பேருந்து ஊழியர் கூற, மாணவர் ஒருவரோ... "அந்த பஸ்ஸு கூட்டமாக இருக்கிறதால, இதுல வரேன். ரெண்டு பஸ்ஸை விடச் சொல்லுங்க... போன் பண்ணிக் கேட்டாச்சு, ஒரு பஸ்ஸுதான் இன்னிக்கி வருது. நான் எத்தனை வாட்டி இந்த பஸ்ல போயிருக்கேன் தெரியுமா... வீடியோ எடுத்து இப்ப என்ன பண்ணப் போறே..." என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வீடியோ குறித்து, செஞ்சி பணிமனையைச் சேர்ந்த சில அதிகாரிகளிடம் கேட்டோம். "இந்தச் சம்பவம் சுமார் 10 நாள்களுக்கு முன்பாக நடந்துள்ளது. தற்போதுதான் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, பேசுபொருளாகியுள்ளது. திண்டிவனம் அரசுக் கல்லூரிக்கு... செஞ்சி பகுதியிலிருந்து அதிக மாணவர்கள் செல்வதால், கல்லூரி நாள்களில் தினமும் மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அப்போது கூட்டம் அதிகமாக இருந்தால், கூடுதலாக ஒரு பேருந்தும் இயக்கப்படும். காலை 8:00, 8:15-க்கு இரு பொது அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 8:10 மணிக்கு, பெண்கள் செல்வதற்காக ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.

அரசுப் பேருந்து - மாதிரி படம்
அரசுப் பேருந்து - மாதிரி படம்

இந்தப் பேருந்து, வடவானூர் எனும் பகுதியை கடந்து செல்லும்போது, மாணவர்கள் சிலர் பைக் மூலம் பேருந்தை முந்தி வந்து வழிமறித்து ஏறுவதற்கு முற்பட்டுள்ளனர். இதை தொடர்ச்சியாகவே செய்துவந்துள்ளனர். பெண்களுக்காக இயக்கப்படும் பேருந்து என்பதால், பேருந்து ஓட்டுநர் ஒரு நாள் இது பற்றிக் கேட்டிருக்கிறார். அந்த வீடியோதான் தற்போது வெளியாகியிருக்கிறது. மாணவர்கள் என்பதால், இது குறித்த புகார் எதுவும் காவல்துறையிடம் தரப்படவில்லை" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism