Published:Updated:

கொரோனா தொற்று பகுதியில் கிருமிநாசினி; நகராட்சிக்கு இயந்திரங்கள்! -மக்கள் இயக்க நிர்வாகிக்கு பாராட்டு

கிருமி நாசினி தெளிக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
கிருமி நாசினி தெளிக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ( ம.அரவிந்த் )

ஆதி.ராஜாராம் நகராட்சி ஆணையரிடம் முறையாக அனுமதி பெற்று மூன்று புதிய கிருமி நாசினி தெளிப்பதற்கான ஸ்பிரேயர் கருவிகள் மற்றும் அதற்குறிய கிருமி நாசினி மருந்து ஆகியவற்றை வாங்கி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்காக வாங்கினார்.

பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அப்பகுதி முழுவதும் தானே கிருமி நாசினி தெளிப்பதற்கான ஸ்பிரேயர் மிஷினை மாட்டி கொண்டு கிருமி நாசினி தெளித்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஸ்பிரேயர் மிஷின் வழங்கும் ஆதி.ராஜாராம்
ஸ்பிரேயர் மிஷின் வழங்கும் ஆதி.ராஜாராம்

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆதி.ராஜாராம் இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் பட்டுக்கோட்டை நகரத் தலைவராக உள்ளார். தொடச்சியாக சமூக செயல்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து அதனை தடுக்கும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய கபசுரக் குடி நீர் நகரத்தின் பல்வேறு இடங்களில் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதிகளில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தெளிக்க வேண்டிய கிருமி நாசினி தெளிக்கப் படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நகராட்சியில் கிருமி நாசினி தெளிப்பதற்கான ஸ்பிரேயர் மிஷின் தட்டுப்பாடே தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு தாமதம் ஏற்படுவதாக சொல்லப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியில்
கொரோனா தடுப்பு பணியில்

இதனை அறிந்த ஆதி.ராஜாராம் நகராட்சி ஆணையரிடம் முறையாக அனுமதி பெற்று மூன்று புதிய கிருமி நாசினி தெளிப்பதற்கான ஸ்பிரேயர் கருவிகள் மற்றும் அதற்குறிய கிருமி நாசினி மருந்து ஆகியவற்றை வாங்கி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்காக வாங்கினார். முன்னதாக தானே மருந்து தெளிக்கும் கருவியை முதுகில் மாட்டி கொண்டு 17வது வார்டு முழுவதிலும், சாக்கடை ஓடுகின்ற பகுதியிலும் கிருமி நாசினியை தெளித்தார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆதி.ராஜாராமை பாராட்டினர். பின்னர் கிருமி நாசினி தெளிப்பதற்கான மூன்று ஸ்பிரேயர் மிஷின்களை நகராட்சி ஆணையரான சென்னு கிருஷ்ணனிடம் வழங்கினார். பின்னர் ``கொரோனா தொற்று பரவுகிற இந்த துயரமான சூழலாக இருந்தாலும் மக்கள் பணி செய்வதற்காக விஜய் மக்கள் இயக்கத்தினர் காத்திருக்கிறோம். என்ன உதவி தேவைப்பட்டாலும் எங்களிடம் கேளுங்க செய்து தருகிறோம்” என ஆதி.ராஜாராம் ஆணையரிடம் கூற அதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

 நகராட்சியிடம் வழங்கிய ஸ்பிரேயர் மிஷின்
நகராட்சியிடம் வழங்கிய ஸ்பிரேயர் மிஷின்

இது குறித்து ஆதி.ராஜாராமிடம் பேசினோம், ``கடந்த வருடம் கொரோனா பரவியையடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சி பகுதி முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நாங்க எங்க சொந்த செலவில் ஸ்பிரேயர் மிஷின் வாங்கி கிருமி நாசினி தெளித்தோம். அதே போல் தற்போதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த பகுதியில் நான் தெளித்தேன்.

மேலும் 33 வார்டுகளை கொண்ட நகராட்சியில் மூன்று மையங்களாக பிரித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக கிருமி நாசினி தெளிப்பதற்கான மூன்று ஸ்பிரேயர் மிஷின் மற்றும் அதற்குறிய மருந்து ஆகியவற்றை எனது சொந்த செலவில் வாங்கி கொடுத்தேன். மக்களுக்கு தேவையானதை களத்திலிருந்து செய்ய வேண்டும் என்பது தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் ஆகியோரின் எண்ணம். அவர்களின் விருப்படி இக்கட்டான தருணங்கள் மட்டுமில்லாமல் எப்போதும் தொடர்ந்து மக்களுக்கான செயல்பட்டு வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு