Published:Updated:

`ஊரடங்கால் கேள்விக்குறியான உணவு’ - தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய விகடன்

வேலை இழந்து தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய விகடன்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து எளிய மக்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை விகடன் குழுமம் வாசகர்களின் பங்களிப்போடு செய்து வருகிறது.

`ஊரடங்கால் கேள்விக்குறியான உணவு’ - தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய விகடன்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து எளிய மக்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை விகடன் குழுமம் வாசகர்களின் பங்களிப்போடு செய்து வருகிறது.

Published:Updated:
வேலை இழந்து தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய விகடன்

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிப் போராடி வருகிறது. நோயோடு சேர்த்து எளிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக நிற்கிறது. கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 4-ஆம் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஊரடங்கால் நாடோடிகள், பழங்குடிகள், மாற்றுத்திறனாளிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்ட சாமான்ய மக்களின் வாழ்க்கை இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விகடன்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விகடன்

பெரும்பாலான நாடோடிகள், பழங்குடிகள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் கிடையாது. அதனால் இந்தப் பேரிடர் காலத்தில் அரசு அறிவிக்கும் திட்டங்களும், உதவிகளும் அவர்களில் பெரும்பாலானோருக்குச் சென்றடைவதில்லை. அன்றாட உணவுக்கே அல்லல்படுகிறார்கள். பலர் உணவின்றித் தவிப்பதால் சொந்த ஊருக்கே நடந்து செல்லும் காட்சிகளை நாம் சமூக வலைதளங்களில் காண்கிறோம்.

தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் மக்கள் பேரிடர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வாசகர்கள் பங்களிப்போடு விகடன் களத்தில் இறங்கி மக்களின் துயர் துடைத்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணச் சூழலிலும் வாசகர்களின் கரம்பற்றி எளியவர்களின் பக்கம் நிற்கிறது விகடன். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து எளிய மக்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை விகடன் குழுமம் வாசகர்களின் பங்களிப்போடு செய்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த வகையில்,சென்னை அம்பத்தூரை அடுத்த நொளம்பூர் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் வேலைகளை இழந்து நெருக்கடியில் தவிப்பதாக தகவல் கிடைத்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விகடன்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விகடன்

நொளம்பூர் பகுதி மசூதிக்கு அருகில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த 20 வருடகாலமாக வசித்து வருகின்றனர். அவர்கள் யாருக்கும் ரேஷன் கார்டுகள் கிடையாது. அன்றாடம் கூலி வேலைகளுக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். நேபாளம் மற்றும் ஆந்திராவிலிருந்து வந்து தங்கியிருக்கும் அவர்கள் சென்னையின் நகர்ப்புறங்களில் கட்டட வேலைகள் செய்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் ஊரடங்கால் வேலைகளை இழந்து தகரக் கொட்டகையில் அனலுடன் தங்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு பரிதாபகரமான சூழலில் இருக்கிறார்கள்.

அந்தப் பகுதியில் சுமார் 400 தகரக் கொட்டகைகளில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில கூலித் தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். எஞ்சிய 130 தொழிலாளர் குடும்பங்கள் அந்த இடத்திலேயே இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலைக்குச் சென்றால்தான் வருமானம் என்ற நிலையில், தற்போது அந்த மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதே சிரமம். குழந்தைகளுடன் பசியால் வாடிய 130 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு விகடன் குழுமம் வாசகர் பங்களிப்போடு 1,95,000 ரூபாய் செலவில் 2 மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.

சென்னை 91-வது வட்ட முன்னாள் மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் இந்த நிவாரணப் பணியை விகடன் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒருங்கிணைத்து உதவினார்.

தொழிலாளர்களுக்கு உதவிய விகடன்
தொழிலாளர்களுக்கு உதவிய விகடன்

ஊரடங்கின் முதலாம் கட்டத்தில் தொடங்கிய விகடனின் இந்த அறப்பணி தற்போது நான்காம் கட்டத்திலும் வாசகர்களின் துணையோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை அடையாளம் கண்டு உதவும் விகடனின் இந்த அறப்பணி மேலும் தொடரும். விகடனுடன் இணைந்து வாசகர்களாகிய நீங்களும் எளியவர்களுக்கு உதவ வகை செய்யப்பட்டுள்ளது.

பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.

நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.

நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிகத் தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.

வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - ஆசிரியர்

குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்தப் பணிகள் பல உண்டு. அவற்றில், `நிலம் நீர் நீதி’ மற்றும் `கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism