அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

ஏழைகளுக்கு 2000 ரூபாய் நிதியுதவி... திட்டத்தை கைவிட்டதா தமிழக அரசு?

விகடன் லென்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் லென்ஸ்

விகடன் லென்ஸ்

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத்துக்கு மாதம் தோறும் 6,000 ரூபாய் என, நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை பொய் மூட்டைகளாக அவிழ்த்துவிட்டு தி.மு.க வெற்றிபெற்றது. குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல் மக்களை ஏமாற்றி விட்டார் ஸ்டாலின்’’ - வேலூர் எம்.பி தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது இப்படிச் சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதே எடப்பாடி பழனிசாமி ஏழைத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் என்ன செய்தார் எனப் பார்ப்போம்!

சட்டப்பேரவை 110-விதியின்கீழ் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றுதான், ஏழைத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டம். “வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்” என நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு (பிப்ரவரி 12-ம் தேதி) சட்டமன்றத்தில் அறிவித்தார் எடப்பாடி. ‘‘கஜா புயல் மற்றும் பருவமழைப் பொய்த்ததால் பாதிக்கப்பட்ட ஏழைகளைக் கருத்தில்கொண்டு 2,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்று இந்தத் திட்டத்துக்கு நியாயம் கற்பித்தார் எடப்பாடி.

விகடன் லென்ஸ்
விகடன் லென்ஸ்

பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டால் நிதியமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதால், அதில் அறிவிக்காமல் 110 விதியின்கீழ் எடப்பாடி அறிவித்ததாக அப்போதே அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ‘‘நாடாளு மன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது’’ என்று சட்டமன்றத்தில் தி.மு.க சொன்னபோது, அதை மறுத்த எடப்பாடி, ‘‘பிப்ரவரி இறுதிக்குள் தகுதியான பயனாளிகளின் வங்கிக்கணக்கில் 2,000 ரூபாய் செலுத்தப் படும்’’ என்று சொன்னார். ஆனால், ஒன்பது மாதங்கள் கடந்தும் பணம் வரவில்லை.

பிப்ரவரி மாதம் அறிவிக்கப் பட்ட இந்தத் திட்டத்துக்கு எதிராக, `நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் சூழலில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கிறது’ என்று சொல்லி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சட்டப்பஞ்சாயத்து இயக்கம். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் விவரம் அரசிடம் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், அந்த விவரங்களைச் சேகரிக்கும் வகையில் படிவங்களை விநியோகித்தது அ.தி.மு.க அரசு. அப்போதுதான் வாக்குகள் கிடைக்கும் என்பது அ.தி.மு.க-வின் திட்டம்.

ஏழைகளுக்கு 2000 ரூபாய் நிதியுதவி... திட்டத்தை கைவிட்டதா
தமிழக அரசு?

2,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை, 2019, மார்ச் 4-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார் எடப்பாடி. மனிஷா என்கிற திருநங்கை உள்பட 32 பேரின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவிக்கான சான்றிதழ்களை வழங்கினார். இதன்மூலம் பணம் வந்து சேரும் என்பதை மக்களிடையே பறைசாற்றினர். நாடாளுமன்றத் தேர்தல் தேதியை 2019, மார்ச் 10-ம் தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன். ‘‘தி.மு.க. புகாரால் பணம் வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் 2,000 ரூபாய் வழங்கப்படும்’’ என தேர்தல் பிரசாரத்தில் சொன்னார் எடப்பாடி.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தும் ஆறு மாதங் களாகிவிட்டன. 2,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைத்தது எனத் தெரியவில்லை. இப்போது உள்ளாட்சித் தேர்தலுக்காக பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் எடப்பாடி. தேர்தல் வரும்போதெல்லாம் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, அரசின் கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து ஆளுங்கட்சி கொடுக்கிற அவலம் தொடர்கிறது. அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இப்போது நடக்கப்போகிற உள்ளாட்சித் தேர்தலின்போதும், அரசின் பணத்தை விரயமாக்கி யிருக்கிறது.

2,000 ரூபாய் திட்டத்துக்கு விழாவெல் லாம் நடத்தி விளம்பரமெல்லாம் செய்தார்கள். அந்த விழாவுக்குச் செலவழிக்கப்பட்ட தொகை பற்றிய ஆவணங்கள் விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தன. 2,000 ரூபாய் வழங்கும் திட்ட விழாவுக்கு தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்ட தற்குக் கட்டணமாக 1 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 390 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையைப் பிரித்துக் கொடுத்திருந் தாலே 5,623 பேருக்கு தலா 2,000 ரூபாய் வழங்கியிருக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுகளை அறுவடை செய்வதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டு அரசு பணத்தை விரயமாக்கி யிருக்கிறது.

ஏழைகளுக்கு 2000 ரூபாய் நிதியுதவி... திட்டத்தை கைவிட்டதா
தமிழக அரசு?

‘‘குழந்தைகளுக்கு கவர்ச்சிகரமான கவரில் சுற்றி மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல், மக்களை ஏமாற்றி ஸ்டாலின் வெற்றி பெற்றுவிட்டார்’’ என்று எடப்பாடி சொன்னது அவருக்கும் பொருந்தும்.

‘விரைவில் வழங்கப்படுமாம்!’

இது தொடர்பாக அரசு வட்டாரத்தில் விளக்கம் கேட்டபோது, ``வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிடும் பணி முடிவடைந்திருக்கிறது. இதை அந்தந்தக் கிராமசபைக் கூட்டங்களில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என, தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அந்தப் பணி இப்போது மேற்கொள்ளப் படவில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் வழங்கப்படும்’’ என்றார்கள் அதிகாரிகள்.