Published:Updated:

விகடன் செய்தி எதிரொலி: திருவாரூர் மேல்கொண்டாழி பள்ளிக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கிய எம்.பி!

பள்ளி

மேல்கொண்டாழி தொடக்கப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் இருபது லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விகடன் செய்தி எதிரொலி: திருவாரூர் மேல்கொண்டாழி பள்ளிக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கிய எம்.பி!

மேல்கொண்டாழி தொடக்கப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் இருபது லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
பள்ளி

திருவாரூர் மாவட்டம், மேல்கொண்டாழி என்னும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்திருக்கிறது. 2018-ல் வீசிய கஜா புயலில் இப்பள்ளியின் கட்டடம் முழுமையாக சேதமடைந்ததால், பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டு, அருகிலிருந்த ஆலமரத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற்றுவந்தன.

அந்தப் பள்ளிக்கூடத்துக்குக் கட்டட வசதி என்பதே இல்லாமல் அருகிலுள்ள கோயிலில் பக்தர்கள் உடை மாற்றும் கொட்டகையில்தான் பள்ளிக்கூடம் செயல்பட்டுவந்தது. அந்தப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவந்தனர்.

விகடன் செய்தி எதிரொலி: திருவாரூர் மேல்கொண்டாழி பள்ளிக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கிய எம்.பி!

அந்த மாணவர்களுக்குச் சரியான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாமலும், மாணவர்கள் அருகில் இருக்கும் கருவேலங்காடுகளையே கழிப்பறையாகப் பயன்படுத்தக்கூடிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். மாணவர்களின் இந்தப் பிரச்னை குறித்து இரண்டு நாள்களுக்கு முன்பு விகடன் இணையதளப் பக்கத்தில் `திருவாரூர் கஜாவால் சேதமான அரசு பள்ளிக் கட்டடம்... வகுப்பறையான கோயில் கொட்டகை... விடிவுகாலம் எப்போது?’ என்னும் தலைப்பில் செய்தி வெளியானது.

விகடன் செய்தி எதிரொலி: திருவாரூர் மேல்கொண்டாழி பள்ளிக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கிய எம்.பி!

செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்துக்குச் சென்றது. பிறகு திருவாரூர் மாவட்டக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

தற்போது மேல்கொண்டாழி தொடக்கப்பள்ளிக்குக் கட்டடம் கட்டுவதற்கு நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் இருபது லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விகடன் வெளியிட்ட இந்தச் செய்தியின் மூலம் மேல்கொண்டாழி கிராம மக்களின் நீண்டநாள் போராட்டத்துக்கு ஒரு தீர்வு கிடைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்துப் பேசும் மேல்கொண்டாழி கிராம மக்கள், ``எங்க ஊரு பள்ளிக்கூடத்துக்குப் பல வருஷமா கட்டடமும் கழிப்பறையும் இல்லாம இருந்துச்சு. இந்தப் பிரச்னை பத்தி நாங்களும் முதல்வரிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் வரைக்கும் எல்லாருக்கும் மனு போட்டு பார்த்துட்டோம். போராட்டமும் பண்ணிப் பார்த்தோம். ஆனா, எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கலை. ரெண்டு நாளைக்கு முன்னாடி விகடன்ல, எங்க மேல்கொண்டாழி பள்ளிக்கூடம் பத்தியும், எங்க பிள்ளைகள் படக்கூடிய பிரச்னைகள் பத்தியும் விரிவா எழுதி, செய்தியா வெளியிட்டிருந்தாங்க.

இப்போ எங்க தொகுதி எம்.பி அவங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இருபது லட்சத்தை எங்க ஊரு பள்ளிக்கூடம் கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கியிருக்காங்க. இப்போ எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. விகடன் வெளியிட்ட செய்தியால தான் எங்க நீண்டநாள் பிரச்னைக்கு இப்போ ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. உடனடியா அரசாங்கம் இந்தப் பள்ளிக்குக் கட்டடம் கட்டும் வேலையைத் தொடங்கணும். அதுவரைக்கும் எங்க பிள்ளைகளுக்கு படிக்க தற்காலிகமா ஒரு கட்டடத்தை அமைத்து தரணும்.

விகடன் செய்தி எதிரொலி: திருவாரூர் மேல்கொண்டாழி பள்ளிக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கிய எம்.பி!

மேலும், எம்.பி ஒதுக்கி இருக்குற இந்த நிதி, பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு மட்டும்தான் போதுமானதாக இருக்கும். கழிவறை கட்டுவதற்கும் மேலும், சில பள்ளிக்கூட உபகரணங்கள் வாங்குறதுக்கும் அரசாங்கம் இன்னும் கொஞ்சம் நிதியை ஒதுக்கணும்னு நாங்க கேட்டுக்குறோம்.

எங்க ஊர் மாதிரியே தமிழ்நாட்டுல நிறைய பள்ளிக்கூடங்கள் சரியான வசதிகள் இல்லாம இயங்கிட்டு இருக்கு. அதை உடனடியா தமிழக அரசாங்கம் சரிசெய்யணும்னு கேட்டுக்கிறோம்” என்றனர்.