Published:Updated:

`ஜூ.வி ஆக்‌ஷன் செல்’: செய்தி எதிரொலி... குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தொடக்கம்!

ஆகாயத்தாமரை அகற்றும் பணி
News
ஆகாயத்தாமரை அகற்றும் பணி

போரூர் அருகேயுள்ள குளம் ஆகாயத்தாமரை படர்ந்து, உபயோகமின்றி இருப்பதாக விகடன் டாட் காமில் செய்தி வெளியிட்டோம். அதன் எதிரொலியாக அவற்றை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கியிருக்கிறது.

`044 - 66802929' என்ற `ஜூ.வி ஆக்‌ஷன் செல்’-எண்ணில் வாசகர்கள், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் மக்கள் பிரச்னைகள் பற்றிப் பேசலாம் எனக் குறிப்பிட்டுவருகிறோம். அதில் பலரும் பலவிதமான கருத்துகளையும் புகார்களையும் தெரிவிக்கிறார்கள். அப்படியொரு தேவையான தகவல் ஒன்றை போரூர், மௌலிவாக்கத்திலிருந்து பேசிய நாராயணன் குறிப்பிட்டார். அவரைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கேட்டோம்.

சென்ற வாரம் ஆகாயத்தாமரையுடன் எடுக்கப்பட்ட படம்
சென்ற வாரம் ஆகாயத்தாமரையுடன் எடுக்கப்பட்ட படம்
நரேஷ்

”மௌலிவாக்கம் பகுதியில், மதனந்தபுரம் அருகே ஒத்தவாடைத் தெருக் கடைசியில், கொலப்பாக்கம் செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. ஆகாயத்தாமரை படர்ந்து, சுற்றுச்சுவர் இடிந்து காட்சியளிக்கிறது. பூங்காக்களை நல்ல முறையில் பராமரிக்கும் சென்னை மாநகராட்சி, இந்தக் குளத்திலுள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, தூர்வாரி, சுற்றுச்சுவரும், வாக்கிங் செல்வதற்கு நடைபாதையும் அமைத்துக்கொடுத்தால் நன்றாக இருக்கும். பலமுறை மாநகராட்சியிடம் இதைக் கூறியும் நடவடிக்கை இல்லாததால், விகடன் மூலம் தெரிவிக்கிறேன்” என்று நம்மிடம் சொல்லியிருந்தார் நாராயணன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆகாயத்தாமரையை எந்திரம் மூலம் அகற்றும் பணி தொடக்கம்
ஆகாயத்தாமரையை எந்திரம் மூலம் அகற்றும் பணி தொடக்கம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதையடுத்து களத்தில் இறங்கிய நாம், குளத்தை நேரில் சென்று புகைப்படங்கள் எடுத்ததுடன், மௌலிவாக்கம் அமைந்திருக்கும் ஆலந்தூர் மண்டலம் 12-ன் மண்டல அதிகாரி சீனிவாசனிடமும் கருத்து கேட்டு செய்தி வெளியிட்டோம். ’மூன்று நாள்களில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தொடங்கும்’ என சீனிவாசனும் கூறியிருந்தார்.

ஆகாயத்தாமரையை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்
ஆகாயத்தாமரையை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

சொன்னபடி மூன்று நாள்களில் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. நம்மிடம் இந்த விஷயத்தைக் கூறிய அதே நாராயணன்தான் இந்த விஷயத்தையும் நமக்குத் தெரிவித்தார். நாம் சொன்ன புகாரைக் கேட்டுக்கொண்டு, உடனடி ஆக்‌ஷனில் இறங்கிய மண்டல அதிகாரி சீனிவாசனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கால் செய்தோம். ``எங்கள் பணியைச் செய்வதற்கு எதற்கு நன்றி? ஆகாயத் தாமரையை அகற்றும் பணியை நேற்றே (டிசம்பர் 8) தொடங்கி, மேனுவலாக ஆட்களை வைத்து அகற்றினோம். அது செட்டாகாததால், இன்று எந்திரத்தைக் குளத்தில் இறக்கி அதைக்கொண்டு ஆகாயத்தாமரையை அகற்றிவருகிறோம். இன்னும் இரண்டு நாள்களில் மொத்த தாமரையையும் அகற்றிவிடுவோம். கூடுதலாக ஒரு நாள் தாமரையைத் தண்ணீர் காய்வதற்காக கரையில் வைத்துவிட்டு, பின்னர் அப்புறப்படுத்திவிடுவோம்.

அகற்றப்பட்ட ஆகாயத்தாமரை கரையில் வைக்கப்பட்டுள்ளது
அகற்றப்பட்ட ஆகாயத்தாமரை கரையில் வைக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகாயத்தாமரையின் வளர்ச்சி என்பது மிக வேகமானது. குறுகியகாலத்தில் மீண்டும் குளத்தில் ஆகாயத்தாமரை வளரும் என்பதால், இந்தப் பணி தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். மற்றபடி, இடிந்த சுற்றுச்சுவரைக் கட்டுவதற்கும், நடைபாதை உள்ளிட்ட ஏனைய பணிகள் மேற்கொள்வதற்கும் எஸ்டிமேட் தயார்செய்துவிட்டோம். இருந்தபோதும், அரசு அறிவித்திருக்கும் `நமக்கு நாமே’ திட்டம் மூலம் நிதி கிடைக்குமா எனப் பார்க்கிறோம். பொதுமக்கள், என்.ஜி.ஓ., தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் `நமக்கு நாமே’ திட்டத்துக்காக நிதி கொடுக்கலாம். 20 முதல் 50 சதவிகித நிதி செலுத்தினால், பணத்தை மாநகராட்சிப் பெற்றுக்கொண்டு, ஒப்பந்ததாரர்களை நியமித்து, பணிகளை முடிப்பது வரை மாநகராட்சியே கவனித்துக்கொள்ளும். அதுவே, 80 முதல் 100 சதவிகித நிதி கொடுத்தால், கொடுப்பவரே ஒப்பந்ததாரை ஃபிக்ஸ் செய்து பணியை மேற்கொள்ளலாம். `நமக்கு நாமே’ திட்டத்தில் நிதி கிடைக்காவிட்டாலும், மாநகராட்சியின் சொந்த நிதியைக்கொண்டு பணிகளை விரைவில் தொடங்கிவிடுவோம்” என்றார் உறுதியாக.

துரிதமாக நடக்கும் பணிகள்
துரிதமாக நடக்கும் பணிகள்

நம்மிடம் பேசிய புகாரளித்த நாராயணன், ``இங்குள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் முன்பு அதிகாரிகளிடம் பலமுறை பேசியிருக்கிறோம். அப்போதெல்லாம், `குளம் நடுவில் இருக்கும், சுற்றி நடைபாதையும் சுற்றுச் சுவரும் அமைத்து, குளத்தில் போட்டிங் விடுவது பற்றியும் பேசிவருகிறோம்’ என்றெல்லாம் சொல்லிவந்தனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை, ஆகாயத்தாமரை படர்ந்து வீணானதுதான் மிச்சம். உங்களிடம் சொல்லி, நீங்கள் அதிகாரியிடம் பேசிய பின்னர்தான் முதற்கட்டமாக ஆகாயத்தாமரையை அகற்றும் வேலை நடக்கிறது. அடுத்தடுத்து மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். விகடனைத் தொடர்புகொண்டால் தீர்வு நிச்சயம் என்பதை இந்த விவகாரம் நிரூபித்துவிட்டது. மிக்க நன்றி!” என்று முடித்தார்.