தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) மூலம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சி இந்த ஆண்டு கொரோனா சூழல் காரணமாகத் தள்ளிப்போய் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தொடர்ச்சியாக 19 நாள்கள் புத்தககத் திருவிழா நடைபெறுகிறது. மார்ச் 6-ம் தேதியோடு இத்திருவிழா முடிவடையவிருக்கிறது.
நமது விகடன் சார்பில்,
அரங்கு எண் F-11 விகடன் பிரசுரம்,
F-20 ஆனந்த விகடன்,
430 விகடன்.காம் ஆகியவற்றில் விகடன் பிரசுர நூல்கள் விற்பனை மற்றும் விகடன் குழும இதழ் சந்தாக்களுக்கான சேமிப்புத் திருவிழா ஆகியவை நடைபெற்று வருகிறது.
விகடன் அரங்குகளுக்கு வந்த வாசகர்கள் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் சில...
ஈஸ்வரி, சென்னை.
``எனக்கு மூணு பொண்ணு இருக்காங்க. அவங்கதான் என்னை புத்தகக் காட்சிக்குக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. விகடன் பிரசுர ஸ்டாலில் பார்த்த நிறைய புத்தகங்களை வாங்கணும்ங்குற ஆவல் வந்திருக்கு. குறிப்பா, பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்க ரொம்ப ஆவலா இருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆரோக்கியமான உணவு பத்தியும், உடல் நலம் பத்தியும் வெளியாகியிருக்கிற புத்தகங்கள் மீதும், மாடித்தோட்டம் அமைப்பது எப்படிங்குறது குறித்த புத்தகங்களும் வாங்கிப் படிக்கலாம்னு இருக்கேன். நானும் மாடித்தோட்டம் அமைக்கலாம்ங்கிற யோசனையில இருக்கேன். அதுக்கு இந்தப் புத்தகங்கள் உதவியா இருக்கும்.''
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுத்தழகு, சென்னை
``நான் விகடனோட 25 ஆண்டுக்கால வாசகன். விகடன் இதழ்களா இருந்தாலும் சரி, பிரசுர புத்தகங்களாக இருந்தாலும் சரி அதோட உள்ளடக்கமும் தயாரிப்பும் மிகத்தரமானதா இருக்கும். சுஜாதா எழுதின தலைமைச் செயலகம், மதன் எழுதின வந்தார்கள் வென்றார்கள், மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் உள்ளிட்ட புத்தகங்களை அது தொடரா இதழில் வந்தப்பவே படிச்சு சேகரிச்சு வெச்சிருக்கேன்.
உடல் நலம் பத்தியும் ஆரோக்கியமான வாழ்வியல் பத்தியும் கு.சிவராமன் எழுதின தொடர்களும் எனக்குப் பிடிக்கும். கு.சிவராமனுடைய புத்தகங்கள் எல்லாத்தையும் ஏற்கெனவே வாங்கிப் படித்து சேகரிச்சு வெச்சிருக்கேன். அது மட்டுமல்லாம என் நண்பர்களுக்கும் அவரோட புத்தகங்களை பரிசாகவும் கொடுத்துட்டு வர்றேன். இப்ப நான் வாங்கியிருக்கிற புத்தகங்கள் கூட நண்பர்களுக்கு பரிசா கொடுக்குறதுக்காகத்தான்.''
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சுமித்ரா, சென்னை
``நான் ஆனந்த விகடனோட வாசகி. அந்த இதழில் வெளியாகும் தொடர்கள் எனக்குப் பிடிக்கும். அதோட தொகுப்பா நூல் வடிவுல வாங்கிப் படிக்க இன்னும் நல்லாருக்கும்ங்குறதாலேயே விகடன் பிரசுர ஸ்டாலுக்கு வந்தேன். இப்போ, சுஜாதா எழுதின `தலைமைச் செயலகம்’, `டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும்’, `மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’, `சிவமகுடம்’ உள்ளிட்ட புத்தகங்களை வாங்கியிருக்கேன்.

விகடன் பிரசுர நூல்கள் எல்லாமே தரமான உருவாக்கத்துல வெளியிடப்பட்டிருக்கு. அது மட்டுமல்லாம கலெக்ஷன்ஸ் எல்லாமே இங்க நல்லாருக்கு. எல்லாத் துறை சார்ந்த புத்தகங்களும் இங்கு கிடைக்கும்ங்குறதால எப்ப புத்தகக் கண்காட்சி வந்தாலும் விகடன் பிரசுரத்துக்கு அவசியம் வந்துடுவேன்.''
அன்புமலர், சென்னை
``மருத்துவர் கு.சிவராமன் எழுதிய கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும். எளிமையான தமிழில் மக்களுக்குப் புரியும்படியா அத்தியாவசிய தகவல்களை அவர் கொடுத்துட்டு வர்றார். நான், பசுமை விகடன், சக்தி விகடன் ஆகிய இதழ்களோட சந்தாதாரர். பசுமை விகடன் மூலமாத்தான் நம்மாழ்வார் எனக்கு அறிமுகமானார்.
இயற்கை விவசாயம் பத்தின தெளிவு நம்மாழ்வார் மூலம்தான் எனக்குக் கிடைச்சது. பசுமை விகடனில் வெளியான மாடித்தோட்டம் அமைக்குறது பத்தின கட்டுரைகளைப் படிச்சு நானும் மயிலாப்பூர்ல என்னோட வீட்டு மாடியில 120 வகையான செடிகளை வளர்த்துகிட்டு வர்றேன். பசுமை விகடன் இதழ்தான் இதுக்கு எனக்கு வழிகாட்டியா இருந்தது. சக்தி விகடன்ல வெளியாகுற ஆன்மிகக் கட்டுரைகளும் நான் விரும்பிப் படிப்பேன். விகடன் குழுமத்தோட சந்தாதாரராக இருக்கிறதுல எனக்குப் பெரிய மகிழ்ச்சி.''
பிரபாகரன், சென்னை
``நான் பசுமை விகடனோட வாசகர். இயற்கை விவசாயம் பத்தின அறிவும் தெளிவும் பசுமை விகடன் படிச்சப்புறம்தான் எனக்குக் கிடைச்சது. என்னோட ஓய்வுக்காலத்துல விவசாயத்தில் ஈடுபடணும்ங்கிற எண்ணம் பசுமை விகடன் படிச்சப்புறம் உருவாச்சு.

விகடன் குழும இதழ்களோட சந்தாதாரராக இருக்கிறதால சரியான நேரத்துக்கு இதழ் கிடைச்சிடுது. அது மட்டுமல்லாம, இது மாதிரியான திருவிழாக்களில் விகடன் தர்ற சலுகைகளும் நல்லா இருக்கு.''
விகடன் சேமிப்புத் திருவிழா
விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன் ஆகிய இதழ்களுக்கான சந்தாக்களுக்கு 33 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாசகர்கள் இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.