Published:Updated:

`வெள்ளம் எல்லாத்தையும் அடிச்சுக்கிட்டு போயிடுச்சு, சாப்பாட்டுக்கே வழியில்லை' - கலங்கும் கிராம மக்கள்

மழை பாதிப்பு
News
மழை பாதிப்பு

மருத்துவமனை, நியாய விலைக்கடை, வங்கி என அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்வதற்குக்கூட ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வெள்ளநீரைக் கடந்து செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், எலப்பநாயுடுப்பேட்டை ஊராட்சியில் அமைந்திருக்கிறது காந்தி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகின்றனர். கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், ஆற்றிலிருந்து வரும் கால்வாய் காந்தி கிராமத்தின் வழியே சென்று பூண்டி ஏரியில் சென்றுசேருகிறது.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

இதனால் கிராமத்துக்கு வரும் சாலையில் இடுப்பளவு தண்ணீர் செல்கிறது. அதன் காரணமாக, அந்த வழியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆபத்தை உணராமல் ஊர்ச் சிறுவர்கள் அதில் நீச்சலடித்து விளையாடிவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மருத்துவமனை, நியாய விலைக்கடை, வங்கி என அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்வதற்குக்கூட ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வெள்ளநீரைக் கடந்து செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். வெள்ளநீர் காந்தி கிராம மக்களின் வசிப்பிடங்களுக்குள் புகுந்துவிட்டதால், மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குச் சில தன்னார்வ அமைப்பினர் உணவுப் பொட்டலங்கள் வழங்கியும், அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தும் உதவிவருகின்றனர்.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

அதன் காரணமாக, ஒருசில குடும்பங்கள் தெருவில் தார்ப்பாய் போட்டு, தற்காலிகக் கூடாரம் அமைத்து குழந்தைகளுடன் வசித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மழை வெள்ள பாதிப்பு குறித்து நம்மிடம் பேசிய அந்த கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி - பலராமன் தம்பதி, ``ஆடு மேய்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் எங்கள் குடும்பத்தை நடத்திவருகிறோம். இந்த நிலையில், இந்த மழையால் நாங்கள் வளர்த்துவந்த ஆடுகளில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளநீரில் அடித்துச் சென்றும், நோய் தாக்கியும், பல ஆடுகள் தீவனம் இல்லாமலும் இறந்துவிட்டன.

காந்தி கிராம மக்கள்
காந்தி கிராம மக்கள்

எங்களுக்கு இந்தத் தொழிலைவிட்டால் வேறு தொழில் தெரியாது. அதனால், எங்களால் வேறு தொழிலுக்கும் செல்ல முடியாது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு உதவ வேண்டும்" என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தனர்.

காந்தி கிராம மக்கள்
காந்தி கிராம மக்கள்

``வருடந்தோறும் ஏற்படும் இந்த வெள்ள பாதிப்பிலிருந்து, மீண்டு வர ஒரே வழி புதூர் கிராமத்தின் வழியே எங்களுக்குச் சாலை அமைத்துத் தருவது மட்டும்தான்" எனக் கூறும் காந்தி கிராம மக்கள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருக்கிறார்கள்.

- ஏ.சூர்யா

(மாணவப் பத்திரிகையாளர்)