Published:Updated:

குழந்தைகள் பசியால் தவிப்பதைப் பார்க்க முடியல! - லாக் டௌனால் தள்ளாடும் பறை இசைக் கலைஞர்கள்

பறை இசைக் கிராமம்
பறை இசைக் கிராமம்

ஊரடங்கை அடுத்து பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்ததால் பறை இசைக் கலைஞர்கள் தொழிலை இழந்து உணவுக்கு வழியில்லாமல் தள்ளாடி வருகிறார்கள்.

''கல்யாணம், காது குத்து, சடங்கு, சாவு, கோயில் திருவிழா, பொது நிகழ்ச்சிக்குச் சென்று பறை இசை முழங்கி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தோம். வருடத்தில் 6 மாதம் சீசன் காலம். அதன் பிறகு தொழில் இருக்காது. தற்போது சீசன் நேரத்தில் அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போட்டதால் தொழில் செய்யமுடியவில்லை'' ஆதி தாளம்

ஆதி தாளம்
ஆதி தாளம்
க.தனசேகரன்

கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பின்பற்றி வருகிறோம். இருக்கப்பட்டவர்கள் வீட்டுக்குள் இருந்தபடி யூ டியூப்பில் பல விதமான ரெசிபிகள் செய்து ருசித்து வருகிறார்கள். இல்லாதவர்கள் பசியோடு சாலையோரமாக நின்று தன்னார்வலர்கள் கொடுக்கும் நிவாரணப் பொருள்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உள்ளது. இல்லாதவர்கள் வரிசையில் ஆதி தாளம் முழங்கக் கூடிய பறை இசைக் கலைஞர்களும் பசியால் தவித்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் டூ நங்கவள்ளி செல்லும் வழியில் 6 கி.மீட்டர் தூரத்தில் ராமரெட்டிப்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் சுமார் 45 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பறை இசைக் கலைஞர்கள். இவர்களுக்குப் பறை அடிப்பதே பிரதான தொழிலாக இருக்கிறது. ஊரடங்கை அடுத்து பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்ததால் பறை இசைக் கலைஞர்கள் தொழிலை இழந்து உணவுக்கு வழியில்லாமல் தள்ளாடி வருகிறார்கள்.

ரமேஷ்
ரமேஷ்

இதுபற்றி ராமரெட்டிப்பட்டி பறை இசைக் கலைஞர் ரமேஷிடம் கேட்டதற்கு, ''எங்க கிராமத்தில் பெரும்பாலும் பறை இசைக் குடும்பத்தினரே இருக்கிறோம். மீதி இருக்கும் சிலரும் தினக்கூலித் தொழிலாளிகள். நாங்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். நாங்கள் தொழில் செய்தால் சாப்பாடு இல்லையென்றால் பட்டினி என்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

கல்யாணம், காது குத்து, சடங்கு, சாவு, கோயில் திருவிழா, பொது நிகழ்ச்சிக்குச் சென்று பறை இசை முழங்கி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தோம். வருடத்தில் 6 மாதம் சீசன் காலம். அதன் பிறகு தொழில் இருக்காது. தற்போது சீசன் நேரத்தில் அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போட்டதால் தொழில் செய்ய முடியவில்லை.

பறை இசைக் கலைஞர்கள்
பறை இசைக் கலைஞர்கள்

கையில் இருந்து கொஞ்ச, நஞ்ச பணமும் செலவாகி விட்டது. வருமானத்திற்கு வழி இல்லை. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோம். எங்களை நம்பி வாழக் கூடிய மனைவி, குழந்தைகள் பசியால் தவிப்பதைப் பார்க்க முடியவில்லை. அரசு எங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு வருமானத்திற்கு வழி செய்துகொடுக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு