Published:Updated:

வேலூர்: ``ஊராட்சியே ஊழல்வாதிகளிடம்தான் சிக்கியிருக்கிறது!" - கிராமசபைக் கூட்டத்தை முடக்கிய மக்கள்

வாக்குவாதம்

வேலூர் அருகே பெருமுகை ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தை பொது மக்களே முன்னின்று முடக்கியச் சம்பவம், பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

வேலூர்: ``ஊராட்சியே ஊழல்வாதிகளிடம்தான் சிக்கியிருக்கிறது!" - கிராமசபைக் கூட்டத்தை முடக்கிய மக்கள்

வேலூர் அருகே பெருமுகை ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தை பொது மக்களே முன்னின்று முடக்கியச் சம்பவம், பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
வாக்குவாதம்

வேலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பெருமுகை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியபோது, அங்குத் திரண்டு வந்த கிராம மக்கள், ‘‘இந்த ஊராட்சியில் ஊழல் மட்டுமே நடக்கிறது; அனைத்துப் பணிகளிலும் முறைகேடுகள் நிலவுகின்றன; வெளிப்படைத் தன்மைக் கிடையாது; ஊராட்சியே ஊழல்வாதிகளிடம்தான் சிக்கியிருக்கிறது’’ என்று காட்டமாகப் பேசி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மக்களின் கேள்வியைப் பொருட்படுத்தாமல் ஊராட்சி மன்றத்தலைவர் புஷ்பராஜ், பார்வையாளராக வந்த அதிகாரிகளுடன் சேர்ந்து சபையை நடத்த முயன்றார். தொடர்ந்து எதிர்ப்புக் காட்டிய மக்கள், ‘‘நாங்கள் சபையைப் புறக்கணிக்கிறோம்; கூட்டத்தை நிராகரிக்கிறோம்’’ என்று எழுதி கையெழுத்திட்ட கடிதத்தை அதிகாரிகளிடம் நீட்டினர்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

பிரச்னைக் குறித்து அதிகாரிகளிடம் பேசிய கிராம மக்கள், ‘‘எங்கள் பகுதியிலிருக்கும் மலைகளில் அதிக அளவிலான கல்குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. இரவுப் பகல் பாராமல் பாறைகளை வெடி வைத்து தகர்த்து லாரிகளில் ஏற்றிச் செல்கிறார்கள். வெடி வைக்கும்போது வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. அச்சத்துடனேயே வீடுகளில் இருக்க வேண்டிய சூழலில் வாழ்ந்து வருகிறோம். குடியிருப்புத் தெருக்களின் வழியாக கனரக லாரிகளைச் செல்ல அனுமதி கொடுத்திருக்கிறார்கள். தெருக்களின் வழியே லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதை அனுமதிக்கக் கூடாது.

பெருமுகை பாலாற்றில் அரசு அனுமதித்த பகுதியைக் கடந்து மணல் அள்ளுகிறார்கள். விவசாய நிலங்களையொட்டியப் பகுதிகளிலும் மணல் அள்ளப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்தினர் மணல் குவாரியில் மாமூல் வாங்குகிறார்கள். கேள்விக் கேட்டால் மிரட்டுகிறார்கள். சுடுகாட்டுப் பகுதியிலும் மண்ணை அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். நீர்நிலைகளும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படவில்லை.

வாக்குவாதம்
வாக்குவாதம்

பள்ளி, கோயிலின் அருகிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. போதை கும்பல்கள் கோயில் வளாகத்தில் உட்கார்ந்து குடிக்கின்றன. அதேபோல, பள்ளி வளாகத்திலும் பாட்டிலை உடைத்துவிட்டுச் செல்கிறார்கள். உடனடியாக டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும். இந்தப் பிரச்னைகள் அனைத்தும் நீண்ட காலமாக இருப்பவைதான். ஒவ்வொரு கிராமசபைக் கூட்டத்திலும் இந்தப் பிரச்னைகளை வலியுறுத்தினாலும், எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படுவதில்லை. ஊராட்சியின் பொதுநிதி செலவின பதிவேடுகள் (வரவு, செலவு கணக்குகள்) மற்றும் பில்புக்கையும் கிராமசபைக் கூட்டத்தில் வைப்பதில்லை. இந்தப் பிரச்னைகளை களைந்தால் மட்டுமே கிராமசபைக் கூட்டத்தை நடத்தவிடுவோம்’’ எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால், சபை நடத்தப்படாமலேயே களைந்துவிட்டது. மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அதிகாரிகளும் அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். இதனால், அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது.