Published:Updated:

``மழை வந்தாலே மனசெல்லாம் பதறும்..!" - இடுப்பளவு நீரில் சடலத்தைச் சுமந்து செல்லும் கிராம மக்கள்

இடுப்பளவு நீரில் சடலத்தை எடுத்துச் செல்லும் மக்கள்

``நல்ல மழை வந்தாலே மனசெல்லாம் பதறும். யாராவது இறந்துட்டா எப்படி அடக்கம் பண்றதுனு நெனச்சாலே கஷ்டமா இருக்கும். தரைமட்டப் பாலத்தை அகற்றிட்டு உயர்மட்டப் பாலம் கட்டணும்னு பல வருஷமா கோரிக்கை வெக்கிறோம்." - பீலாளம் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள பீலாளம் கிராமத்தின் அருகில் சிற்றாறு ஒன்று அமைந்திருக்கிறது. இந்தச் சிற்றாற்றைக் கடந்து மக்கள் கிராமத்தினுள் சென்றுவர தரைமட்டப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலத்தை கடந்துதான் மக்கள் மயானத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அதீத மழை பெய்யும்போதெல்லாம் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைமட்டப் பாலம் நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. மேலும், மழை வந்தால் சுடுகாட்டுக்கு இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல முடியாமல் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவால் இரு தினங்களுக்கு முன்பு சக்கார்லம்மா (65) என்ற மூதாட்டி இறந்தார். அவரின் உறவினர்கள், பாலத்தின் இருபுறமும் கயிறு கட்டி, இடுப்பளவு நீரில் நடந்து சென்று மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தனர். இந்தப் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு, இந்தப் பிரச்னை பேசுபொருளானதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வுசெய்தனர்.

சடலத்தை அடக்கம் செய்ய, இடுப்பளவு நீரில் நடந்து செல்லும் மக்கள்.
சடலத்தை அடக்கம் செய்ய, இடுப்பளவு நீரில் நடந்து செல்லும் மக்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய கிராம மக்கள், ``நல்ல மழை வந்தாலே மனசெல்லாம் பதறும். யாராவது இறந்துட்டா எப்படி அடக்கம் பண்றதுனு நெனச்சாலே கஷ்டமா இருக்கும். தரைமட்டப் பாலத்தை அகற்றிட்டு உயர்மட்டப் பாலம் கட்டணும்னு பல வருஷமா கோரிக்கைவெக்கிறோம். ஆனாலும், இதுவரை தீர்வே கிடைக்கலை. தண்ணிக்குள்ள சடலத்தைத் துாக்கிட்டு நடந்து போற எங்க அவலநிலையைப் போக்குறதுக்கு, சீக்கிரம் உயர்மட்டப் பாலம் கட்டித் தரணும்" என்றனர் வருத்தத்துடன்.

பிரச்னை குறித்து சூளகிரி தாசில்தார் அனிதாவிடம் கேட்டதற்கு, ‘‘ஒன்றிய அதிகாரிகளுடன் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். இல்லையென்றால், வேறு இடத்தில் மயானம் அமைக்கப்படும்’’ என்றார்.