Published:Updated:

`வழக்கை விசாரிக்க முழு அதிகாரம் உண்டு!' - முன்னாள் சிறப்பு டி.ஜி.பி-யின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ( தே.சிலம்பரசன் )

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது. விழுப்புரம் மாவட்டத்தில்தான் நடக்கும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை கண்காணிக்கக் கூடாது' என்று உத்தரவிட்டிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி, `இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்ற வரம்புக்குள் வராது, எனவே, வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்' என்று தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள விழுப்புரம் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க முழு அதிகாரம் உண்டு எனக் கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், 21-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி நியமனம் செய்யப்பட்டிருந்தார். பாதுகாப்பு ஆலோசனை பணியின்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி-யின் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், அப்போதைய டி.ஜி.பி ஆகியோரிடம் புகார் அளிக்க காரில் சென்றார். அப்போது, அந்த வழியில் செங்கல்பட்டின் முக்கியக் காவல் அதிகாரி ஒருவர் அவரது காரை வழிமறித்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதற்கு அந்தப் பெண் அதிகாரி ஒப்புக்கொள்ளாததால் அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

அதன் பிறகு, அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, சென்னையில் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, பாலியல் புகாரை அளித்தார்.

Sexual harassment (Representational Image)
Sexual harassment (Representational Image)
Pixabay
பெண் எஸ்.பி பாலியல் வழக்கு: தி.மு.க அரசு வந்தும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி கைது செய்யப்படாதது ஏன்?

இந்தப் பாலியல் புகாரில் சிறப்பு டி.ஜி.பி மீது விசாரணை நடத்தும்படி ஆறு பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டதோடு, அதைத் தொடர்ந்து சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தப் புகார், பின்னாளில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது.

தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையின் முன்னேற்றம் பற்றிய அறிக்கையைக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

அதன் தொடர்ச்சியாகக் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார், பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி. பின்னர், ஜூலை 29-ம் தேதியன்று, 400 பக்க குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள். அதைத் தொடர்ந்து விசாரணை சூடுபிடித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது. விழுப்புரம் மாவட்டத்தில்தான் நடக்கும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை கண்காணிக்கக் கூடாது' என்று உத்தரவிட்டிருந்தது.

supreme court
supreme court
பெண் விமானப் படை அதிகாரிக்கு இரு விரல் பரிசோதனை, உயர் அதிகாரிகளின் அலட்சியம்; வெளிவந்த அதிர்ச்சிகள்!

அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. `இவ்வழக்கு இந்த நீதிமன்ற வரம்புக்குள் வராது. அதனால் இவ்வழக்கை இங்கு விசாரிக்கக் கூடாது' என்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதே போல, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி தரப்பிலோ, `இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்' என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் எஸ்.பி மட்டுமே நேரில் ஆஜரானார். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி நேரில் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், இந்த வழக்கை விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் இருப்பதாகக் கூறி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, முன்னாள் எஸ்.பி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்றும் கூறி அந்த மனுவையும் தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை 8-ம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் சிறப்பு டி.ஜி.பி முதல் சமீபத்தில் கோவை இந்திய விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் சக பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விமானப் படை அதிகாரி வரை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்கள் பதவி, அதிகாரத்தை முன்னிறுத்தி, தங்கள் மீதான விசாரணைக்குத் தடை கேட்கும் அணுகுமுறையும், அது சார்ந்த சட்ட நடைமுறைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், விழுப்புரம் நீதிமன்றம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்திருப்பது பலராலும் வரவேற்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு