Published:Updated:

`கோடி ரூபா கொடுத்தாலும் எங்க அக்கா போல வருமா?' -கதறும் விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ-யின் தங்கை

ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிறுமி ஜெயஸ்ரீயின் உடல்
ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிறுமி ஜெயஸ்ரீயின் உடல்

”எங்க சித்தப்பா கையை வெட்டுனவங்க மேல அப்பவே இந்த போலீஸ்காரங்க கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தா, எங்க அக்கா செத்திருக்குமா?” என்று கதறுகிறார் விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ-யின் தங்கை.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்த ஜெயபால் (42), ராஜி தம்பதியினருக்கு இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த 10-ம் தேதி காலையில், ஜெயபால் வீட்டுக்குள் இருந்து திடீரென்று புகைமூட்டம் வெளியேறியதுடன், அலறல் சத்தமும் கேட்டது. அதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கே ஜெயபாலின் மூத்த மகளான 15 வயது சிறுமி ஜெயஸ்ரீ எரிந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்

சோகத்தில் சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர்
சோகத்தில் சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர்

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ, முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறை, குண்டாஸ் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சிறுமதுரையிலுள்ள ஜெயஸ்ரீயின் வீட்டுக்குச் சென்றோம். மகளின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் நொறுங்கிப்போய் அமர்ந்திருக்கிறது அவரது குடும்பம். நம்மிடம் பேசிய ஜெயஸ்ரீயின் அம்மா ராஜி, ” ஜெயராஜு பெரிய பையன், ஜெயஸ்ரீ ரெண்டாவது பொண்ணு, ராஜேஸ்வரி மூணாவது பொண்ணு, ஜெபராஜு நாலாவது பையன். என் பொண்ணு ஜெயஸ்ரீயை உயிரோட வச்சி கொளுத்திட்டு ஓடிட்டானுங்க.

`அப்பா... ரொம்ப தண்ணி தாகம் எடுக்குதுப்பா!' -கலங்கவைக்கும் விழுப்புரம் சிறுமியின் கடைசி நிமிடங்கள்

அவனுங்களுக்கு தூக்குத்தண்டனை குடுங்கோ. அவனுங்க (முருகன், கலியப்பெருமாள்) பெத்த புள்ளைங்கோ எங்களையும் வீட்டுக்குள்ள வச்சி கொளுத்திடுவோம்னு தைரியமா சொல்ற அளவுக்கு வெளியில நடமாட வுட்டுருக்கீங்கோ. எதுக்கு வுட்டுருக்கீங்கோ... எதுக்குய்யா நடமாட வுட்டுருக்கீங்கோ.. என் வூட்டுல கடைய பூட்டி வச்சிருக்கீங்க.

அவனுங்க வீட்டுல எல்லாரும் ரோட்டுல நின்னும் பேசிக்கிட்டிருக்காங்க ஐயா. அவங்களப் பத்தி நாங்க எதாவது பேசுனா எங்க எல்லாரையும் கொளுத்திடுவோம்னு பப்ளிக்கா பேசிக்கிறானுங்கய்யா. இவ்ளோ போலீஸ் பாதுகாப்பு எதுக்கு? நீங்க யாராவது அவனுங்கள ஒருவழி பண்ணிருக்கீங்களா? எம்பொண்ணு ஜெயஸ்ரீ சாவுக்கு காரணமான அவனுங்க அண்ணன் தம்பி எல்லாரையும் உள்ள வைங்க” என்று கதறியழுகிறார்.

சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு
சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு

ஜெயஸ்ரீயின் தங்கையான ராஜேஸ்வரி, “ நானும் எங்கக்காவும் பிரியவே மாட்டோம். எங்க போனாலும் ஒன்னாதான் போவோம், ஒன்னாதான் வருவோம். இனி நான் தனியா எப்படிப் போவேன்.

இந்த ஊருல இனிமே எப்படி நான் தனியா இருப்பேன். எங்க சித்தப்பா கையை வெட்டுனவங்க மேல அப்பவோ போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தா எங்க அக்கா செத்திருக்குமா? அப்போவே இந்த போலீஸ்காரங்க கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தா எங்க அக்கா செத்திருக்குமா?

ஒரு வாரத்தில் அறிக்கை; தாமாக முன்வந்து வழக்கு பதிவு -விழுப்புரம் சிறுமி விவகாரத்தில் கொதித்த ஆணையம்

அவங்க என் சித்தப்பா கையை வெட்டும்போது ஊரே வேடிக்கை பாத்துச்சு. எட்டு வருஷத்துக்கு முன்னாடி குடுத்த கேஸு அப்படியே கெடக்குது. அப்பவே போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தா எங்க அக்கா செத்திருக்குமா? எங்கக்கா செத்துப்போச்சே இனி நான் என்ன செய்யப்போறேன்? கோடி ரூபா குடுத்தாக்கூட எங்கக்காவுக்கு ஈடாகுமா? என் சாமி எப்பவும் என் கூடவே இருக்கும்” எனக் கூறியபடியே கதறியழுதார்.

எங்க அக்காதான் எனக்கு சாமி...' - கதறும் விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயின் தங்கை விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தைச்...

Posted by Vikatan EMagazine on Friday, May 15, 2020
அடுத்த கட்டுரைக்கு