Published:Updated:

``எங்க மேல பொய் கேஸ் போடக்கூடாது!" - இரவிலும் தொடர்ந்த பனையேறி மக்களின் போராட்டம்

பனையேறி மக்கள் போராட்டம்

தங்களின் உடைமைகளை, காவல்துறையினர் சேதப்படுத்தியதாகவும், சக பனையேறி ஒருவரை பொய் விஷச்சாராய வழக்கில் கைது செய்திருப்பதாகவும் கூறி விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் பனையேறி மக்கள்.

``எங்க மேல பொய் கேஸ் போடக்கூடாது!" - இரவிலும் தொடர்ந்த பனையேறி மக்களின் போராட்டம்

தங்களின் உடைமைகளை, காவல்துறையினர் சேதப்படுத்தியதாகவும், சக பனையேறி ஒருவரை பொய் விஷச்சாராய வழக்கில் கைது செய்திருப்பதாகவும் கூறி விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் பனையேறி மக்கள்.

Published:Updated:
பனையேறி மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே உள்ள நரசிங்கனூர், பூரிக்குடிசை பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு பனை மரம் ஏறுவதும், பனை சார்ந்த தொழில் செய்வதுமே பிரதானத் தொழிலாக உள்ளது. இதனால், `கள்' இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க கோரி நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மக்களின் இந்த தொடர் போராட்டம் நேற்று (21.03.2022) 60வது நாளை எட்டியுள்ளது. தங்களின் பனையேறும் உடைமைகளை, காவல்துறையினர் சேதப்படுத்தியதாகவும், சக பனையேறி ஒருவரை பொய் விஷச்சாராய வழக்கில் கைது செய்திருப்பதாகவும் கூறி, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று (21.03.2022) மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

60-வது நாள் போராட்டத்தில் பனையேறி மக்கள்
60-வது நாள் போராட்டத்தில் பனையேறி மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட அந்த மக்களிடம் பேசினோம். ``பனை ஏறுவதும், பனை சார்ந்த தொழில் செய்யுறதும்தான் எங்களின் பூர்வீக தொழில். ஜனவரி 21-ம் தேதி, கள் இறக்கி சந்தைப்படுத்தும் தொடர் போராட்டத்தை நாங்கள் நடத்தி வர்றோம். `கள்' ஓர் உணவுப் பொருள்தான்னு சட்டத்துல சொல்லியிருக்கு. இதைப் பின்பற்றி இந்திய நாட்டுல இருக்கிற புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள்ல கள்ளுக்கு எந்தத் தடையும் இல்லாம பனையேறிகளை சிறப்பா வாழ வெச்சுகிட்டு இருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டோட மாநில மரம்னு பனைமரத்தை சொல்றாங்களே தவிர, அது செயலில் இல்லை. பனையைப் பாதுகாக்கணும்னா... பனைத் தொழிலாளர்களையும் பாதுகாக்கணும். ஆனா, இந்த அரசு கள்ளுக்கு மட்டும் தடை விதிச்சுட்டு... எங்க மேல பொய் விஷச்சாராய வழக்கு போடுது. இப்போ, எங்களோட சக பனைத் தொழிலாளி பாஸ்கரையும் அப்படித்தான் கைது செஞ்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம, காவல்துறையினர் அத்துமீறி வந்து எங்களோட உடைமைகளை சேதப்படுத்துறாங்க.

இரவிலும் தொடரும் போராட்டம்
இரவிலும் தொடரும் போராட்டம்

எங்களை நிம்மதியா தொழில் செய்ய விடாம, தினம் தினம் சித்திரவதை செய்றாங்க, அச்சுறுத்துறாங்க. எனவே, அரசு இதுல உடனடியா தலையிட்டு நல்ல தீர்வு காணணும். இல்லை... இது தவறு என்றால், எங்க குடியுரிமையை இந்த அரசு வாங்கிக்கொண்டு... பனைத்தொழில் அனுமதி உள்ள மாநிலத்துல குடியுரிமையை வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்க கோரிக்கையை மாவட்ட ஆட்சியர்கிட்ட சொல்ல வந்திருக்கிற இந்த நேரத்துல, கஞ்சனூர் போலீஸ்காரர்களும் கலால்துறை அதிகாரிங்களும் எங்க ஊருக்குள்ள புகுந்து எங்களோட பனையேறும் உடைமைகளையும், பானைகளையும் அடிச்சு உடைச்சிருக்காங்க. எல்லாம் தெரிந்துதான் இப்போ நாங்க இங்கே போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் இந்த போலீஸ் இவ்வளவு துன்புறுத்துறாங்க. போன வருஷம் வரைக்கும், ஒவ்வொரு வருஷமும் 20 பேர் வரைக்கும் சாராய கேஸ் போடுவாங்க. இந்த வருஷம்தான் இல்லாமல் இருந்துச்சு. இப்போ பாஸ்கர் மீது பொய் சாராய வழக்கு போட்டு பிடிச்சு வச்சிருக்காங்க.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கள் இறக்குறதுக்கான தண்டனையை அரசு கொடுத்தால் நாங்கள் ஏத்துக்குவோம். ஆனா, பொய் சாராய கேஸ் போடவே கூடாது. ஏன்ன நாங்க சாராயமே விக்கல. பாஸ்கரை விடுவிக்கிற வரைக்கும் இந்த போராட்டம் நீடிக்கும்" என்றனர் ஆதங்கத்தோடு. குறிப்பிட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விட்டு வந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அம்மக்களிடம் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர்
பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர்

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 11 மணி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க கஞ்சனூர் துணை ஆய்வாளர் ஜெயபாலன் என்பவரிடம் பேசினோம். ``பனை சாறு (பதநீர்) இறக்குவதற்குத்தான் அவர்கள் உரிமம் பெற்று வருகிறார்கள். ஆனால் ஒரு மரத்தில் நான்கு பானைகள் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதில் இரு பானைகளில் கள் இறக்கி விற்பனை செய்கிறார்கள். அதனால், ``இது தவறு. அப்படி செய்யக் கூடாது" என்று அறிவுரை வழங்கினோம். அதையும் மீறி அவர்கள் செய்கிறார்கள். எனவே, அவர்கள் பானையை இறக்கும்போதே சென்று அதில் கள் இருப்பதை உறுதி செய்துதான் வழக்குப் பதிவு செய்து, ஜாமீனில் விடுவித்துள்ளோம். அவர்கள் சொல்வதைப்போல விஷச் சாராய வழக்கு எதுவும் நாங்கள் பதியவில்லை" என்றனர்.

பனையேறி மக்களின் தொடர் போராட்டத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறது மாவட்ட நிர்வாகம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism