Published:Updated:

விழுப்புரம்: பெண் அதிகாரி Vs விசிக மாவட்டச் செயலாளர்; உச்சகட்ட வாக்குவாதம் - பின்னணி என்ன?

வாக்குவாதம் - வீடியோ காட்சிகள்

விழுப்புரம் தாட்கோ செயற்பொறியாளரும், வி.சி.க மாவட்டச் செயலாளரும் ஒருமையில் பேசி உச்சகட்ட வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

விழுப்புரம்: பெண் அதிகாரி Vs விசிக மாவட்டச் செயலாளர்; உச்சகட்ட வாக்குவாதம் - பின்னணி என்ன?

விழுப்புரம் தாட்கோ செயற்பொறியாளரும், வி.சி.க மாவட்டச் செயலாளரும் ஒருமையில் பேசி உச்சகட்ட வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

Published:Updated:
வாக்குவாதம் - வீடியோ காட்சிகள்

விழுப்புரம் வடக்கு மாவட்ட வி.சி.க செயலாளராக இருப்பவர் சேரன். இவரின் மனைவி ஷீலாதேவி தற்போது விழுப்புரம் மாவட்ட துணை சேர்மனாக இருக்கிறார். அரசியல் பின்புலம் மட்டுமின்றி, அரசு ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டுவந்திருக்கிறார் சேரன். இந்நிலையில், விழுப்புரம் தாட்கோ அலுவலக செயற்பொறியாளர் அன்பு தேவகுமாரியிடம் இவர், ஆதரவாளர் சிலருடன் சென்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும், பெண் செயற்பொறியாளர், இந்நபரை ஒருமையில் பேசி மேசையின் மீதிருந்த ஒரு பொருளை ஆக்ரோஷமாக எடுக்கும் மற்றொரு வீடியோ காட்சியும்... 19-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

CSR report
CSR report

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில், தான் செய்துவரும் பள்ளி கட்டட ஒப்பந்தப்பணி குறித்து சேரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று பெண் செயற்பொறியாளரிடம் பேசினாராம். அப்போது, சேரனுக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், இந்தக் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 11-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள், 19-ம் தேதி வெளியாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாக்குவாதம் நடைபெற்ற மறுதினமே, பெண் அரசு அதிகாரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் மனு அளித்துள்ளார். சி.எஸ்.ஆர் மட்டுமே பதிந்த காவல்துறை அதிகாரிகள், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி அனுப்பிவைத்தனராம்.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்க பெண் செயற்பொறியாளரிடம் பேச முயன்றபோது, "இது குறித்துப் பேசுவதற்கு விருப்பமில்லை" எனக் கூறி மறுத்துவிட்டார்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

அதைத் தொடர்ந்து வி.சி.க விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சேரனிடம் விளக்கம் கேட்டோம். "அன்று நான், கட்சி சார்ந்து அந்த அலுவலகம் செல்லவில்லை. முதல்நிலை ஒப்பந்ததாரராகத்தான் சென்றேன். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்துக்கு உட்பட்ட சேமக்கோட்டை பகுதியில் ஆதிதிராவிட அரசு ஆரம்பப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வகுப்பறைகளைக் கட்டிவருகிறேன். இந்தக் கட்டடத்தின் இறுதிக்கட்ட பணியாக டைல்ஸ் போடவேண்டியிருந்தது. அதற்காக இந்த அதிகாரியிடம் முறையாக அனுமதி பெற்று, அவர் கூறிய டைல்ஸை வாங்கி வந்தோம். இவர்களிடம் காண்பித்தபோது, "சரி போடுங்கள்" எனக் கூறிவிட்டார்.

ஆனால், டைல்ஸ் போடும் தினத்தன்று ஒரு 'டெக்னிக்கல் அசிஸ்டென்ட்டை’யும் அங்கு அனுப்பியிருந்தார். அதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காதவர், டைல்ஸ் போடும் பணி முடிந்ததும் "இந்த டைல்ஸ் சரியில்லை' என்று கூறினார். மேலும், நான் செய்யும் பணியில் போர்வெல் போடும் வேலை மட்டுமே பாக்கி இருந்தது. அதற்கான அளவீட்டை அந்த அதிகாரிதான் தர வேண்டும். எனவே, கடந்த 11-ம் தேதியன்று அந்த அளவீட்டை கேட்பதற்காக தாட்கோ அலுவலகம் சென்றிருந்தேன். போர்வெல் போடுவதற்கான அளவை நான் கேட்டபோது, "நான் சொன்ன டைல்ஸைப் போடவில்லை. உனக்குச் சொல்ல முடியாது" என்பதுபோல கூறிவிட்டார்கள். 'உங்களிடம் அனுமதி பெற்று, நீங்கள் சொன்னதைத்தானே மேடம் போட்டோம். இப்போது நீங்கள் இப்படிச் சொன்னால் எனக்கு நஷ்டம் ஏற்படும். எதுவாக இருந்தாலும் எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுங்கள். நான் உங்கள் உயரதிகாரியிடம் பேசுகிறேன்' என்று சொன்னபோதே, "ச்சீ வெளியே போ" என்று மரியாதையின்றி சொன்னார்கள்.

பெண் அதிகாரி Vs வி.சி.க மாவட்ட செயலாளர்
பெண் அதிகாரி Vs வி.சி.க மாவட்ட செயலாளர்

அப்போது ஏற்பட்ட மனஉளைச்சலில் நான் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதோடு, 'நான் எதுக்கு வெளிய போகணும்... நீ வெளிய வா!' என்றேன். அப்போது, வாடா... போடா... என்றெல்லாம் பேசினார்கள். மேசையின் மீதிருந்த பேப்பர் வெயிடைத் தூக்கி என் மீது அடித்தார்கள். நான் ஒதுங்கி கொண்டபோது என் பின்னால் இருந்த ஒரு தம்பி மீது அது பட்டது. பின், கண் கண்ணாடி டப்பாவை தூக்கி அடித்தார்கள். அந்த வீடியோவையெல்லாம் அவர்கள் வெளியிடவில்லை. ஆரம்பத்தில், அவர்கள் தவறாகப் பேசும்போதும் நாங்கள் வீடியோ எதையும் எடுக்கவில்லை. இறுதியாகத்தான் சிறு வீடியோ எடுத்தோம். அதிலும் அவர்கள் ஒருமையில் பேசியிருப்பார்கள். இந்தச் சம்பவம் குறித்து தாட்கோ பொதுமேலாளருக்கு அன்றே வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தேன். அதன் பிறகு, நான் இதை எதையுமே வெளியிடவில்லை.

இந்நிலையில், விழுப்புரம் - கடலூர் மாவட்ட தாட்கோ ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் சிலர், தாட்கோ பொதுமேலாளரிடம் இந்தப் பெண் அதிகாரி குறித்து 18-ம் தேதி அன்று புகார் அளித்துள்ளனர். அன்று மாலையே... நான் அந்தப் பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ மட்டும் வெளியிடப்படுகிறது. அது ஏனெனில், இந்த அதிகாரியின் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்ததும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

விழுப்புரம்: பெண் அதிகாரி Vs விசிக மாவட்டச் செயலாளர்; உச்சகட்ட வாக்குவாதம் - பின்னணி என்ன?

அந்த ஒரு பகுதி மட்டுமே, முழு வீடியோ கிடையாது. அந்த அலுவலகத்தில் சிசிடிவி கேமரா இருக்கிறது. அதிலிருக்கும் காட்சிகளை எடுக்கச் சொல்லுங்கள். யாரிடமிருந்து முதலில் தவறு வெளிப்படுகிறது என்பது தெரிந்துவிடும். இதில் வேறு ஏதும் கிடையாது" என்றார்.