Published:Updated:

திருப்பூர்: விதியை மீறி இயங்கிய கல்குவாரிக்கு ரூ.10.4 கோடி அபராதம்!

கல்குவாரி ( ஃபைல் படம் )

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே விதியை மீறி இயங்கியதாக கல்குவாரி உரிமையாளருக்கு ரூ.10.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: விதியை மீறி இயங்கிய கல்குவாரிக்கு ரூ.10.4 கோடி அபராதம்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே விதியை மீறி இயங்கியதாக கல்குவாரி உரிமையாளருக்கு ரூ.10.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கல்குவாரி ( ஃபைல் படம் )

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்குக் கற்கள் மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு சட்டவிரோதமாகவும், விதிகளை மீறியும் கிராவல் வெட்டி எடுப்பதாக விஜயகுமார் என்பவர் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்தால் நியமிக்கப்பட்ட வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு மற்றும் சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரால் நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு அந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதனடிப்படையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு வழங்கப்பட்ட கல்குவாரி உரிமம், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த ஆணையை எதிர்த்து ராமகிருஷ்ணன், சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் மேல்முறையீட்டு மனு அளித்தார். இதனடிப்படையில் நடந்த விசாரணையின்படி குத்தகைதாரருக்கு ரூ.10,40,48,207 அபராதம் விதிக்கப்பட்டது. குத்தகைதாரர் ராமகிருஷ்ணன் தவணை முறையில் அபராதம் செலுத்தக் கோரியதன் அடிப்படையில் மாதம்தோறும் ரூ.30 லட்சம் தவணை முறையில் அரசுக்குச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

குவாரி  (ஃபைல் படம்)
குவாரி (ஃபைல் படம்)

மேலும், கனிம விதிகளுக்கு உட்பட்டு குவாரிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. குத்தகைதாரர் அபராதத்தைச் செலுத்திவரும் நிலையில், சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஆணைக்கு இணங்க குவாரி விதிகளுக்கு உட்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் கனிமம் வெட்டி எடுக்க ராமகிருஷ்ணனுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் வினித் தெரிவித்திருக்கிறார்.