Published:Updated:

`டாஸ்மாக் மாதிரி ஜூஸ்மாக்ன்னு ஏன் பேர் வச்சேன்னா..?!' - லாஜிக் சொல்லும் கும்பகோணம் இளைஞர்

டாஸ்மாக் கடை செட்டப்பில் உள்ள ஜூஸ்மாக்

ஜூஸ் குடிக்க உள்ளே செல்பவர்கள், தவறுதலாக டாஸ்மாக் கடைக்குத்தான் வந்துவிட்டோமோ என நினைக்கும் அளவுக்கு இருக்கிறது கடையின் செட்டப்.

`டாஸ்மாக் மாதிரி ஜூஸ்மாக்ன்னு ஏன் பேர் வச்சேன்னா..?!' - லாஜிக் சொல்லும் கும்பகோணம் இளைஞர்

ஜூஸ் குடிக்க உள்ளே செல்பவர்கள், தவறுதலாக டாஸ்மாக் கடைக்குத்தான் வந்துவிட்டோமோ என நினைக்கும் அளவுக்கு இருக்கிறது கடையின் செட்டப்.

Published:Updated:
டாஸ்மாக் கடை செட்டப்பில் உள்ள ஜூஸ்மாக்

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வியாபாரம் பெருகுவதற்கு விளம்பரம் என்பது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. மக்கள் மனதில் பதிந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்தால் சீக்கிரமே ரீச் ஆகும். அந்த வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டாஸ்மாக் கடை செட்டப்பில் `ஜூஸ்மாக்' எனப் பெயரிட்டு பழரச பானக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நெகட்டிவ் கமென்ட்கள், காமெடி கலாய்கள், பாராட்டுகள் எனப் பல விதமான கருத்துகளை எதிர்கொண்டாலும், `டாஸ்மாக் போனா உயிருக்கு, குடும்பத்துக்குக் கேடு. ஜுஸ்மாக் வந்தா நீங்களும் நல்லா இருப்பீங்க, குடும்பமும் நல்லா இருக்கும்' என வித்தியாசமான முறையில் வியாபாரம் செய்து வருகிறார்.

கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் உள்ள ஜூஸ் கடை
கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் உள்ள ஜூஸ் கடை

கும்பகோணம் மகாமகம் குளம் மேலக்கரையில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஜூஸ் கடை நடத்தி வருகிறார் சதீஷ்குமார். ஒரு டாஸ்மாக் கடை எப்படி இருக்குமோ அதே மாடலில், கடையின் பெயர் தொடங்கி போர்டு வரை அனைத்தையும் வடிவமைத்திருக்கிறார் சதீஷ்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டாஸ்மாக் போல `ஜூஸ்மாக்' எனப் பெயர் வைத்து, பச்சை நிறத்தில் அதே வடிவமைப்பிலான எழுத்தில் `ஜூஸ்மாக்' என எழுதி கடையின் முகப்பில் போர்டு வைத்துள்ளார். டாஸ்மாக் கடை போர்டு மற்றும் மதுபாட்டில்களில், மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என எழுதப்பட்டிருக்கும். அதேபோல், `பழரசம் நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் நன்மை' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது போர்டில். `கடைக்குள் பார் வசதி உள்ளது' என சின்ன சைஸ் போர்டும் உள்ளது. சோடா பாட்டிலில் இருந்து எடுக்கப்படும் மது பாட்டில் ஸ்டிக்கர் போல் கடையின் சுவர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

ஜூஸ் கடை
ஜூஸ் கடை

ஜூஸ் குடிக்க உள்ளே செல்பவர்கள், தவறுதலாக டாஸ்மாக் கடைக்குத்தான் வந்துவிட்டோமோ என நினைக்கும் அளவுக்கு பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்.

`என்னதான் வியாபாரத்துக்கு விளம்பரம் தேவைன்னாலும் அதுக்காக இப்படியா முகம் சுளிக்கிற வகையில கடை வைக்குறது' என்ற ரீதியிலான கமென்ட்கள், `அட வித்தியாசமா இருக்கே, வாங்க ஜூஸ் குடிச்சு கிக் ஏத்திக்கலாம்' எனக் காமெடி கமென்ட்கள், `கோயில் நகரத்துல இப்படி ஒரு கடையா' எனக் கலாசார கமென்ட்கள் எனப் பலரும் பலவிதமாகப் பேசினாலும், வியாபாரத்தில் ஒரு குறையும் இல்லை என்கிறார் சதீஷ்குமார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உலகம் முழுக்கப் பல்வேறு தொழில்கள் இருந்தாலும், மது தொழிலுக்கு எனத் தனி மவுசு எப்போதும் உள்ளது. மதுவால் ஏற்படும் தீமைகளை பாட்டிலில் அச்சிட்டும் அதன் வியாபாரம் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டேதானே வருகிறது. கொரோனா லாக்டெளன் நேரத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருள்களுக்கான பட்டியலில் டாஸ்மாக்கும் இடம்பிடித்ததுடன், அதைத் திறந்து நடத்துவதற்கு அரசு அந்த நேரத்தில் அனுமதியும் தந்தது.

டாஸ்மாக் செட்டப்பில் ஜூஸ் கடை
டாஸ்மாக் செட்டப்பில் ஜூஸ் கடை

சொல்லப்போனால் டாஸ்மாக்குக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை. எனவே, டாஸ்மாக் செட்டப்பிலான வடிவமைப்பில் ஜூஸ் கடை வைக்க நினைத்தேன். கடைக்கான பெயர் தொடங்கி அனைத்திலும் டாஸ்மாக் தோற்றத்தைக் கொண்டு வந்தேன்.

`கடையோட லுக்கே டாஸ்மாக் போல இருந்தா வொர்க் அவுட் ஆகுமா' என்று ஆரம்பத்தில் பலரும் எச்சரித்தார்கள். `டாஸ்மாக் போகிறவர்கள், டீ குடிப்பவர்களை எல்லாம் ஜூஸ் குடிக்க வைக்கலாம்... முயற்சி செய்து பார்ப்போம்' என்று இந்தக் கடையை ஆரம்பித்தேன். ரூ. 20-ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 50 வரை என் கடையில் ஜூஸ் வகைகள் கிடைக்கும். மேலும், ஒவ்வொரு பழமும் உடலுக்குத் தரவல்ல நன்மைகளையும் எடுத்துச் சொல்கிறோம்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

கடைக்குள் வரும் சிலர், `குவார்ட்டர் கொடுங்க', `இது என்ன எலைட் ஒயின் ஷாப்பா?' என்று கேட்ட சம்பவங்களும் உண்டு. சிலர் வேண்டும் என்றே சரக்குக் கேட்டு நக்கல் செய்வார்கள். பலர், `சுவாரஸ்யமான ஐடியா' என்று பாராட்டியிருக்கிறார்கள். கடை ஆரம்பித்து ஒன்றரை வருடம் ஆகிறது. இப்போது விகடன் வரை தேடி வந்து பேசுகிறீர்கள். வெற்றி என்பது இதுதானே?!''

- தன்னம்பிக்கையுடன் தம்ப்ஸ் அப் சொல்கிறார் சதீஷ்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism