Published:Updated:

`உனக்கு பயந்து மூடவில்லை!' - கொரோனா வைரஸை எச்சரித்து போஸ்டர் ஒட்டிய தனியார் நிறுவனம்

கொரோனா எச்சரிக்கை போஸ்டர்
கொரோனா எச்சரிக்கை போஸ்டர்

கொரோனாவுக்கு எதிராக கோவையில் ஒரு தனியார் நிறுவனம் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தொழில் நகரமான கோவை, ஆள் அரவமின்றிக் காணப்படுகிறது. பலத்த சோதனைக்குப் பிறகு மிகவும் குறைந்த அளவிலான வாகனங்களே இயங்குகின்றன.

கோவை
கோவை

கோவையைப் பொறுத்தவரை, ஸ்பெயினில் இருந்து திரும்பிய ஒரு மாணவி, லண்டனிலிருந்து வந்த உடுமலைப்பேட்டை நபர் என்று இரண்டு பேர் கொரோனா பாதிக்கப்பட்டு, சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

`தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!’ - குஜராத்தில் இரண்டாவது உயிரிழப்பு #NowAtVikatan

இப்படி, கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் பதைபதைக்க வைத்தாலும், மறுபுறம் இதுதொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனாவுக்காக கடைகள் மூடப்பட்டுள்ளது தொடர்பாக ஆங்காங்கே அந்தந்த கடைகளுக்கு முன்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை
கோவை

இந்த நிலையில், காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கொரோனாவுக்கு எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளது.

அந்தப் போஸ்டரில், `23.3.2020 முதல் 31.3.2020-க்குள் இப்பூவுலகை விட்டு வெளியே போய்விடு. இல்லையெனில் 1.4.2020 முதல் உன்னை இப்பூவுலகை விட்டே விரட்டிவிடுவோம். உனக்கு பயந்து மூடவில்லை. எச்சரிக்கை விடுக்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா எச்சரிக்கை
கொரோனா எச்சரிக்கை

முக்கியமாக, அந்தப் போஸ்டரில் குதிரையில் வரும் போர் வீரன் ஒருவன், கொரோனா வைரஸை விரட்டுவது போன்ற படத்தையும் வைத்துள்ளனர். இந்தக் கொரோனா எச்சரிக்கை போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு