Published:Updated:

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை; விருதுநகர் கலெக்டருக்குக் குவியும் பாராட்டுகள்!

பயனாளியுடன் விருதுநகர் கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை அமைக்கும் 'உதயம்' திட்டத்தில் 100ஆவது பயனாளிக்குக் கழிப்பறையைக் கட்டிக் கொடுத்திருக்கிறது விருதுநகர் மாவட்ட நிர்வாகம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை; விருதுநகர் கலெக்டருக்குக் குவியும் பாராட்டுகள்!

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை அமைக்கும் 'உதயம்' திட்டத்தில் 100ஆவது பயனாளிக்குக் கழிப்பறையைக் கட்டிக் கொடுத்திருக்கிறது விருதுநகர் மாவட்ட நிர்வாகம்.

Published:Updated:
பயனாளியுடன் விருதுநகர் கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி
விருதுநகர் மாவட்டம் கல்வியில் மட்டுமில்லாது பல விஷயங்களில் மாநிலத்திற்கே முன்னோடியாக திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை அமைக்கும் உதயம் திட்டத்தில் 100வது பயனாளிக்குக் கழிப்பறையை அளித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

சத்தமே இல்லாத இந்தச் சாதனையின் பின்னால் இருப்பது விருதுநகர் மாவட்டத்தின் கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி. ஆகஸ்ட் மாதம் உதயம் என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் அமைத்து தரும் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போதைக்கு இலக்காக 100 கழிப்பறைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஏழே மாதத்தில் இந்த எண்ணிக்கையைச் சாதித்திருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை
மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரத்யேக கழிப்பறைகள் ஏன்? 

கழிப்பறையைப் பயன்படுத்த மாற்றுத்திறனாளிகள் இன்னொருவரைச் சார்த்திருப்பதைத் தவிர்க்கவும், கழிப்பறையைப் பயன்படுத்த அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கான தீர்வாகவும் 'உதயம்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் வீட்டின் அருகிலேயே அவர்கள் பயன்படுத்த ஏதுவான தனி நபர் கழிப்பறைகள் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக மாற்றுத்திறனாளி பெண்கள் பாதுகாப்பாகக் கழிப்பறையைப் பயன்படுத்தும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக சக்கர நாற்காலி மூலம் செல்ல சாய்வு தளம் (Ramp), வெஸ்டர்ன் டாய்லட், கைப்பிடிகள் மற்றும் அதிக இடவசதியுடன் கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் சமூகப் பொறுப்பு நிதியின் (Corporate Social Responsibility Fund) கீழ் ரூ.35,000 மதிப்பில் இக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'உதயம்' திட்டத்தின் ஆரம்பம்

கடந்த ஜூலையில் 18 வயதிற்குக் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் பரிந்துரைக்கும் வாரியம் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலில் பயிற்சி துணை ஆட்சியர் ஷாலினி, தான் சந்தித்த மாற்றுத்திறன் வாய்ந்த நபர் பற்றி ஆட்சியரிடம் கூறியுள்ளார். இடுப்பிற்குக் கீழ் செயல்பட இயலாத அம்மாற்றுத்திறனாளி தவழ்ந்து சென்றே கழிப்பறையை உபயோகிக்கிறார் என்பதை அறிந்து கொண்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறன் வாய்ந்த நபர்கள் பயன்படுத்த ஏதுவான கழிப்பறை கட்டித்தரும் எண்ணம் தோன்றியது. இரண்டு மாதங்களுக்குள் அம்மாற்றுத்திறனாளிக்குக் கழிப்பறை அமைத்துக்கொடுத்துள்ளனர்.

கழிப்பறையின் உட்பக்கம்
கழிப்பறையின் உட்பக்கம்

விருதுநகர் மாவட்டம், குந்தலப்பட்டி ஊராட்சி, நாராயணபுரத்தைச் சேர்ந்த செல்வி.நந்தினி இந்தத் திட்டத்தின் 100 ஆவது பயனாளி. இவருக்கு உலக மகளிர் தினத்தன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தனி நபர் இல்ல கழிப்பறையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்தி முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism