Published:Updated:

விருதுநகர்: தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தம்! - 50,000 குடும்பங்கள்‌ பாதிப்பு

தீப்பெட்டித் தொழிலாளர்கள்

தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தி சாத்தூர் வட்டாரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கின. இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்: தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தம்! - 50,000 குடும்பங்கள்‌ பாதிப்பு

தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தி சாத்தூர் வட்டாரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கின. இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
தீப்பெட்டித் தொழிலாளர்கள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பிரதான தொழிலாகத் தீப்பெட்டி தொழில் இருந்துவருகிறது. சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை, படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. தற்போது தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மூலப்பொருள்களின்‌ விலையைக் குறைக்க வலியுறுத்தி தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் 11 நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் வருகிற 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தீப்பெட்டித் தொழிலாளர்கள்
தீப்பெட்டித் தொழிலாளர்கள்

இது குறித்து சாத்தூர் வட்டார தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணனிடம் பேசினோம். ``சாத்தூர் பகுதியில் மட்டும் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இங்குள்ள மக்களின் அடிப்படைத் தொழில் தீப்பெட்டி உற்பத்திதான். இதை குடிசைத் தொழிலாகவும் வீடுகளில் சிறிது சிறிதாகச் செய்கின்றனர். இதுதவிர ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை, படந்தால் உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆலைகளில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் தீப்பெட்டித் தொழிலை நம்பி வேலை செய்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆடம்பரமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி வரியைக் காட்டிலும் தீப்பெட்டி ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி அதிக அளவில் விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் போக்குவரத்துச் செலவு, தொழிலாளர் கூலி, சுங்கக் கட்டணம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் வரவுக்கு மேல் செலவு அதிகமாக உள்ளது. ஏற்கெனவே 14 ஆண்டுகளுக்குப் பிறகு 50 குச்சிகள் அடங்கிய ஒரு தீப்பெட்டியின் விலையை ஒரு ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். இதுவே எங்களுக்குக் கட்டுபடி ஆகாத நிலையில் தற்போது மூலப்பொருள்களின் விலையேற்றம் எங்களை மேலும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தீப்பெட்டித் தொழிலாளர்கள்
தீப்பெட்டித் தொழிலாளர்கள்

இந்த நிலை நீடித்தால் வருங்காலத்தில் தீப்பெட்டி உற்பத்தி இருக்குமா என்பதைச் சிந்தித்துதான் பார்க்க வேண்டும். ஆகவே தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் நலன் கருதியும், தீப்பெட்டித் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருதியும் மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்க அரசு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ஆலைகளின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது!