Published:Updated:

105 வீதிகளுக்கு செந்தமிழில் பெயர்கள்; ஊராட்சித் தலைவரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!

ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி
ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி

ஆத்திப்பட்டியில் உள்ள வீதிகளுக்குக் காலம்காலமாக அழைத்து வந்த பெயர்கள் உள்ள நிலையில், ஊராட்சியில் புதிதாக அமைந்துள்ள குடியிருப்புகளின் வீதிகளுக்கு பெயர் இல்லாமல், அங்குள்ள அடையாளங்களை வைத்து குறிப்பிடப்பட்டு வந்தது.

புதிதாகவும் பெரிதாகவும் வீடுகள் அமைந்திருந்த அக்குடியிருப்பு பகுதியிலுள்ள வீதிகள் பெயரில்லாமல் மொட்டையாகக் காட்சியளித்த நிலையில், அழகுத் தமிழில் பெயர் சூட்டி பெயர்ப்பலகையும் வைத்து அதை கூகுளில் அடையாளம் காணவும் வழி செய்துள்ளார் ஆத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி .

தெரு ஒன்றின் பெயர்
தெரு ஒன்றின் பெயர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது ஆத்திப்பட்டி ஊராட்சி. கட்டகஞ்சம்பட்டி, லட்சுமி நகர், நாராயணபுரம், ஜெயராம் நகர், என்.ஜி.ஓ காலனி பகுதிகள் ஆத்திப்பட்டி ஊராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளன.

நகரத்தின் விரிவாக்கப்பகுதிகள் ஆத்திப்பட்டி ஊராட்சியின் எல்லைக்குள் வருவதால் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஆத்திப்பட்டி ஊராட்சியிலுள்ள வீதியின் பெயர்
ஆத்திப்பட்டி ஊராட்சியிலுள்ள வீதியின் பெயர்
வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்? தரவுகள் சொல்லும் உண்மை!

ஆத்திப்பட்டியில் உள்ள வீதிகளுக்குக் காலம்காலமாக அழைத்து வந்த பெயர்கள் உள்ள நிலையில், ஊராட்சியில் புதிதாக அமைந்துள்ள குடியிருப்புகளின் வீதிகளுக்கு பெயர் இல்லாமல், அங்குள்ள அடையாளங்களை வைத்து குறிப்பிடப்பட்டு வந்தது.

அங்கு குடியிருப்பவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு முகவரி தெரிவிப்பதும், ஆட்டோகாரர், தபால்காரர், கொரியர்காரர், ஆன்லைன் டெலிவரி ஆள்கள் போன்றவர்களுக்குத் தங்கள் முகவரியைக் கண்டுபிடிப்பதும் பெரும் சிரமமாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

தெரு ஒன்றின் பெயர்
தெரு ஒன்றின் பெயர்

இந்நிலையில்தான் ஆத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி விரிவாக்கப் பகுதியிலுள்ள 105 வீதிகளுக்கும் தமிழ் மாதங்கள், காலங்கள், நதிகள், மலர்கள் எனப் பெயர்களைச் சூட்டி அந்தக் குடியிருப்புப் பகுதிகளையே அழகாக்கி விட்டார். இந்தத் தகவலை கேள்விப்பட்டு பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

``எப்படி இந்த ஐடியா வந்தது?" என்று ஆத்திப்பட்டி ஊராட்சித்தலைவர் ராஜேஸ்வரியிடம் பேசினோம். ``எங்கள் ஊராட்சியிலுள்ள விரிவாக்கப் பகுதிகளில் பல வீதிகள் பெயரில்லாமல் இருந்தன. அது அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. அதனால் அவற்றுக்குத் தமிழ் மாதங்கள், ஆறுகள், மலர்கள் என அனைவரும் விரும்பும் வகையில் பெயர்கள் வைத்தோம்.

ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி
ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி

ஏற்கெனவே ஊராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் சிறப்பாகச் செய்துள்ளேன். இப்போது வீதிகளுக்குத் தமிழில் பெயர் சூட்டியதை பல்வேறு ஊர்களில் உள்ளவர்களும் பாராட்டுகிறார்கள். எங்கள் ஊராட்சியில் உள்ள வீதிகளின் பெயர்களை கூகுளில் தேடினால் முகவரியை கண்டுபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.

ஊராட்சித் தலைவரான தன் மனைவியின் செயல்பாட்டுக்கு பக்கபலமாக இருக்கும் யோக வாசுதேவன், ``நான் ஏற்கெனவே ஆத்திப்பட்டி ஊராட்சித் தலைவராகவும், அருப்புக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவராகவும் பொறுப்பு வகித்தேன். தற்போது ஆத்திப்பட்டி ஊராட்சித் தலைவராக என் மனைவி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

ஆத்திப்பட்டி வீதிகளின் பெயர்கள்
ஆத்திப்பட்டி வீதிகளின் பெயர்கள்
வீட்டுக்கு ஒரு மரம், சீர்செய்யப்படும் நீர்நிலைகள்; வறண்ட ஊராட்சியை பசுமையாக்கும் ஊராட்சிமன்றத் தலைவி

அருப்புக்கோட்டை நகரின் விரிவாக்கப்பகுதியாக எங்கள் ஊராட்சி உள்ளதால் குடியிருப்புகள் அதிகம் உருவாகி விட்டன. ஆனால், தெருக்களுக்குப் பெயர் இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதை போக்கும் வகையில் 105 தெருக்களுக்கும் காலங்கள், மாதங்கள், ஆறுகள், மலர்கள் எனப் பொதுவான பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதிலும் குழப்பம் வராத வகையில் ஒரு பக்கம் முழுவதும் மாதங்களின் பெயர்கள், மற்றொரு பக்கம் காலங்கள், நதிகள், மலர்கள் என்று சுலபமாக முகவரி கண்டுபிடிக்கும் வகையில் பெயர் வைத்துள்ளனர்" என்றார்.

தமிழகம் முழுக்கவே விரிவாக்கப் பகுதிகளில் இதுபோல அழகுத் தமிழில் பெயர் சூட்டலாமே?!

அடுத்த கட்டுரைக்கு