Published:Updated:

வ‌.உ.சிதம்பரனாரின் `சுதேசியம்' இப்போதும் தேவைதான்..!

வ.உ.சி

ஆங்கிலேயர்கள் நம்மை வீழ்த்தி அடிமை செய்யக் கையிலெடுத்த மிக வலுவான யுக்தி வணிகம். அந்த ஆயுதத்துக்கு அதே வலுவோடு எதிர்க்க "சுதேசியம்" என்ற கொள்கைதான் என்பதை மிகத் தெளிவாக கணித்தவர் வ.உ.சி.

வ‌.உ.சிதம்பரனாரின் `சுதேசியம்' இப்போதும் தேவைதான்..!

ஆங்கிலேயர்கள் நம்மை வீழ்த்தி அடிமை செய்யக் கையிலெடுத்த மிக வலுவான யுக்தி வணிகம். அந்த ஆயுதத்துக்கு அதே வலுவோடு எதிர்க்க "சுதேசியம்" என்ற கொள்கைதான் என்பதை மிகத் தெளிவாக கணித்தவர் வ.உ.சி.

Published:Updated:
வ.உ.சி

வ‌.உ.சிதம்பரனார் என்ற பெயரைக் கேட்டதும் ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ போன்ற அடைமொழிகளே நம் நினைவுக்கு வருகிறன. ஆனால், மிகத் தீவிரமாக சுதந்திரப் போராட்டக்களத்தில் தமிழர்கள் களமிறங்குவதற்கு முக்கிய ஊக்கமாக இருந்தவர் வ.உ.சி யும் அவருடைய "சுதேசி" கொள்கையும். ஒரு தனிமனிதனின் சுதந்திரமான வாழ்க்கைக்கே பொருளாதார வலிமை காரணமாக இருக்கும் போது, ஒட்டு மொத்த நாட்டின் விடுதலைக்குப் பொருளாதார விடுதலைதான் முக்கியமானது என்கிற மிகநுட்பமாக சிந்தித்து தனித்த அடையாளமாக இருந்தவர் வ.உ.சி. ஆங்கிலேயர்கள் நம்மை வீழ்த்தி அடிமை செய்யக் கையிலெடுத்த மிக வலுவான யுக்தி வணிகம். அந்த ஆயுதத்துக்கு அதே வலுவோடு எதிர்க்க "சுதேசியம்" என்ற கொள்கைதான் என்பதை மிகத் தெளிவாக கணித்தவர் வ.உ.சி.

VOC
VOC

1905-ம் ஆண்டு வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது "சுதேசி இயக்கம்" தொடங்கப்படுகிறது. இந்த இயக்கம் இந்தியா முழுவதும் மாபெரும் தாக்கத்தையும், ஆங்கிலேயர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. சுதேசிக் கொள்கை என்பது அந்நிய பொருள்களைப் பயன்படுத்தாமல் சொந்த நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பொருள்களுக்கு முன்னுரிமை தருவது. அதில் உள்நாட்டு துணிகளையும், பண்டங்களயுமே பயன்படுத்துவது மற்றும் உள்நாட்டின் உற்பத்தியை ஊக்குவித்தலும் பெருக்குவதையுமே மிக முக்கிய குறிக்கோளாகக் கொண்டது.

குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பதும் கைத்தறி துணிகளை தயாரிப்பதும் தான் சுதேசி இயக்கம் என்ற குறுகிய எண்ணம் பரவலாக இந்தியர்களிடையே இருந்து வந்தது அந்தக் காலத்தில், சுதேசி என்ற கொள்கை ‘பொருளாதார முன்னேற்றத்த்துக்கான நகர்வு’ என்பதை நிரூபிக்கும் வகையில் 1906-ம் ஆண்டு சுதேசிய நாவாய்க் கழகத்தை தோற்றுவிக்கிறார் வ.உ.சி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்காக எஸ்.எஸ்.காலியா,எஸ்.எஸ்.லாவோ என்ற இரண்டு கப்பல்களை வாங்குகிறார். இன்றைக்கு பொருளாதார நிபுணர்கள் சொல்லக்கூடிய கூட்டு பங்கு வர்த்தக (Crowd Funding) முறையை அன்றே பயன்படுத்தி வெற்றியும் பெற்றிருந்தார். இரு கப்பல்களை வாங்குவதற்கு இந்தியா முழுவதும் நாற்பதாயிரம் பங்குகள் திரட்டி கப்பல்களை வாங்கியிருக்கும் அவருடைய புதிய சோதனை முயற்சி பொருளாதார சிந்தனைகளில் அவருக்கு இருந்த நிபுணத்துவத்தை காட்சிப்படுத்தியது.

வ.உ.சி
வ.உ.சி

இதனையடுத்து வ.உ.சியின் சுதேசிய இயக்கம் சுதேசி நூலாடைக் கழகம், சுதேசி பண்டகசாலை, சுதேசிய கல்வி இயக்கம் என்று பல்லேறு தளங்களில் இயங்கத் தொடங்கியது. ஆனால், சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் ஆதரவே பெறவில்லை என பிரிட்டிஷ் அரசின் அறிக்கைகள் கூறின. இந்த அறிக்கைகளுக்கு மாறாக சுதேசி இயக்கத்துக்கு மக்கள் பேராதரவு இருந்ததாக அதே பிரிட்டிஷ் அரசின் ரகசிய அறிக்கைகளும் கூறாமல் இல்லை. இந்திய விடுதலையை வ.உ.சி வேறொரு கோணத்தில் அணுகினார். அதாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதிலிருந்து இந்தியாவின் விடுதலை வெறும் அரசியல் விடுதலையாக இருந்தால் மட்டும் போதாது பொருளாதார விடுதலையே ஒரு தேசத்தின் பூரணமான விடுதலை என்ற சிந்தனைக்கு வித்திட்டார்.

அதன் தொடக்க விளைவுதான் சுதேசி இயக்கம். வ.உ.சி எழுதிய நூல்களை கவனிக்கிற போது அதன் முன்னுரையில் அச்சு, மை, காகிதம் என அனைத்தும் "சுதேசி"யானவை என்று அவர் எழுதியிருப்பதும், அந்நிய ஆடைகளை சலவை செய்ய மாட்டோம் என்று சலவைத் தொழிலாளர்கள் அவரது சொற்பொழிவுகளைக் கேட்ட பின்பு போராடியதும் "சுதேசிய இயக்கம்" தமிழகத்தில் மிக ஆழமாக வலுப்பெற்றிருந்ததை அறிய முடிகிறது.

நவீன வாழ்க்கையின் பொருளாதாரச் சுழலில் சுதேசியம் என்பது இன்று வாழ்க்கையோடு ஒன்றாத கொள்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இந்த இடைவெளியையே வல்லாதிக்க சக்திகள் மிகச் சாதூர்யமாக தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

வ.உ.சிதம்பரனார்
வ.உ.சிதம்பரனார்

சுதேசிய மனப்பாங்கு குறைந்து போயிருக்கிற நவீன இந்தியாவில் வ.உ.சி யின் வரலாறு நினைவுகூறப்பட வேண்டிய ஒன்று. அவருடைய சுதேசியக் கொள்கை பிரிட்டிஷாரின் வணிக யுக்திக்கு பெரிய சவாலாக இருந்தது. அதன் மூலம் சுதந்திரப் போரின் மையம் மாறியிருந்தது எவ்வளவு நிதர்சனமோ, அதே சுதேசிக் கொள்கையை இந்தியர்கள் வலுவாக பின்பிற்றுவதன் மூலம் இன்றைய இந்தியாவின் பொருளாதாரம் உயரும். அதோடு சிறு தொழிலே வாழ்வின் ஆதாரமென்றும் நம்பிக் கிடக்கும் சாமானியர்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதாரமும் மேம்படும் என்பதும் பலநூறு உண்மைகளுள் ஒன்று. எனவே வ.உ.சி-யின் சுதேசியக் கொள்கையை இப்போதும் நாம் கடைபிடித்தால் தற்கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அது நிச்சயம் வித்திடும் என்பதை கருத்தில் கொண்டு "சுதேசியம்" பழகுவேம்.