Published:Updated:

`உங்க ஓட்டை காலையிலே யாரோ போட்டுட்டாங்க!’ - கள்ள ஓட்டு போடப்பட்டதால் வாக்காளர் அதிர்ச்சி

கள்ள வாக்கு போடப்பட்டதால் பாதிக்கப்பட்ட நாகராஜன்

கள்ள ஓட்டு காரணமாக தன்னுடைய வாக்குரிமையை இழந்த அதிருப்தியில் இருந்த வாக்காளர்,அதிகாரிகளிடம் முறையிட்டார். அதனால் அவருக்கு சேலஞ்ச் வாக்கு அளிக்கும் உரிமை கிடைத்தது.

`உங்க ஓட்டை காலையிலே யாரோ போட்டுட்டாங்க!’ - கள்ள ஓட்டு போடப்பட்டதால் வாக்காளர் அதிர்ச்சி

கள்ள ஓட்டு காரணமாக தன்னுடைய வாக்குரிமையை இழந்த அதிருப்தியில் இருந்த வாக்காளர்,அதிகாரிகளிடம் முறையிட்டார். அதனால் அவருக்கு சேலஞ்ச் வாக்கு அளிக்கும் உரிமை கிடைத்தது.

Published:Updated:
கள்ள வாக்கு போடப்பட்டதால் பாதிக்கப்பட்ட நாகராஜன்

நெல்லை மாநகராட்சி 26-வது வார்டில் தி.மு.க சார்பாக பிரபாசங்கரி, அ.தி.மு.க சார்பில் தமிழரசி, பா.ஜ.க சார்பாக மாரியம்மாள் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த வார்டுக்கான தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வம் காட்டினார்கள். நெல்லை டவுன் மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க நாகராஜன் என்பவர் சென்றுள்ளார்.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

வாக்காளர் படிவத்தை சரி பார்த்த அதிகாரிகள், அவரது வாக்கு ஏற்கெனவே பதிவாகி இருப்பதைக் கண்டுபிடித்தனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் ஐந்தாவது வாக்காக அவரின் வாக்கை யாரோ பதிவு செய்துவிட்டுச் சென்றதை அதிகாரிகள் தெரிவித்ததால் நாகராஜன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னிடம் இருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் காட்டியும் அவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதனால், இந்த விவகாரத்தை இந்து முன்னணி மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் குற்றாலநாதன் மற்றும் அந்த வார்டில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மாரியம்மாள் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.

அதன்பின்னர் குற்றாலநாதன் மற்றும் வேட்பாளர் மாரியம்மாள் ஆகியோரும் நாகரஜுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவரது வாக்கை தவறான நபர்கள் கள்ள வாக்கு போட்டதற்காக அவருடைய வாக்குரிமையை மறுக்கக் கூடாது என்பதை எடுத்துக் கூறினார்கள். அதனால் தேர்தல் ஆணைய படிவம் 14-ஐ பூர்த்தி செய்து சேலஞ்ச் வாக்கு பதிவு செய்ததால் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திருப்தியில் நாகராஜன் வீடு திரும்பினார். .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism