Published:Updated:

`வலி இல்லை; அது மார்பகப்புற்று கட்டியா, இல்லையா?’ - உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு

புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்

இந்திய பெண்கள் மத்தியில் அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்களை சுட்டிக்காட்ட இயலாது. ஆனால் சில ஆபத்து காரணிகள் (risk factors) இருக்கின்றன.

`வலி இல்லை; அது மார்பகப்புற்று கட்டியா, இல்லையா?’ - உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு

இந்திய பெண்கள் மத்தியில் அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்களை சுட்டிக்காட்ட இயலாது. ஆனால் சில ஆபத்து காரணிகள் (risk factors) இருக்கின்றன.

Published:Updated:
புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில், உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ’வாக்கத்தான் (walkathon)' நடைபெற்றது.

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ’வாக்கத்தான்’ நடைபெற்றது. இதில் மார்பகப் புற்றுநோய் மருத்துவர்கள், மார்பக நோயில் இருந்து குணமடைந்தவர்கள் என, 650-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவர் தீபா
மருத்துவர் தீபா

இது குறித்து மருத்துவர் தீபா கூறுகையில், “புற்றுநோய்களில் முக்கியமானது மார்பகப் புற்றுநோய். இந்திய பெண்கள் மத்தியில் அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்களை சுட்டிக்காட்ட இயலாது. ஆனால் சில ஆபத்து காரணிகள் (risk factors) இருக்கின்றன. அதாவது தாமதமாக திருமணம் செய்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாதது, மது, குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு, மார்பகக் குறைபாடு உள்ளிட்ட இவையெல்லாம் ஆபத்து காரணிகள் ஆகும்.

என்றாலும், எந்த ஓர் ஆபத்து காரணியும் இல்லாமலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பெண்களில், 80 பெண்களுக்கு எந்தவித ஆபத்து காரணிகளும் இருப்பதில்லை.

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான ஒரே தீர்வு, அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மட்டும்தான். சில வாழ்க்கை முறை மாற்றம் மூலம் ஆபத்து காரணிகள் குறையுமே தவிர முழுமையாக விடுபட இயலாது. கர்ப்பவாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி இருப்பதுபோல, மார்பகப் புற்றுநோய்க்கு தடுப்பூசி இல்லை. எனவே, மார்பகப் புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டறிவது மிகவும் அவசியமானது.

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு ’வாக்கத்தான்’
கோவையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு ’வாக்கத்தான்’

பரிசோதனை

மேமோகிராம் (Mammogram) பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையில் மார்பகப் புற்றுநோயை கண்டறிய இயலும். 40 வயதிற்கு மேல் உள்ள இந்தியப் பெண்கள், எந்த வித அறிகுறி, ரிஸ்க் காரணி இல்லையென்றாலும், கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை மேனோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 5 - 10 நிமிடங்களில் இந்தப் பரிசோதனை முடிந்துவிடும்.

ஆரம்பநிலையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். ஆனால், இந்தியப் பெண்களில் இரண்டில் ஒருவருக்கு, முற்றிய நிலையில்தான் நோய் கண்டறியப்படுகிறது. எனவே, தேவையில்லாத அச்சத்தை நீக்கி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் தங்களது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொண்டால் மட்டுமே அவர்களின் நலமும் குடும்பத்தின் நலமும் நன்றாக இருக்கும். இதை எல்லா பெண்களும் உணர்ந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்றார்.

மருத்துவர் பரத் ரங்கராஜன் பேசுகையில், “மூன்று வகையான மார்பக பரிசோதனை செய்து கொள்ளலாம். முதலில், சுய மார்பக பரிசோதனை (self breast examination). குளிக்கும்போது, கண்ணாடி முன் நின்று, படுக்கும்போது பெண்கள் இதை மேற்கொண்டு, சின்ன கட்டி அல்லது புதிய கட்டி உள்ளதா என அறிய வேண்டும்.

மருத்துவர் பரத் ரங்கராஜன்
மருத்துவர் பரத் ரங்கராஜன்

இரண்டாவது, மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம். மூன்றாவது, மேமோகிராம் மூலம் கட்டி இருக்கிறதா, இல்லையா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பலருக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வலி இல்லாமல் இருக்கிறது. வலியில்லாத கட்டி எனில் பயப்படக்கூடிய விஷயம் இல்லை என்ற தவறான புரிதல் பல பெண்களிடம் காணப்படுகிறது. ஆனால், எந்தக் கட்டியாக இருந்தாலும் அலர்ட் ஆக வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிய அறுவை சிகிச்சை மூலம் கட்டியை நீக்கிவிட வாய்ப்புள்ளது’’ என்றார்.