Published:Updated:

திருச்செந்தூர்: `குடிநீர் இல்லை... மக்கள் திரண்டு வந்து அடிப்பாங்க’ - வைரலான கவுன்சிலரின் ஆடியோ

திருச்செந்தூர் நகராட்சி

”திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 10 நாள்களாகக் குடிநீர் வராததால் நகராட்சி பொதுமக்கள் திரண்டு வந்து அடிப்பார்கள்” என கவுன்சிலர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

திருச்செந்தூர்: `குடிநீர் இல்லை... மக்கள் திரண்டு வந்து அடிப்பாங்க’ - வைரலான கவுன்சிலரின் ஆடியோ

”திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 10 நாள்களாகக் குடிநீர் வராததால் நகராட்சி பொதுமக்கள் திரண்டு வந்து அடிப்பார்கள்” என கவுன்சிலர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
திருச்செந்தூர் நகராட்சி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு அனைத்து வார்டுகளிலும் மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவந்தது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்து எட்டு மாதங்களாகிவிட்டன. தற்போது கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. அதேநேரத்தில் புதிய பில்டிங், புதிய பஸ் ஸ்டாண்ட், புதிய மார்க்கெட், புதிய வணிக வளாகம் கட்டுவதில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டிவருவதாகச் சொல்லப்படுகிறது.

கவுன்சிலர் ரூபன்
கவுன்சிலர் ரூபன்

இந்த நிலையில் நகராட்சியின் 3-வது வார்டு கவுன்சிலர் ரூபன் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த ஆடியோவில், ”வணக்கம். நான் 3-வது வார்டு கவுன்சிலர் ரூபன் பேசுகிறேன். ஒரு வார்டிலும் தண்ணீர் இல்லை. தண்ணீர்த் தட்டுபாட்டில் போகிறது. இது நிர்வாகச் சீர்கேடா... கடவுளுடைய சோதனையா... அல்லது நாங்கள் ஜெயிச்ச தரித்திரமா ஒன்றும் தெரியமாட்டேங்குது. எல்லோரும் ஏச ஆரம்பித்துவிட்டனர். கல்லைக்கொண்டு எறிவார்கள். மற்ற வார்டுகளில் கிணறு, அடிபம்பு உள்ளது. எங்கள் வார்டில் கடல்தான் இருக்கு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய நகராட்சி... புதிய மார்க்கெட்... புதிய பில்டிங்னு சொன்னா மட்டும் போதுமா... அதுகூட முக்கியமில்லை. மக்களுக்கு முதல்ல தண்ணிதான் முக்கியம். வேற ஒண்ணும் கிழிக்க வேண்டாம். அவ்வளவு பேரும் ஏசுகிறார்கள். ஜீவாநகர்ல தண்ணீர் கொடுத்து 10 நாள்கள் ஆகிறது. கேட்டா சரியான பதில் இல்லை. ஒன்றும் சரியில்லை. மோட்டார் போயிட்டு, உடைஞ்சு போச்சுனு காரணம் சொல்கிறார்கள். மோட்டார் சரியில்லை. பைப் உடைஞ்சு போச்சு. எல்லாத்தையும் அடிச்சு விரட்டும் காலம் விரைவில் வரும். காரணம் சொன்னா அவ்வளவு பேரும் நகராட்சிக்குத் திரண்டு வந்து நம்மை அடிப்பார்கள்.

திருச்செந்தூர் 3-வது வார்டு பகுதி
திருச்செந்தூர் 3-வது வார்டு பகுதி

சிக்கல் வந்து சேரும் எச்சரிக்கையா சொல்றேன்” என வேதனையோடு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இது குறித்து கவுன்சிலர் ரூபனிடம் பேசினோம். “திருச்செந்தூர் நகராட்சிப் பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான். தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவுன்சிலர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் நான் பேசிய ஆடியோ எப்படியோ லீக் ஆகியிருக்கிறது. தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார். வைரலாகிவரும் இந்த ஆடியோ, இந்த நகராட்சி நிர்வாகத்தினரிடம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.