Published:Updated:

செம்பரம்பாக்கம்: நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு! - 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம்

ஒவ்வொரு மணி நேரமும் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுவருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

செம்பரம்பாக்கம்: நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு! - 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஒவ்வொரு மணி நேரமும் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுவருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

Published:Updated:
செம்பரம்பாக்கம்

கிருஷ்ணா நதிநீர் மற்றும் நிவர் புயலின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துவருகிறது. 22 அடியாக நீர்மட்டம் உயர்நதிருக்கும் நிலையிலும் தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியைப் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீரை ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி, இன்று பிற்பகல் 12:00 மணி அளவில் 1,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுவருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் ஆய்வு

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய ஏரிகளில் வெள்ள ஒழுங்கிகள் மூலமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு ஏரியின் முழுக் கொள்ளளவு ஆழத்திலிருந்து இரண்டடி வரை குறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அடையாற்றில் செம்பரம்பாக்கம் உபரிநீர் கலக்கும்போது திருநீர்மலைக்கு மேலுள்ள நான்கு அடையாற்றின் கிளை நதிகளில் சுமார் இரண்டடி வரை வெள்ள மட்டம் உயர வாய்ப்பிருக்கிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம், திருநீர்மலை, பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல், விமான நிலையம், கவுல் பஜார் ஆகிய பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆதனூர், கரசங்கால், மணிமங்கலம், வரதராஜபுரம், எருமையூர், திருமுடிவாக்கம், கொளப்பாக்கம், நரப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!