Published:Updated:

கொரோனா: `எப்போதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்!’ - விளக்கும் சி.எஸ்.ஐ.ஆர் தலைமை அதிகாரி

மாஸ்க்
மாஸ்க்

சமீபகால ஆராய்ச்சி மற்றும் செயல்முறைகளிலிருந்து கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதை சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் நெரிசலான இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் காற்றின்‌ மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றெரு நபருக்குப் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது உலக சுகாதார நிறுவனம். அதாவது, கொரோனா தொற்று உள்ள நபர் இருமும்போதோ, தும்மும்போதோ, சளியை வெளியேற்றும்போதோ, அந்தத் துளிகள் காற்றில் கலக்கும். அப்போது, பெரிய துளிகள் எடை காரணமாக கீழிறங்கி ஏதாவதொரு தளத்தில் படிந்துவிடும். அதுவே சிறிய துளிகள், காற்றில் மிதந்து சுவாசம் மூலம் ஒருவருக்குத் தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மாஸ்க்
மாஸ்க்

சி.எஸ்.ஐ.ஆர்(CSI - Council of Scientific and Industrial Research )-ன் தலைமை அதிகாரி சேகர் சி மாண்டே தனது வலைப்பக்கத்தில் இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

'சமீபகால ஆராய்ச்சி மற்றும் செயல்முறைகளிலிருந்து கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பது உறுதியாகியுள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் மட்டும் என்றில்லாமல் முகக்கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். எல்லோரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Vikatan

32 நாடுகளைச் சேர்ந்த 239 ஆராய்ச்சியாளர்களால் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பது உறுதிசெய்யப்பட்டு, சென்ற மாதமே உலக சுகாதார அமைப்புக்கு இது குறித்து கடிதம் எழுதினார்கள். இதைத் தொடர்ந்து தற்போது உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

mask
mask
நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்!

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறதா, இல்லையா என்ற விவாதத்தைவிட முக்கியமானது ஒரு குறிப்பிட்ட இடம் கொரோனா வைரஸ் பரவுவதற்குக் காரணமாக இருப்பது. மாண்டே கருத்துப்படி, 'மக்கள் இருமும்போதும், தும்மும்போதும் சில நீர்த்திவலைகள்( நீர்த்துளிகள்) காற்றில் கலக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு கலந்த பெரிய அளவிலான நீர்த்துளிகள் தரையை அடைந்துவிடும். மிகச் சிறிய நீர்த்துளிகள் காற்றிலேயே குறிப்பிட்ட இடங்களில் தங்கிவிடும். அந்தக் குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து செல்லும் நபர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே‌ மக்கள் அனைவரும் பொது இடங்கள், வீடுகள், அலுவலகம் என எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிந்து செல்வது நோய்ப் பரவலைத் தடுக்கும்' என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு