Published:Updated:

`நான் அறிவியலை தவறாகப் பயன்படுத்துகிறேனா?’ - சர்ச்சைக்கு வெதர்மேன் பதில்

``நான் தொடர்ந்து எழுதுவதால் என்னுடைய உடல்நலம், மன அமைதி, நேரம், குடும்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இழந்திருக்கிறேன். என்னைப்பற்றிய எந்தத் தீர்மானத்துக்கும் நீங்கள் வராதீர்கள்.''

weather man
weather man

`வானிலை ஆய்வு மையம்’ கூறும் தகவல்களுக்காக பொதுமக்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், ஃபேஸ்புக் மூலமாக வானிலை குறித்த தகவல்களைப் பதிவு செய்தவர் பிரதீப் ஜான். `வெதர் மேன்’ என்று அழைக்கப்படும் இவர், வானிலை குறித்த தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து, அதன் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டவர். இந்நிலையில், அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், `ரெட் தக்காளி’, `டமால் டுமில்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியிருகின்றனர்.

weather man post
weather man post

மேலும், நான் அறிவியலை துஷ்பிரயோகம் செய்கிறேன்; பரபரப்பை ஏற்படுத்துகிறேன் என்றும் கூறியுள்ளனர். என்ன பரபரப்பை நான் ஏற்படுத்துகிறேன். கடந்த 2 மாதங்களாகப் பல்வேறு ஊடகங்களிலிருந்து 200 - 300 போன்கால்கள் எனக்கு வந்தது. ஆனால், அதில் ஒரு போன்காலைக்கூட நான் எடுத்து பேசவில்லை. காரணம் நான் தனியாகச் செயல்பட விரும்புகிறேன். இந்தப் புகழுக்காக நான் எழுதவில்லை. இந்த ஃபேஸ்புக் பக்கம் எனக்கு நன்மை தீமை இரண்டையும் தரவல்லது. நான் தொடர்ந்து எழுதுவதால் என்னுடைய உடல்நலம், மன அமைதி, நேரம், குடும்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இழந்திருக்கிறேன். என்னைப் பற்றிய எந்தத் தீர்மானத்துக்கும் நீங்கள் வராதீர்கள்.

``தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்றால், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளில் 100 தவறுகளை என்னால் கண்டுபிடிக்க முடியும். வரம்பு என்ன என்பது எனக்குத் தெரியும்.”
வெதர்மேன்

உங்கள் பணியைப் பாருங்கள். நான் வானிலை ஆய்வு மையப் பணியில் தலையிடுவதில்லை. கடந்த 2 ஆண்டுகளில் ஒருமுறைகூட வானிலை ஆய்வு மையம் கூறியது தவறு என நான் சொன்னதில்லை. எனது பேட்டிகளில் வானிலை ஆய்வு மையம் குறித்து ஆதரவளித்துதான் வந்துள்ளேன். அப்படியிருக்க, என் பேஜ்ஜில் என்ன போட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய உங்களுக்கு உரிமையில்லை. நீங்கள் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்றால், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளில் நான் 100 தவறுகளைக் கண்டுபிடிப்பேன். வரம்பு என்ன என்பது எனக்குத் தெரியும்.

Vikatan
pradeep john
pradeep john

நீங்கள் ஒரு விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும்போது மூன்று விரல்கள் உங்களைக் குறி வைக்கின்றன என்பதை மறவாதீர்கள். நீலத் தக்காளி, மஞ்சள் தக்காளி, டம் டமால் டுமீல், பின்னிப் பெடலெடுக்குது, டிஷ் டியூம் டும், இன்னும் புதுப்புது விதங்களில் பதிவு வரும். என் இஷ்டம், இவையெல்லாம் ஒரு உணர்வுபூர்வ வெளிப்பாடு. அவையெல்லாம் உங்களுக்கு எங்கே புரியப்போகுது. நீங்கள் பணத்துக்காக வேலை செய்கிறீர்கள். எனக்கு இது பேஷன். இதுவரை நான் எந்தப் பதற்றத்தையும், உங்கள் வேலையில் எந்தத் தலையீடும் செய்ததில்லை” என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, இம்மாதம் மழைப்பதிவு குறித்த தகவலையும் பதிவிட்டுள்ளார்.