Published:Updated:

`போராட்டக்களத்தில் திருமணம்..!' - கோவையில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு வலுக்கும் எதிர்ப்பு

போராட்டக் களத்தில் திருமணம்
போராட்டக் களத்தில் திருமணம்

கோவையில் குடியுரிமைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் திருமணம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

போராட்டம்
போராட்டம்

அதில் ஓர் அங்கமாக, கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அந்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டம் நேற்று இரவு தொடங்கியது. பல்வேறு முழக்கங்களுடன் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போராட்டம்
போராட்டம்

இதில் ஆண்கள் பெண்கள் வயது முதியவர்கள் குழந்தைகள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டக் களத்தில் இன்று அப்துல் கலாம் மற்றும் ரேஷ்மா என்ற ஜோடி அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டனர். மேலும், திருமணம் செய்து கொண்ட அந்தத் தம்பதி குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டக் களத்தில் திருமணம்
போராட்டக் களத்தில் திருமணம்

இதுகுறித்து அப்துல்கலாம் ரேஷ்மா தம்பதியர், `இப்படிப்பட்ட சூழ்நிலையில் போராட்டக் களத்திலேயே திருமணம் செய்து கொள்வதில் எங்களுக்கு சந்தோஷம்தான். மக்களைப் பிரிக்கும் சட்டங்களான என்.ஆர். சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர் போன்றவற்றைத் திரும்பப் பெறவேண்டும்' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு