Published:Updated:

`ஃபர்னிச்சர் பார்க்’, `ஃபுட் பார்க்'; தூத்துக்குடிக்கு வரவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?

செந்தில்ராஜ் - மாவட்ட ஆட்சியர்
செந்தில்ராஜ் - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குயில் உள்ள தீப்பெட்டிதொழிற்சாலைகளில் மீதமாகும் கழிவுகளை காதிதத் தொழிற்சாலைகளுக்கு காகிதம் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுத்திடும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே முதன்முதலாக தூத்துக்குடியில் உள்ள `துடிசியா’ அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் வளாகத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான திட்ட வழிமுறைகள் குறித்தும், தொழில் நிறுவன கண்காட்சி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல் தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சேவை மையத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியர் செந்தில்ராஜ்
சேவை மையத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி: கூட்டுறவு சங்கக் கடன்கள்; தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் ஐ.பெரியசாமி

மேலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் பற்றியும் விளக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ``தமிழகத்திலேயே முதல்முறையாகத் தொழில் முனைவோருக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வு மையம் தூத்துக்குடி துடிசியாவில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், புதிதாகத் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலும் மாவட்ட தொழில் மையம் மற்றும் துடிசியா ஆகியவை இணைந்து மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 25 சதவிகித மானியத்துடன்கூடிய தொழில் கடனை பயிற்சியுடன் வழங்கி வருகிறது. புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்
செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

எனவே, இந்த ஆண்டு அந்த இலக்கு இரட்டிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் 150-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தீப்பெட்டி தொழிற்சாலைகள் கிடைக்கும் கழிவுகளில் 30 சதவிகிதத்தை மட்டுமே அங்குள்ளவர்கள் மறு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கின்றனர்.

மீதமாகும் கழிவுகளை அப்பகுதியில் காகித உற்பத்தி தொழிற்சாலை அமைத்து, காகிதம் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகப் பயன்பாட்டுக்கு அனுப்பிடும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடியில்தான் கப்பல் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, ரயில்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து என அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. அதேபோல, தொழில்கள் தொடங்கிட போதுமான இட வசதியும், மின்சார வசதியும் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பல்வேறு மின்சாரத் திட்டங்கள் மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகள் மூலம் 800 மெகாவாட் மின்சாரமும், உடன்குடியில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மின்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

துடிசியா ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் செந்தில்ராஜ்
துடிசியா ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி:``படிச்சிருந்தும் அகதினு வேலை தர மாட்டேங்கறாங்க!"-கனிமொழியிடம் முறையிட்ட முகாம் மக்கள்

தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர் வசதியும் உள்ளது. புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கான அனைத்து வசதிகளும் இங்குள்ளன. சிப்காட் பகுதியில், தொழிற்சாலைகளில் பயன்படுத்திய தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தும் திட்டமும் நடைமுறை படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெரிய `ஃபர்னிச்சர் பார்க்’கும், சிறிய அளவில் `ஃபுட் பார்க்’கும் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, மதுரை – தூத்துக்குடி `இண்டஸ்ட்ரியல் காரிடர்’ பகுதியில் பின்னலாடைத் தொழில்கள் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு