Published:Updated:

கொரோனா தளர்வுகள் : `கோவை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?'

கோவை
கோவை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவை மாவட்டத்துக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் ஆட்சியர் சமீரன்.

கொரோனா
கொரோனா
`நள்ளிரவிலும் தொடரும் காத்திருப்பு; தடுப்பூசிக்காக அல்லாடும் கோவை மக்கள்' #SpotVisit

அதன்படி, ஆகஸ்ட் 2-ம் தேதி நாளை முதல் கோவையில் பால், மருந்து, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7 வீதிகள், ஒப்பணக்காரவீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

கோவை
கோவை

உணவகங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து சாப்பிடவும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைகளுக்கும் அனுமதிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்து மார்க்கெட்களிலும் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது. முக்கியமாக, கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

இந்த சான்றுகள் இல்லாவிடின் சோதனைச் சாவடிகளில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று” கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு