Published:Updated:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்பது என்ன... இன்னும் எத்தனை நாள்களுக்கு மழை?

மழை
News
மழை

இந்த சுழற்சியானது வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட ஒரு அலைபோல மேலும் கீழும் ஏற்படும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும்போது காற்று வீசுவதைப் போல மேலடுக்கு சுழற்சியின்போது காற்று வீசாது.

Published:Updated:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்பது என்ன... இன்னும் எத்தனை நாள்களுக்கு மழை?

இந்த சுழற்சியானது வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட ஒரு அலைபோல மேலும் கீழும் ஏற்படும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும்போது காற்று வீசுவதைப் போல மேலடுக்கு சுழற்சியின்போது காற்று வீசாது.

மழை
News
மழை

``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழை தொடரும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

Rain
Rain

``அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்; நாளை அதாவது ஜனவரி 6-ம் தேதி நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும். மீண்டும் 10-தேதி தென்மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில்,``கடல் மட்டத்தில் உருவாகும் சுழற்சி, காற்று வீசும் திசையை நோக்கி மழையாக நகர்ந்து செல்லும். இதுதான் காற்றழுத்த தாழ்வுநிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த சுழற்சி வலுவானதாக மாறும்போது, அதன் அளவைப் பொறுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த மண்டலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அதுவே, இந்த சுழற்சி கடல்மட்டத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உருவானால் அது மேலடுக்கு சுழற்சி என அழைக்கப்படுகிறது.

மழை
மழை

இந்த சுழற்சியானது வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட ஒரு அலைபோல மேலும் கீழும் ஏற்படும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும்போது காற்று வீசுவதைப் போல மேலடுக்கு சுழற்சியின்போது காற்று வீசாது. இந்த சுழற்சி மழைக் காலம் மட்டுமல்லாது கோடைக்காலத்திலும் கூட ஏற்படும். சமயங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைவிட மேலடுக்கு சுழற்சி அதிக மழையையும் கொடுக்கவல்லது" என்றார்.