Published:Updated:

நாகை: `கொரோனா அச்சம்; வாட்ஸ்அப் வீடியோகால் புகார்’ எஸ்.பி-யின் புதிய திட்டம்

எஸ்.பி செல்வநாகரெத்தினம்
எஸ்.பி செல்வநாகரெத்தினம்

வாட்ஸ் அப் வீடியோ கால்மூலம் பொதுமக்கள் எஸ்.பி-யிடம் புகார் அளிக்கும் திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக நாகை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்முறையாக வாட்ஸ்அப் வீடியோகால் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தை நாகை மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளார் எஸ்.பி செல்வநாகரெத்தினம். இத்திட்டம் பொதுமக்களின் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

வாட்ஸ் - அப் வீடியோகால் மூலம் புகார் அளிக்கலாம்
வாட்ஸ் - அப் வீடியோகால் மூலம் புகார் அளிக்கலாம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் காவல் நிலையம் சென்று புகார் அளிப்பதில் பல்வேறு சிரமங்களைப் பொதுமக்கள் சந்தித்து வந்தனர். மேலும், மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதிகளிலிருந்து புகார் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருவதற்கு காரைக்கால் மாவட்டத்தைக் கடந்து வர வேண்டியுள்ளது. இதனால் புகார் அளிக்க வருபவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் வீணாகிறது.

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக வீட்டிலிருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோகால் மூலமாகப் புகார் அளிக்க நாகை மாவட்ட காவல்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இத்தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் இத்திட்டம் பயன்படுகிறது.

எஸ்.பி செல்வநாகரெத்தினம்
எஸ்.பி செல்வநாகரெத்தினம்

இதற்காகத் தினமும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை வாட்ஸ்அப் வீடியோகால் மூலமாகக் காவல் கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள பிரத்யேக நம்பரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரெத்தினம் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி 7598611001 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்புக் கொண்டு வீடியோகால் மூலம் தங்கள் புகாரைத் தெரிவிக்கலாம். மேலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துச் செல்லும் நேர விரயம் மற்றும் வேலை பளுவைக் குறைப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் எஸ்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு