Published:Updated:

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம் - படங்கள் வைரலானதன் பின்னணி!

பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்
பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்

கடந்த 4-ம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் பேத்தி மதுமலர் திருமணத்தில் அனைத்துத் துறையைச் சேர்ந்த வி.ஐ.பி-க்களும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து ஒருவாரம் ஆனநிலையில் திருமண புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவுகின்றன.

பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகனின் மகள் மதுமலர். இவருக்கும் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி-ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு முழுவதையும் பங்காரு அடிகளாரின் குடும்பமே ஏற்றுக்கொண்டது. திருமண பத்திரிகை கொடுக்கும்போதே தட்டு, புடவை, வேட்டி சட்டை என அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து அதகளப்படுத்தியிருந்தார்கள். தினசரி நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரமும் கொடுக்கப்பட்டன. மேல்மருவத்தூர் முழுக்கவே சாலை ஓரங்களில் பேனர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.

பங்காரு அடிகளார் இல்ல திருமண வரவேற்பு
பங்காரு அடிகளார் இல்ல திருமண வரவேற்பு

3-ம் தேதி இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், யானை, குதிரை என மணமக்களுக்குக் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. தேவாவின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மணப்பெண்ணை கோயிலிலிருந்து பல்லக்கில் தூக்கி வந்து, சாரட் வண்டியில் மணமேடை வரை கொண்டு வந்தனர். தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள், ட்ரம்ஸ் என வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அடிகளாரின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவதாரத் திருவிழா என விழா எடுத்துக் கொண்டாடுவார்கள். இதற்காக 3,000 பேர் அமரக்கூடிய அளவில் பிரம்மாண்ட அரங்கம் ஒன்று உள்ளது. திருமணத்துக்காக அந்த அரங்கத்தில் குளிர் சாதன வசதிகளை ஏற்படுத்தி, அலங்கரித்தனர். வி.ஐ.பி, பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்
பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்

நடுத்தரக் குடும்பங்களில் எப்படி இருக்குமோ அப்படித்தான் விருந்து இருந்தது. ஆனால், வாட்ஸ்அப்பில் முழு வாழை இலையைக் கவிழ்த்துப் போட்டு கறியும் சோறும் வைத்துள்ளதைப் போலப் படங்கள் பரவி வருகின்றன. அதுபோல் உடல் முழுக்க நகை அணிந்துள்ளதைப்போல ஒரு பெண்ணின் படமும் மணப்பெண் என்பது போலத் தவறாகப் பரவி வருகிறது.

மேலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வந்ததால் தி.மு.க ஆதரவுக்காரர்கள் எனவும், ஒரு சிலர் அடிகளாரின் குடும்பத்தினர் பி.ஜே.பி-யில் இணையப்போகிறார்கள் எனவும் தகவல்கள் பரவிவருகின்றன.

பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்
பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்

மூத்த மகன் அன்பழகன் தி.மு.க விசுவாசியாகவும், இளைய மகன் செந்தில் அ.தி.மு.க விசுவாசியாகவும் செயல்படுவார்கள். அதுபோல மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் இணக்கமாகவே போவது அடிகளாரின் வழக்கம். இந்தச் சூழலில் பல்வேறு அரசியல் விமர்சனங்களும் இந்தத் திருமணத்தின்போது எழுந்தன. ஆபரணங்கள், அசைவ விருந்து எனத் தவறான படங்களும் ஆடம்பரத் திருமண படங்களுடன் சேர்ந்தே பரவின. இதனால்தான் திருமணம் முடிந்து ஒருவாரம் ஆனபிறகும் தமிழகத்தின் பேசு பொருளாக அந்தத் திருமணம் அமைந்துவிட்டது.

`பங்காரு அடிகளார் இல்லத் திருமணம் விழா’ என தவறாக பரவிய படங்கள்
`பங்காரு அடிகளார் இல்லத் திருமணம் விழா’ என தவறாக பரவிய படங்கள்
`பங்காரு அடிகளார் இல்லத் திருமணம் விழா’ என தவறாக பரவிய படங்கள்
`பங்காரு அடிகளார் இல்லத் திருமணம் விழா’ என தவறாக பரவிய படங்கள்
`பங்காரு அடிகளார் இல்லத் திருமணம் விழா’ என தவறாக பரவிய படங்கள்
`பங்காரு அடிகளார் இல்லத் திருமணம் விழா’ என தவறாக பரவிய படங்கள்

இந்தத் திருமணத்துக்கு சுமார் 10 கோடிக்கு மேல் செலவு ஆகியிருக்கும் எனச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!

அடுத்த கட்டுரைக்கு