Published:Updated:

அலட்சியம் + நிர்வாகக் குளறுபடிகள்; காட்டுத்தீ சம்பவங்களைத் தடுக்க திணறுகிறதா வனத்துறை?

காட்டுத்தீ

ஏற்கெனவே பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளதையும் கருத்தில் கொள்ளாமல் வன அதிகாரிகள் உள்ளனர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, குரங்கணி, கொழுக்குமலை, மேகமலை வனப்பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடாதது.

அலட்சியம் + நிர்வாகக் குளறுபடிகள்; காட்டுத்தீ சம்பவங்களைத் தடுக்க திணறுகிறதா வனத்துறை?

ஏற்கெனவே பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளதையும் கருத்தில் கொள்ளாமல் வன அதிகாரிகள் உள்ளனர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, குரங்கணி, கொழுக்குமலை, மேகமலை வனப்பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடாதது.

Published:Updated:
காட்டுத்தீ

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தேனி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 33 சதவிகிதம் வனப்பகுதிதான். இதில் ஒரு பகுதி விருதுநகர் மாவட்ட வனப்பகுதியோடும், மற்றொரு பகுதி கொடைக்கானல் மலைப்பகுதியோடும், மற்றொருபுறம் கேரள மாநிலத்தோடும் இணைகிறது. வனவிலங்குகள் அதிகளவில் இருப்பதால், இதில் தேனி மாவட்ட வனப்பகுதி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான், மயில் உள்ளிட்டவை அதிகளவில் வசிக்கின்றன. இதேபோல அரிய வகை பறவைகள், மூலிகைச் செடிகள், மரங்களும் உள்ளன.

குரங்கணி மலையில் காட்டுத்தீ
குரங்கணி மலையில் காட்டுத்தீ

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளை மையமாகக் கொண்டு சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி அருவி, குரங்கணி, மேகமலை, ஹைவேவிஸ், சோத்துப்பாறை போன்ற பசுமை சூழ்ந்த சுற்றுலா தலங்களும் உள்ளன. இருப்பினும் கோடைக்காலங்களில் கடும் வெயில் காரணமாக பசுமை சூழ்ந்த மலைப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வறட்சியாகி வனத்தில் உள்ள செடிகள், மரங்கள் காய்ந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காட்டுத்தீ
காட்டுத்தீ

தேனி மரக்காமலை, வீரப்ப அய்யனார் கோயில் மலைப்பகுதி, தேவாரம் அருகே அம்பரப்பர் மலை, பெரியகுளம் தையிலாராமன் மலை, சோத்துப்பாறை அகமலை வனப்பகுதி, போடி கொட்டக்குடி, குரங்கணி மலைப்பகுதிகள், கூடலூர், தேவாரம் மலைப்பகுதிகள், சண்முகாநதி அணை அருகில் மேகமலை மலையடிவாரப் பகுதிகள், ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் கோடைக்காலங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த வகையில் போடி அருகில் உள்ள குரங்கணி, வடக்குமலை, அகமலை மலைப்பகுதிகளில் 2018 மார்ச் தொடக்கத்திலிருந்தே காட்டுத் தீ ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இந்நிலையில் குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ பரவியது. இந்தக் காட்டுத்தீயில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர். இதில் நிகழ்விடத்திலேயே 9 பேர் உயிர் இழந்தனர். உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர்.

குரங்கணியில் இத்தகைய விபத்து ஏற்படக் காரணமாக இருந்த காட்டுத்தீ, கோடை வெப்பத்தின் காரணமாக ஏற்பட்டதா அல்லது மனிதர்களால் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை வனத்துறை தரப்பில் குரங்கணி தீ விபத்துக்கான காரணம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

மேகமலை
மேகமலை

இத்தகைய சூழலில், கடந்த 10 நாள்களாகத் தேனி மாவட்ட வன எல்லைக்குட்பட்ட பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் (மேற்கு) உத்தமபாளையம், போடி வனப்பகுதிகளில் தீப்பரவல் அதிகமாக உள்ளது. மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியான கூடலூர் வனச்சரக பகுதிகளிலும் காட்டுத்தீ பரவல் அதிகமாக உள்ளது.

ஆண்டுதோறும் கோடைக்காலத்தின் தொடக்கத்தில் இதுபோல காட்டுத்தீ ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள பழைய போதைப்புற்களைத் தீயிட்டு அழித்தால் மட்டுமே புதிய போதைப்புற்கள் கிடைக்கும் என்பதற்காக போதைப்புற்கள் சேகரிப்பில் ஈடுபடுவோர் காட்டில் தீ வைப்பதாகவும், காடுகளின் அடிவாரங்களில் உள்ள பட்டா உரிமையாளர்கள் வனத்தை ஆக்கிரமிப்பதற்காகவும் தீயிடுவதாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், குரங்கணி தீ விபத்து போல பெரும் இழப்பை சந்தித்துவிட்டபோதிலும், தற்போது வரை வனத்துறையினர் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர். குறிப்பாக, தீத்தடுப்புக்காக அமைக்கப்படும் ஃபயர் லைன்கள் கூட முறையாக அமைக்கப்படவில்லை. அதேபோல வேட்டைத்தடுப்புக் குழு, தீத்தடுப்புக் குழு, வனக்குழுக்கள் செயல்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன. தேனி மாவட்ட வன அலுவலர் அடிக்கடி மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பதாலும் மாவட்டத்தில் உள்ள 6 வனச்சரகங்களில் உள்ள பணியாளர்களும் கையெழுத்து போடும் பணியை மட்டுமே செய்து வருகின்றனர் எனச் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குரங்கணி
குரங்கணி

ஏற்கெனவே பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளதையும் கருத்தில் கொள்ளாமல் வன அதிகாரிகள் உள்ளனர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, குரங்கணி, கொழுக்குமலை, மேகமலை வனப்பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடாதது.

மேற்குத் தொடர்ச்சிமலையில் கடந்த 10 நாள்களாகக் காட்டுத்தீ பரவல் உள்ளதால் வனஉயிர்களும், மூலிகைச் செடிகளும், அரியவகை மரங்களும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட வன அதிகாரிகளிடம் பேசினோம். ``கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமானதுதான். மனிதத் தவறினால் நடக்கிறதா என்பது குறித்து உறுதியாகக் கூறமுடியாது. எங்கள் குழுவினர் தீவிரமாகத் தீத்தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனஉயிர்களுக்கு, மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புற்கள் மட்டுமே எரிந்து வருகிறது. அடர்ந்த மரங்களுக்கு பாதிப்பு இல்லை'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism