Published:Updated:

வேலூர்: பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?!

வேலூர்

தற்போது கழிஞ்சூர் ஏரியில் 50 சதவிகித அளவு மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரி, திருமணி பாலாற்றிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் கால்வாய் மூலமாகத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும்.

வேலூர்: பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?!

தற்போது கழிஞ்சூர் ஏரியில் 50 சதவிகித அளவு மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரி, திருமணி பாலாற்றிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் கால்வாய் மூலமாகத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும்.

Published:Updated:
வேலூர்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது தண்ணீர்வரத்து குறைந்தாலும், அன்றிலிருந்து இன்றுவரை பாலாற்றில் தண்ணீர் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது பாலாற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. தற்போது அந்த ஏரிகள் பெரும்பகுதி தண்ணீர் வற்றி, நீரின் அளவும் குறைந்துள்ளது. ஒருசில ஏரிகளில் நீர் முழுவதுமாக வற்றியுள்ளது.

ஏரி
ஏரி

கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளில் தேக்கப்படும் நீர் பெரும்பாலும் விவசாயப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள ஏரிகளில் சேமிக்கப்படும் தண்ணீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்காக மட்டுமே சேமிக்கப்படுகிறது.

அப்படி நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்காக மட்டும் சேமிக்கப்படும் ஏரிகள்தான் வேலூரை அடுத்த கழிஞ்சூர், காட்பாடி ஏரிகள். கடந்த ஆண்டு பாலாற்று வெள்ளத்தால் இந்த ஏரிகள் நிரம்பின. இந்த ஏரிகளில் தேக்கப்படும் நீரால் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறது.

ஏரி
ஏரி

தற்போது கழிஞ்சூர் ஏரியில் 50 சதவிகித அளவு மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரி திருமணி பாலாற்றிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பொதுப்பணித்துறையினரால் இன்னும் ஏன் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

`இந்த ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீரால் மட்டுமே எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கிறது. ஆகவே தற்போது பாலாற்றில் வரும் தண்ணீரைக்கொண்டு விரைவாக ஏரியை நிரப்ப வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

வேலூர்: பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?!

இது குறித்து வேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டோம். " வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் முன்பே பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. தற்போது வரும் நீரைக்கொண்டு கழிஞ்சூர் ஏரியை இரண்டு நாள்களில் நிரப்பிவிடலாம். ஆனால் பருவமழை தொடங்கிய பிறகு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் கடந்த ஆண்டு குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்ததைப்போல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்து கழிஞ்சூர் ஏரிக்குத் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிஞ்சூர், காட்பாடி ஏரி கரையோரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஏரிகள் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படவிருக்கின்றன. இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றும், இதனால் ஏரிக்கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படும்" என்றார்.

வேலூர்: பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?!

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், "ஏரி நிரம்பிய பிறகு செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால்தான் கடந்த ஆண்டு குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. ஏரி நிரம்பி வழியும் இடத்தில் 30 அடியாக இருக்கும் கால்வாய் போகப்போக ஐந்து அடியாகக் குறைந்துள்ளது. இந்தக் கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள்தான். ஆகவே இந்தக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி ஏரிக்கு தண்ணீர் நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.