Published:Updated:

``மது போதையில் தொல்லை செய்ததால் அப்படி செய்து விட்டேன்!" - போலீஸில் மனைவி வாக்குமூலம்

கொலை

மது போதை தலைக்கேறிய நிலையில் தினமும் வீட்டுக்கு வரும் கணவன் மனைவியை அடித்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மனம் உடைந்த மனைவி, கணவனை விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார்

``மது போதையில் தொல்லை செய்ததால் அப்படி செய்து விட்டேன்!" - போலீஸில் மனைவி வாக்குமூலம்

மது போதை தலைக்கேறிய நிலையில் தினமும் வீட்டுக்கு வரும் கணவன் மனைவியை அடித்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மனம் உடைந்த மனைவி, கணவனை விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார்

Published:Updated:
கொலை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே குஞ்சன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர், சிங்காரவேலன்(வயது 40). கட்டட வேலைகளுக்கு கூலித் தொழிலாளியாகச் சென்றுவரும் அவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

தினமும் மது போதை தலைக்கேறிய நிலையில் சிங்காரவேலன் வீட்டுக்கு வந்துள்ளார். சமீபகாலமாக அவர் மது போதைக்கு அடிமையானதால் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். அதனால் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். குடிபோதையில் வரும் சிங்காரவேலன், மனைவி ஜெயக்கொடியை கடுமையாகத் தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்

இந்த நிலையில், சிங்காரவேலன் வீட்டுக்கு அவர் தாயார் மூக்கம்மாள் வந்திருக்கிறார். அப்போது, சிங்காரவேலன் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் சிங்காரவேலனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மது போதை காரணமாக கொலையான சிங்காரவேலன்
மது போதை காரணமாக கொலையான சிங்காரவேலன்

மருத்துவமனையில் சிங்காரவேலனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தன் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மூக்கம்மாள் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனால் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்த போலீஸார் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயக்கொடியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். அதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையின்போது கணவனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தினமும் குடித்துவிட்டு மது போதை தலைக்கேற வீட்டுக்கு வந்து அடித்து உதைத்ததுடன், குடிப்பதற்குப் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

தன்னையும் குழந்தைகளையும் நிம்மதியாக இருக்கவிடாமல் அடித்துத் துன்புறுத்திய கணவன் சிங்காரவேலனை கொலை செய்யத் திட்டமிட்ட அவர், சாப்பாட்டில் குருணை மருந்தை கலந்துகொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட அவர் வாந்தி எடுத்து மயங்கியதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தினமும் மது போதையில் வந்து தகராறு செய்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொலைசெய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது