Published:Updated:

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

கலைஞர் பேருந்து நிலையம்

பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய நகராட்சிக்குச் சொந்தமான கட்டண கழிவறையும், பொதுக் கழிவறையும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன.

திருவாரூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது "கலைஞர் நகரப் பேருந்து நிலையம்". 1976-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பேருந்து நிலையம், சமீபத்தில் கலைஞர் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இங்கிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

இந்தப் பேருந்து நிலையத்தின் அருகில் போக்குவரத்து பணிமனை, காய்கறி சந்தை உள்ளிட்டவை இருப்பதால் மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் மிக முக்கியமான இடமாக இந்த நகரப் பேருந்து நிலையம் இருந்து வருகிறது.

ஆனால், இந்த பேருந்து நிலையத்தில் தற்போது எந்த அடிப்படை வசதிகளும் முறையாகச் செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாகக் கழிவறை வசதி, குடிநீர் வசதி, போன்றவை மிக மோசமான நிலையில் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

இந்தப் பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய நகராட்சிக்குச் சொந்தமான கட்டண கழிவறையும், பொதுக் கழிவறையும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மேலும், இந்தப் பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய தாய்மார்கள் பாலூட்டும் அறையானது மேற்கூரைகள் பெயர்ந்து பெண்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது.

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

இந்த பாலூட்டும் அறைக்கு அருகில் இருக்கக்கூடிய குறுகலான இடம், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாகப் பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கக்கூடிய வியாபாரிகள் நம்மிடம் பேசுகையில், ``நாங்க எல்லாரும் ரொம்ப வருஷமா இங்க கடை நடத்திட்டு வர்றோம். இந்த மாவட்டத்துல அதிக மக்கள் பயன்படுத்தும் இடமா இந்த டவுன் பஸ் ஸ்டாண்ட் இருக்கு, எந்த பொருள் வாங்கனும்னாலும் இங்கதான் மக்கள் வந்தாகனும். ஆனா, இங்க கழிவறை, குடிநீர் வசதி'னு எந்த ஒரு அடிப்படை வசதியும் ஒழுங்கா செய்யப்படாமல் இருக்கிறது. இங்க மக்கள் வந்து உட்காரக்கூட அவ்ளோ யோசிப்பாங்க.

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

நகராட்சி கட்டண கழிவறையும், பொது கழிவறையும் மக்கள் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு எப்ப வேணாலும் இடிந்து விழுற மாதிரி இருக்கு. இரவு நேரங்களில் இந்த பஸ் ஸ்டாண்ட் மது குடிக்கிறது , சிகரெட் அடிக்கிறது மாதிரியான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருது.

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

அது மட்டும் இல்ல, குடிச்சிட்டு எங்க கடை வாசலிலேயே சிறுநீர் கழித்துவிட்டு அசிங்கம் பண்ணிட்டு போயிடுவாங்க, மறுநாள் வந்து நாங்க தான் சுத்தம் செய்யணும்.

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி, பழைய பேருந்து நிலையம்னு இருந்த, இந்த பஸ் ஸ்டாண்ட்டோட பேர கலைஞர் நகர பேருந்து நிலையம்'னு மட்டும் தான் இங்க உள்ள அதிகாரிகள் மாத்துனாங்ளே தவிர வேற எதையும் இங்க மாத்தல. இந்தப் பிரச்னைக்கெல்லாம் எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்" என்றனர் ஆதங்கத்துடன்.

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

``எனக்கு 20 வயசு ஆகுது. இந்த டவுன் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல தான் எங்க வீடு, நான் சின்ன புள்ளையா இருக்கும்போது எப்படி பார்த்தேனா... அப்படியே தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு இந்த இடம் , ஒரு முன்னேற்றமும் இல்ல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி அரசு அதிகாரிகள் வந்து இந்த பஸ் ஸ்டாண்ட் பேர மட்டும்தான் மாத்துனாங்களே தவிர வேற ஒன்னும் செய்யல, நகராட்சி அதிகாரிகள் சும்மா பேருக்கு வந்து ஆய்வு மட்டும் பண்ணிட்டு போவாங்க அவ்ளோதான் நடக்கும்.

பாத்ரூம் சரியா இல்லாததுனால எல்லாரும் திறந்த வெளியிலேயே சிறுநீர் கழிக்க ஆரம்பிச்சுட்டாங்க, அதனால இந்த பஸ் ஸ்டாண்ட்ல அஞ்சு நிமிஷத்துக்கு மேல யாராலும் நிக்க முடியாது. அந்த அளவுக்கு இங்க நாற்றம் அடிக்கும். இரவு நேரங்கள்ல இந்த பஸ் ஸ்டாண்ட் ரொம்ப மோசமா மாறிடும், குடிகாரங்க தொல்ல ரொம்ப அதிகமா இருக்கு.

அத தடுக்க இங்க உடனடியா ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தனும். மேலும் நகர காவல்துறை உடனடியாக இங்கு இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்" என்றார் அந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர் சந்தோஷ்.

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் பிரபாகர் அவர்களிடம் நேரில் சென்று கேட்ட போது,

``கலைஞர் பேருந்து நிலையத்தை சீரமைக்க டெண்டர் போடப்பட்டுள்ளது, கூடிய விரைவில் நகர பேருந்து நிலையம் சீரமைக்கப்படும். நகர காவல்துறையோடு இணைந்து இரவு நேரங்களில் கலைஞர் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்" என்றார்

திருவாரூர்: சமூக விரோதிகளின் கூடாரமான `கலைஞர்' பேருந்து நிலையம்... சீரமைக்கப்படுமா?!

தமிழக முதல்வரின் தந்தை பெயரில் இருக்கும் பேருந்து நிலையத்தின் அவல நிலையை கண்டும் காணாமல் இருக்கும் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism