Published:Updated:

வேலூர்: சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் ஓட்டேரி சிறுவர் பூங்கா... சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

சிறுவர் பூங்கா

ஓட்டேரி பூங்காவில் கடந்த சில மாதங்களாகக் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமலும், ஆங்காங்கே குட்டைபோலத் தண்ணீர் தேங்கியும் சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

வேலூர்: சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் ஓட்டேரி சிறுவர் பூங்கா... சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

ஓட்டேரி பூங்காவில் கடந்த சில மாதங்களாகக் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமலும், ஆங்காங்கே குட்டைபோலத் தண்ணீர் தேங்கியும் சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

Published:Updated:
சிறுவர் பூங்கா

வேலூர் மாநகராட்சியின் 53-வது வார்டில் அமைந்துள்ளது ஓட்டேரி சிறுவர் பூங்கா. இந்தப் பூங்காவில் அந்தப் பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல, தினமும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் இங்கு உடற்பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், ஓட்டேரி பூங்காவில் கடந்த சில மாதங்களாகக் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமலும், ஆங்காங்கே குட்டைபோலத் தண்ணீர் தேங்கியும் சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுச் சாதனங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும், பூங்காவின் கழிவறை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இருக்கும் பூங்காவுக்கு, வேலூர் மாநகராட்சியின் சார்பில் நுழைவுக் கட்டணமாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுவதுதான் வேதனை. விரைவில் இந்தப் பூங்காவைச் சீரமைத்து, அதிகாரிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும்" என்றனர்.

பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஓட்டேரி பூங்கா சீரமைக்கப்படுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism