Published:Updated:

சென்னையில் இந்த ஆண்டும் மழைநீர் தேங்குமா... நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கின்றன?!

சென்னை மழை

``சென்னையில் சாலைகள் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் இல்லை. அனைத்துச் சாலைகளும் உயரமாகவே இருக்கின்றன. இதனால், கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு மடங்கு அதிகமாக மழைநீர் தேங்கும்.” - சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம்.

சென்னையில் இந்த ஆண்டும் மழைநீர் தேங்குமா... நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கின்றன?!

``சென்னையில் சாலைகள் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் இல்லை. அனைத்துச் சாலைகளும் உயரமாகவே இருக்கின்றன. இதனால், கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு மடங்கு அதிகமாக மழைநீர் தேங்கும்.” - சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம்.

Published:Updated:
சென்னை மழை

கடற்கரை நகரமான சென்னை புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரமானவையாகவும், சில பகுதிகள் கடல்மட்டத்தைவிடத் தாழ்வானவையாகவும் உள்ளன. இதனால், சென்னையில் மிதமான மழை பெய்தாலே போதும், சாலையெங்கும் மழைநீர் தேங்கும் நிலையும், அதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வாடிக்கையாகிவருகிறது.

சென்னை மழை
சென்னை மழை

இதைத் தடுக்கும் வகையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. இதேபோல், கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் சென்னையின் முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின. அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில், சென்னை மாநகராட்சியில் 2,071 கி.மீ நீளத்துக்கு உள்ள மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வாரி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டால்தான் மழைக் காலங்களில் தண்ணீர் எந்தத் தடையும் இன்றி செல்ல முடியும். ஆனால், மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வாராத காரணத்தால்தான் கடந்த ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுமக்கள், நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதையடுத்து, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில், "சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக்குழு" என்ற 14 பேர்கொண்ட வல்லுநர்குழுவை, தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்தக் குழு சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது, தடுக்க என்ன வழி என செய்யப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்தது. இதேபோல், தற்காலிகமாகச் செய்யவேண்டிய பணிகள், நிரந்தரமாகச் செய்யவேண்டிய பணிகள் என்ற அடிப்படையில் அறிக்கையைத் தயார் செய்து கடந்த ஜூன் மாதம் முதல்வரிடம் தாக்கல் செய்தது. மேலும், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆகியவற்றின் சார்பில் சுமார் ரூ.4,749 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இந்த நிலையில், சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராத வகையில் கனமழை பெய்தது. அன்றைய தினம் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் வடிய 30 நிமிடங்களுக்கு மேல் ஆனது.

இது குறித்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,"நகரில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. ஒப்பந்ததாரரிடம் அதிகமான ஆட்கள் இல்லாத காரணத்தால் பணிகள் தாமதமாக நடைபெற்றுவருகின்றன. ஆட்களைக் கூடுதலாகப் பணியமர்த்தி பணிகளை முடிக்க உத்தரவிட்டிருக்கிறோம். செப்டம்பர் மாதத்துக்குள் 80 சதவிகித பணிகள் நிறைவடையும். எனவே, இதில் ஏற்படும் சிரமங்களைச் சிலகாலம் பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பருவமழைக்கு, சென்னையில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கும். ஆனால் கடந்த காலங்கள்போல் அதிக அளவில் மழை பெய்தாலும் மழைநீர் தேங்குவதற்கான வாய்ப்பு இல்லை" என்றார்.

சாலையில் தேங்கிய மழைநீர்
சாலையில் தேங்கிய மழைநீர்

திமுக அரசு அமைந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் முழுமை பெறாதது ஏமாற்றத்தைத் தருவதாகப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனால், சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க என்ன மாதிரியான திட்டங்களை அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலத்திடம் பேசினோம். "சென்னையில் அரசு அமைத்துள்ள மழைநீர் வடிகால்கள் எதுவும் தண்ணீர் செல்லும் வாட்டத்தில் இல்லை. சாலை வாட்டத்துக்கு ஏற்றவாறுதான் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், சாலைகள் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் இல்லை. அனைத்துச் சாலைகளும் உயரமாகவே இருக்கின்றன. இதனால், கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு மடங்கு அதிகமாக மழைநீர் தேங்கும். அதிக பாதிப்பு இந்த முறை இருக்கும். எனவே, மழைநீர் வடிகால்களை மாற்றி அமைத்தால் மட்டுமே இதற்குத் தீர்வு ஏற்படும். அதாவது 25 டன் முதல் 35 டன் திறனுள்ள மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும்.

வெங்கடாசலம் - பொறியாளர்
வெங்கடாசலம் - பொறியாளர்

எங்கெங்கெல்லாம் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் 4 அடி அகலத்துக்கு 20 அடி ஆழத்துக்கு சிமென்ட் உறைகள் அமைக்க வேண்டும். இதில் மூன்று நிலையில் `ஃபில்டர்’களைப் போட வேண்டும். இது போன்று அமைக்கும்போது தண்ணீரில் செல்லும் குப்பைகள் அனைத்தும் முதல் நிலை ஃபில்டரிலேயே நின்றுவிடும். அதைத் தாண்டிக் குப்பைகள் சென்றாலும் 2-ம் நிலையிலேயே நின்றுவிடும். 3-ம் நிலை ஃபில்டருக்கு தண்ணீர் மட்டுமே செல்லும். இதனால், எங்கும் தண்ணீர் தேங்காது. குப்பைகளையும் எளிதாக அகற்றலாம். இது போனறு மழைநீர் வடிகால்கள் அமைத்தால் மட்டுமே தண்ணீர் தேங்குவதற்குத் தீர்வு கிடைக்கும்" என்றார்.