Published:Updated:

``செத்து மடிந்தால் உங்களுக்கு சந்தோஷமா?"- பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை அதிரவைத்த கிராம மக்கள்

கல்குவாரி

நூறு அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் தோண்டி கல் எடுத்துவருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

``செத்து மடிந்தால் உங்களுக்கு சந்தோஷமா?"- பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை அதிரவைத்த கிராம மக்கள்

நூறு அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் தோண்டி கல் எடுத்துவருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
கல்குவாரி

``குவாரியால் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறோம் என்று பலமுறை ஆட்சியரிடம் சுட்டிக்காட்டிவிட்டோம். எந்தப் புண்ணியமும் இல்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாகச் செத்து மடிந்தால் உங்களுக்குச் சந்தோஷமா...'' என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தையே அதிரவைத்திருக்கிறார்கள் பீல்வாடி கிராம மக்கள்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பீல்வாடி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் செயல்படும் கல்குவாரி அரசின் சட்ட திட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டுச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ராமநாதன் என்பவரிடம் பேசினோம். ``எங்கள் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு செயல்பட்டுவரும் கல்குவாரி மற்றும் கிரஷரால் இப்பகுதியே அழிந்துபோகும் சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது.

குவாரி
குவாரி

நூறு அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் தோண்டி கல் எடுத்துவருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குவாரியிலிருந்து வெளியேறும் புகை நீர்நிலைகளில் படிவதன் மூலம் கிராமத்தில் பலருக்கு கிட்னி பாதிப்பும் ஏற்படுகிறது.

பெரம்பலூர் போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

மக்களுக்குத் தொடர்ந்து தீங்கு செய்யும் கல்குவாரியைத் தடைசெய்ய வேண்டும் என்று சித்தளி ஊராட்சி மன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அரசு விதிமுறைகளை மீறி குவாரி செயல்பட்டுவருகிறது.

இதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. குவாரி உரிமத்தை ரத்து செய்து முடக்கக் கோரி கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த குவாரியை மூட வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துவிட்டோம், நடவடிக்கை இல்லை. குவாரி முதலாளிகள், அதிகாரிகள் முதல் போலீஸார் வரை பணத்தைக் கொடுத்து சரிக்கட்டிவிடுவதால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாகச் செத்து மடிந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களா?" என்று ஆதங்கப்பட்டார்.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை மட்டும் ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து தர்ணாவைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். குவாரி உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.