Published:Updated:

`என் கணவரிடமிருந்து மகனை மீட்டுத்தாருங்கள்!' - கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தாய்!

ராமநாதபுரம் அருகேயுள்ள சூரக்கோட்டையைச் சேர்ந்த முனீஸ்வரிக்கும், சித்தனேந்தல் நாகபாண்டிக்கும் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து, சூரக்கோட்டையில் வசித்துவந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், இன்று காலை காரிலிருந்து கலெக்டர் இறங்கி தனது அலுவலகத்துக்குள் சென்ற சில நொடிகளில் அங்கு ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றார். இந்தச் சம்பவம் அங்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. கலெக்டரின் கார் டிரைவர் துரிதமாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணின் தற்கொலை முயற்சியைத் தடுத்தார்.

கலெக்டர் அலுவலக அதிகாரிகளும், காவல்துறையினரும் அந்தப் பெண்ணை மீட்டு விசாரித்தனர். அவர் பெயர் முனீஸ்வரி. ராமநாதபுரம் அருகேயுள்ள சூரக்கோட்டையைச் சேர்ந்த முனீஸ்வரிக்கும், சித்தனேந்தல் நாகபாண்டிக்கும் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து, சூரக்கோட்டையில் வசித்துவந்தனர்.

கரூர்: மூன்று குழந்தைகளுக்கும் விஷம்... தற்கொலை முயற்சி! - பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம்

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். கடந்த மாதம் இவர்களின் குடும்ப விவகாரம் சம்பந்தமாக நடந்த பஞ்சாயத்தில் 6 வயது ஆண் குழந்தையை முனீஸ்வரியிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து, நாகபாண்டியுடன் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் குழந்தைக்கு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும் நிலையில் கணவர் தரப்பில் சரிவர கவனிக்க மாட்டார்கள், அதனால் குழந்தையைத் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்திருக்கிறார் முனீஸ்வரி. ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லையாம். அதனால் வேறு வழி தெரியாமல் பிரிந்து சென்ற கணவனிடமிருந்து கட்டப்பஞ்சாயத்து மூலம் பறிக்கப்பட்ட மகனை மீட்டுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாகக் கூறியிருக்கிறார் அந்தப் பெண்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு