Published:Updated:

உலக சுற்றுலா தின விழாவிலும் தனித்துத் தெரிந்த கீழடி!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்திய விழா!

சுற்றுலா விழா
சுற்றுலா விழா

ஜல்லிக்கட்டுப் போராட்ட வெற்றிக்குப்பின் உலகத்தமிழர்கள் இப்போது கொண்டாடி மகிழ்வது கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகளைத்தான். நீண்ட நெடிய வரலாற்றுக்கும் நாகரிகத்துக்கும் சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்பது கீழடி ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் அனைத்து நிகழ்வுகளிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா விழா
சுற்றுலா விழா

பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் கீழடிப் பெருமையைப் போற்றும் வகையில் நிகழ்சிகள் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். அதன் நீட்சியாக நேற்று நடந்த உலக சுற்றுலா தினத்திலும் கீழடியின் தாக்கத்தைப் பார்க்க முடிந்தது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், மதுரையிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடத்திய உலக சுற்றுலா தின விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தின. இந்த ஹோட்டலின் சமையற்கலைஞர்கள் இணைந்து 101 உணவுகளை தயார்செய்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

செப் இளஞ்செழியன்
செப் இளஞ்செழியன்

சிறுதானிய உணவுகள், மதுரை வட்டார உணவுகள், பலவகையான சோறுகள், குழம்புகள், கூட்டுப் பொரியல்கள், சிற்றுண்டிகள், இனிப்புகள் செய்து வைத்திருந்தனர். வட மாநில, வெளிநாட்டு உணவுகளும் தயார் செய்திருந்தனர். சாதாரண ஹோட்டல் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கும் அனைத்து வகையான உணவுகளும் தமிழ்நாடு ஹோட்டலில் கிடைக்கும் என்று சொன்னார்கள்

தர்பூசணிப் பழங்களில் பலவகையான காட்சிகளை செதுக்கியிருந்தது அனைவரையும் கவர்ந்தது. அதிலும் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களையும், அடையாளங்களையும் அழகாக செதுக்கியிருந்தார்கள். பார்வையிட வந்த மக்கள் அனைவரும் பழங்களில் செதுக்கப்பட்டிருந்த கீழடி ஓவியங்களை பார்த்து வியந்தார்கள்.

சுற்றுலா விழா
சுற்றுலா விழா

இந்தாண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடத்திய விழாக்களில் கீழடியே முக்கிய விஷயமாக இருந்தது.