Published:Updated:

Jeyamohan -க்கு சாகித்ய அகாடமி தரப்படாததற்கு இதுதான் காரணம்!- பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம்

சிற்பி பாலசுப்பிரமணியம்

சென்னை தியாகராஜா அரங்கத்தில் நடந்த ஓர் நிகழ்ச்சியில், நான் தலைமை தாங்கிய அமர்வில் பாரதிராஜா பேசினார். அப்போது ‘அந்தப் பாடல் வராததற்கு நானே காரணம்.’ என்று சபையில் மன்னிப்பு கேட்டார். - சிற்பி பாலசுப்பிரமணியம்

Jeyamohan -க்கு சாகித்ய அகாடமி தரப்படாததற்கு இதுதான் காரணம்!- பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம்

சென்னை தியாகராஜா அரங்கத்தில் நடந்த ஓர் நிகழ்ச்சியில், நான் தலைமை தாங்கிய அமர்வில் பாரதிராஜா பேசினார். அப்போது ‘அந்தப் பாடல் வராததற்கு நானே காரணம்.’ என்று சபையில் மன்னிப்பு கேட்டார். - சிற்பி பாலசுப்பிரமணியம்

Published:Updated:
சிற்பி பாலசுப்பிரமணியம்

ஆத்து பொள்ளாச்சியில் இருந்து சலசலப்புடன் புறப்பட்ட ஓர் கிராமத்து நதி, நாடு முழுவதும் பயணித்து சமுத்திரமாக தலைநகருக்குள் நுழைந்திருக்கிறது. தமிழின் மூத்த எழுத்தாளரும், ஏராளமான தமிழ் பேராசிரியர்களை உருவாக்கிய ஆசிரியருமான சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு, கல்வி மற்றும் இலக்கிய பிரிவில் பத்மஶ்ரீ விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் 140-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம்

தமிழ் இலக்கியத்தை, இந்தியா முழுவதும் சுமந்து பயணித்தவர். இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருதுகளை வென்றவர். பொள்ளாச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிற்பி பாலசுப்பிரமணியத்தை சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆத்து பொள்ளாச்சி டு பத்மஶ்ரீ பயணம் குறித்து சொல்லுங்கள்...”

“எனக்கு வயது 86. ஆத்துப் பொள்ளாச்சியில் படிக்கக் கூடிய வசதி இல்லை. அப்போது பிரிட்டிஷ் காலம். திண்ணைப் பள்ளிக் கூடங்கள்தான் இருந்தன. அது அரசு அங்கீகாரம் பெற்றவை என்று சொல்ல முடியாது. அங்கிருந்து படித்து நகரத்தில் தனித்தேர்வு எழுத வேண்டும். என்னை பொள்ளாச்சியில் கொண்டு வந்து சேர்த்தனர். எனக்கு அதில் ஆர்வம் இல்லாமல் போனது. அருகில் உள்ள கேரள மாநிலத்தில் நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். நல்ல பயிற்சி தருகின்றனர் என்று கூறினர். அதனால் பாலக்காடு மாவட்டம் நல்லேப்பள்ளி என்ற ஊரில் படித்தேன். தமிழ் எழுதப் படிக்க தெரியும் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. மலையாளம் மொழி வாயிலாக கற்க வேண்டியதாக இருந்தது. அதனால் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அறிவு கிடையாது. 10-ம் வகுப்பு தேர்ச்சியடைந்த பிறகு, திருச்சியில் மருத்துவப் படிப்புக்கு செல்லும் ஓர் பிரிவில் இணைந்தேன். அப்போது தமிழ் ஆசிரியராக இருந்த அப்துல் கஃபூர் மூலமாக தமிழ் பற்று அதிகரித்துவிட்டது. தமிழ் இலக்கியம் தான் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் தமிழ் இலக்கியம் படிப்பதை அப்பா விரும்பவில்லை. மருத்துவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு இதில் உடன்பாடில்லை.

சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம்

படித்து முடித்து பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் பணியில் சேர்ந்தேன். அப்போதுதான் எழுத்தாளனாக, கவிஞனாக உருவானேன். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தொடர்பு கிடைத்தது. பிறகு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தேன். அங்கு நிறைய ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது. மயில்சாமி அண்ணாதுரை, காவல்துறையில் சிவனாந்தம், சி.சுப்பிரமணியம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் என் மாணவர்கள்”.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“வானம்பாடி தொடங்கி ஏராளமான இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் இருந்துள்ளீர்கள். அந்தப் பயணம் குறித்து சொல்லுங்களேன்.”

“நான்கு பேருக்காக எழுதுவதில் என்ன பயன் இருக்கிறது. சமுதாய சிந்தனை இல்லாமல் எழுத்து இருக்கக் கூடாது என்பது என்னுடைய கோட்பாடு. கோவை தமிழ் ஆசிரியர்கள் தான் வானம்பாடியின் முனை. புவியரசு, ஞானி, முல்லை ஆதவன், நான் தொடக்கத்தில் இருந்து பங்கு பெற்றோம். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பழைய செய்திகளை ஆராய்வதில் அர்த்தம் இல்லை. அதனால் வானம்பாடியின் பிற்கால இதழ்களை பொள்ளாச்சியில் இருந்து கொண்டு வந்தேன். பல்வேறு சிந்தனையுடையவவர்கள் அதில் கலந்து கொள்ள வைத்தோம். பெரிய வாசகர் வட்டத்தை அது உருவாக்கியது. அயல்நாடுகளுக்கு விரிவடைந்தது.”

“சாகித்ய அகடாமி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சையாகிறது. மூத்தவர்களுக்கு விருதுகள் வழங்குவதில்லை. இதுவரை 5 தமிழ் பெண் எழுத்தாளர்களுக்குதான் விருது வழங்கப்பட்டுள்ளன. ஏன் இவ்வளவு சர்ச்சைகள்..?”

“25 ஆண்டுகளுக்கு மேலாக நான் சாகித்ய அகடாமியுடன் தொடர்புடையவன். பெண்கள் இப்போதளவுக்கு, முன்பு எழுதவில்லை. அதனால்தான், அப்போது அவர்களுக்கு அதிகம் கொடுக்கப்படவில்லை. அண்மை காலமாக பெண்கள் அதிகம் எழுதுகின்றனர். பெண்கள் என்று சொன்னால், நடுவர்களுக்கு ஒரு மனத்தடை இருக்கத்தான் செய்கிறது. பெண்கள் என்றால், அதை முதலில் வைக்காமல் மற்றதை சிந்திப்பது ஒருகுறைதான். அந்தக் குறையை நீக்கும் வகையில்தான் இந்தாண்டு அம்பைக்கு கொடுத்திருக்கிறோம். அம்பைக்கு விருது கொடுக்க வேண்டும் என்ற முடிவு 5 நிமிடங்களில் எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் பல தவறான கருத்துகளும் வெளியில் பேசப்படுகின்றன.

 'சாகித்ய அகாடமி' விருது!
'சாகித்ய அகாடமி' விருது!

ஜெயமோகனுக்கு பல ஆண்டுகளாக விருது கொடுக்கப்படவில்லை. ஜெயமோகனுக்கு என்று அறிவித்து அவர் வாங்க மாட்டேன் என்று கூறினால் அந்தாண்டு வேறு யாருக்கும் பரிசு கொடுக்க முடியாது. இப்போது நிறைய போட்டி இருக்கிறது. கடும் போட்டிக்கு இடையில்தான் முடிவு செய்யப்படுகிறது. விருது வழங்கிய யாரையும் தகுதியற்றவர்கள் என்று சொல்ல முடியாது. இந்த விவாதம் இருந்தே தீரும். தமிழ் மொழியில் மட்டும்தான் இப்படி இருக்கிறது என்பது பொய். எல்லா மொழிகளிலும் இந்தத் தகராறு இருக்கிறது. அண்மைகாலமாக பெரிதாக குறை சொல்லும் வகையில் இருக்காது.

“பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளீர்கள். அதன் பிறகு நீங்கள் சினிமாவில் எழுதவில்லையே..?”

“அது பாரதிராஜா வளர்ந்து கொண்டிருந்த காலம். தயாரிப்பாளர் ராஜ் கண்ணன் இந்த ஊரைச் சேர்ந்தவர். எனக்கு தெரிந்த பலர் அதில் இருந்தனர். அப்போது ஒரு படம் வெளியாகிறது என்றால், அதுகுறித்து நோட்டீஸ் அடித்து ஊர் முழுவதும் கொடுப்பார்கள். அந்தப் படத்துக்கு நான் நோட்டீஸ் எழுதிக் கொடுத்தேன். அதை பாரதிராஜா பார்த்துவிட்டு, பாடல் எழுதுவதற்காக என்னை அழைத்தார். பாரதிராஜா திறந்த மனதுடன் இருந்திருக்கக் கூடும். ஆனால், அங்கு நிலைமை வேறு விதமாக இருந்தது. இளையராஜா, அவரின் தம்பி கங்கை அமரன், பாக்கியராஜ் எல்லோரும் இருந்தனர். இரண்டு பாடல்களுக்கான டியூன் போட்டு என்னிடம் கொடுத்தனர். முத்துலிங்கத்துக்கும் இரண்டு டியூன் போட்டு கொடுத்தனர். அதற்கு முன்பு கங்கை அமரனுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், இதில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று இளையராஜா மற்றும் பாரதிராஜா கருதியிருக்கலாம். 'ராஜா ரகசியம் தெரிஞ்சாச்சு.. ராணிக்கு சேதியும் வந்தாச்சு..’, ‘மலர்களே நாதஸ்வரம்..’ என்று இரண்டு பாடல்கள் எழுதினேன். இரண்டையும் இளையராஜா இசையமைக்க ஏற்றுக் கொண்டார். முத்துலிங்கத்தின் இரண்டு பாடல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பாரதிராஜா
பாரதிராஜா

அப்போது முத்துலிங்கம், ‘நாங்கள் இதை நம்பிதான் இருக்கிறோம் வெளி ஆள்களை உள்ளே விடாதீர்கள்.’ என்பது போல என்னை சொல்லிக் கொண்டிருந்தார். அதைத் தனிப்பட்ட முறையில் அவர் சொல்லியிருக்கலாம். அப்படி இல்லாததால், எனக்கு அது அறுவறுப்பாக இருந்தது. முத்துலிங்கம் இப்போது எனக்கு நண்பர்தான். அப்போது அப்படி சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் பாடல் பதிவு செய்வதை பார்க்கக் காத்திருந்தேன். திடீரென்று வந்த முத்துலிங்கம், ‘உங்களுக்கு இரண்டு பாட்டு கொடுத்தார்கள் தானே. அதில் ஒரு பாட்டுதான் வரும். இன்னொன்று கங்கை அமரனுக்கு கொடுத்துவிட்டனர்.’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். ‘என்னடா சினிமா உலகம் இப்படி வாய்ப்பு வரக்கூடாது என்று நினைக்கிறதே.’ என்று யோசித்தேன்.

மலர்களே நாதஸ்வரம் பாடலை மலேசியா வாசுதேவன், ஜானகி பாடினார். ஜானகிக்கு இந்தப் பாடல் பிடித்திருந்தது. அந்தப் பாடலை படம் பிடிக்க செலவு அதிகமாகும் என்பதால், படமாக்கவில்லை என்று கூறினர். பாடல் சூழல் சொல்லும்போது, ‘உங்களுக்கு கதைத் தெரியும். உங்களுக்கு ஏற்கெனவே சொல்லியிருப்பார்கள்.’ என்று பாரதிராஜா சொன்னார். ஆனால், ஒருவரும் எனக்கு கதை சொல்லவில்லை. சொல்லக் கூடாது என்று முடிவு செய்து வைத்துள்ளனர். அதற்கு முன்பு சினிமாவில் இவ்வளவு போட்டி, பொறாமை இருக்கும் என்று எனக்கு தெரியாது. திரும்பி ஊருக்கு வரும்போது இனிமேல் சினிமாவுக்கு போகக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

இளையராஜா
இளையராஜா

சென்னை தியாகராஜா அரங்கத்தில் நடந்த ஓர் நிகழ்ச்சியில், நான் தலைமை தாங்கிய அமர்வில் பாரதிராஜா பேசினார். அப்போது ‘அந்தப் பாடல் வராததற்கு நானே காரணம்.’ என்று சபையில் மன்னிப்பு கேட்டார். அவர் இப்போதும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போல பேசினார். பிறகு இளையராஜா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு என்னை தேர்ந்தெடுக்க சொல்லி நடுவராக போட்டார். அந்தப் பாடல் மறுக்கப்பட்டதால்தான் பிற்காலத்தில் இளையராஜா எனக்கு பிரியமானவராக மாறினார்.”

“ஒருபக்கம் மார்க்சியம்.. இன்னொரு பக்கம் ராமானுஜர் எப்படி எல்லாவற்றையும் இணைக்க முடிகிறது..?”

சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம்

“அடிப்படையில் மார்க்சியம் என்பது மனிதத்துவம் தான். ராமானுஜரிடம் இருந்ததும் மனித நேயம் தான். ராமானுஜரின் கோட்பாடுகள் அடிப்படையில் கீழை மார்க்சியம் என்று உருவாக்க வேண்டும் என்று எஸ்.எம் நாகராஜன் கூறினார். அதனால், அடிப்படையில் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை.”

“வாழ்க்கை பற்றிய மதிப்பீடு இப்போது எப்படி இருக்கிறது.?”

“நான் ஒரு இந்தியன். ஆனால், தமிழ் இந்தியன். தமிழ் என்ற அடையாளம் தான் என்னை இந்தியன் ஆக்குகிறது. வேறு அடையாளத்துடன் நான் இந்தியானாக இருக்க விரும்பவில்லை. நம்முடைய சமுதாயம் தமிழ் உணர்வில் பின்னடைந்திருக்கிறது. அதை முன்னுக்கு கொண்டு வருவதில் எவ்வளவு வேகமாக செயல்படுகிறோமா, அந்தளவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி இருக்கும். தமிழின் வளர்ச்சி.. தமிழ்நாட்டின் வளர்ச்சி. தமிழின் தோல்வி.. தமிழ்நாட்டின் தோல்வி. இளைஞர்களை அந்த திசையை நோக்கி கொண்டு செல்லும் பணியை ஆசிரியர், கவிதைப் பணிகளில் செய்திருக்கிறேன். அந்த லட்சியத்தை நோக்கி என்னால் இயன்ற வரை பயணித்துக் கொண்டே தான் இருப்பேன்.”

சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம்

“86 வயது ஆகிறது.. இப்போதும் சுறுசுறுப்பாக உள்ளீர்கள். உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..?”

“என்னுடைய ஆரோக்கியம் சைவ உணவு. நான் அசைவ உணவு சாப்பிட்டதே இல்லை. சைவ உணவு, மனித உடலை பத்திரமாக பாதுகாக்க கூடியது என்று நான் நினைக்கிறேன். தாவரங்களிலேயே அதிக சக்திகள் இருக்கின்றன. அதிலேயே வாழ்நாள் முழுவதும் கழிக்கலாம் என்பதற்கு 86 வயதில் நான் உதாரணமாக இருக்கிறேன். சிறிய வயதில் பள்ளிக்கு செல்லும்போது வயல் வெளி, வரப்பு, சேற்றில் நடந்து நடந்து பழக்கப்பட்டவன். அது எனக்கு வலிமையை கொடுத்திருக்கிறது. சைவ உணவு, மெல்லிய உடற்பயிற்சி இன்றியமையாதது.“

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism