Published:Updated:

`10 ரூபாய் நாணயத்தை வாங்கக் கூடாது" - சுற்றறிக்கையால் போக்குவரத்துறை மேலாளர் சஸ்பெண்ட்!

எம்.புண்ணியமூர்த்தி
`10 ரூபாய் நாணயத்தை வாங்கக் கூடாது" -  சுற்றறிக்கையால் போக்குவரத்துறை மேலாளர் சஸ்பெண்ட்!
`10 ரூபாய் நாணயத்தை வாங்கக் கூடாது" - சுற்றறிக்கையால் போக்குவரத்துறை மேலாளர் சஸ்பெண்ட்!

பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி, நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2 -ன் மண்டல மேலாளர் தனபாலை அதிரடியாக தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்துள்ளார், அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மேலாண் இயக்குநர்.

`10 ரூபாய் நாணயத்தை வாங்கக் கூடாது" -  சுற்றறிக்கையால் போக்குவரத்துறை மேலாளர் சஸ்பெண்ட்!

 கடந்த 21-ம் தேதி, திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டலத்தில், 'பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை முடிந்தவரை தவிர்க்கவும். தவறும்பட்சத்தில், வழித்தடத்தில் பணிகளுக்கு  வழங்கவும். வசூல் தொகை செலுத்தும்போது, 10ரூபாய் நாணயத்தைத் தவிர்க்குமாறு அனைத்து நடத்துநர்களுக்கும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது'  என்று சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருக்கிறது. இதை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர,  '10 ரூபாய் நாணயங்களை வாங்கக் கூடாது என்று உத்தரவு போட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?' என்று சமூக வலைதளங்களில்  பலரும் கொந்தளித்தார்கள்.   
இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த சுற்றறிக்கையை திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2-ன் மண்டல மேலாளர் தனபால், “வங்கியில் பணம் செலுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவே அந்த சுற்றறிக்கை ஒட்டப்பட்டது. ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக  அது பொது மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு,  அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால், அந்த சுற்றறிக்கை  திரும்பப்பெறப்பட்டது” என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் சர்ச்சை ஓயவில்லை. புதிய 10 ரூபாய் நாணயங்களை ஏதேதோ காரணங்களைச் சொல்லி, அரசுத் துறைகளே வாங்க மறுத்தால், அது பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும். ரிசர்வ் வங்கியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை அரசுத் துறைகளே முடக்கினால், அது எந்த வகையில் நியாயம்?”  என்று பலரும் வெடித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, அந்த சுற்றறிக்கையை வெளியிட்ட திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2-ன் மண்டல மேலாளர் தனபாலை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறார், அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “தனபால் வெளியிட்ட சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, இதுபோன்ற ஒரு சுற்றறிக்கையை நிர்வாகத்திடம் எந்த ஒப்புதலும் பெறாமல் தனிச்சையாகச் செயல்பட்டு, பொதுமக்களிடம் போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்ற வகையில் நடந்துகொண்டுள்ளார். அவர் வெளியிட்ட சுற்றறிக்கை ரத்துசெய்யப்படுவதோடு,  திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2-ன் மண்டல மேலாளர் தனபால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.