Published:Updated:

``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது!” - கோவையை உலுக்கிய மர்மம்

எம்.புண்ணியமூர்த்தி
``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில்  கிணற்றில் மிதந்தது!” - கோவையை உலுக்கிய மர்மம்
``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது!” - கோவையை உலுக்கிய மர்மம்
``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில்  கிணற்றில் மிதந்தது!” - கோவையை உலுக்கிய மர்மம்

 “கோவையில், நேற்று இரவு தனது அம்மாவோடு தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை இன்று அதிகாலை அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.”

    ``ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளியைச் சேர்ந்தவர் கனகராஜ். ஜே.சி.பி. இயந்திரங்களை வாடகைக்குவிடும் தொழில் செய்து வரும் இவர்,  கோவை விளாங்குறிச்சியை அடுத்த தனலட்சுமி நகரில் மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயதுப் பெண் குழந்தை அரும்பதாவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். காஞ்சனாவின் அம்மா பேச்சியம்மாளுடைய வீடும் கனகராஜ் வசிக்கும் வீட்டிற்கு அருகில்தான் உள்ளது. பேச்சியம்மாள் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். 

``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில்  கிணற்றில் மிதந்தது!” - கோவையை உலுக்கிய மர்மம்

 இந்தச் சூழலில், நேற்று முன்தினம் உறவினர் ஒருவருடைய  விசேஷத்திற்காக தனது சொந்த ஊரான செங்கப்பள்ளிக்குக் குடும்பத்தோடு சென்று கனகராஜ் நேற்று மாலை கோவை திரும்பியுள்ளார். செங்கப்பள்ளியிலிருந்து திரும்பியதும் கனகராஜ் குடும்பம் நேராக பேச்சியம்மாள் வீட்டிற்குத்தான் சென்றிருக்கிறது. அங்கு, காஞ்சனாவின் அம்மா பேச்சியம்மாள், காஞ்சனாவின் பெரியப்பா குப்புசாமி மற்றும் அவர் மகன் ரகுநாத், காஞ்சனாவின் சித்தி மகன் பூபதி மற்றும் உறவினர் கற்பகம் உள்ளிட்ட காஞ்சனாவின் உறவினர்கள் இருந்துள்ளார்கள். ஆகையால், இரவு மனைவி காஞ்சனாவையும், குழந்தை அரும்பதாவையும் பேச்சியம்மாள் வீட்டிலேயே விட்டுவிட்டு கனகராஜ் தனது வீட்டிற்குச் சென்று உறங்கியிருக்கிறார். 

 இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு தூங்கி எழுந்த காஞ்சனாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவில் காஞ்சனாவோடு படுத்திருந்த அரும்பதாவைக் காலையில் காணவில்லை. வீடெங்கும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. உடனே எல்லோருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது.  கனகராஜிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வீட்டிலிருந்த உறவினர்கள்  எல்லோரும் சேர்ந்து குழந்தையைத் தீவிரமாகத் தேடினார்கள். ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. உடனடியாக இதுகுறித்து கோவை  பீளமேடு போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

 சில மணி நேரத்தில்...  குழந்தை பேச்சியம்மாளின் வீட்டிற்கு எதிரே இருக்கும்  கருவேலங்காட்டில் உள்ள கிணற்றில் மிதக்கிறது’ என்ற அதிர்ச்சித் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குழந்தையின் உடலை மீட்டனர்.  மீட்கப்பட்ட உடலில் எந்த வித சலனமும் இல்லை. ஒரு வேளை உயிர் இருந்தாலும் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு,  குழந்தையைப் பரிசோதித்த  மருத்துவர்கள், குழந்தை உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்கள். இந்தத் தகவலைக் கேள்வியுற்ற அரும்பதாவின் பெற்றோர்களும் உறவினர்களும் கதறித்துடித்தனர். ஆனால், அம்மாவோடு தூங்கிக் கொண்டிருந்த அரும்பதா கிணற்றுக்குள் எப்படி விழுந்தது என்ற கேள்வி? எல்லோர் மீதும் சந்தேக ரேகையைப் படியச் செய்துள்ளது. இது தொடர்பாக கனகராஜ், காஞ்சனா, பேச்சியம்மாள், ரகுநாத், பூபதி ஆகியோரிடம் தனித்தனியாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், ``இரவில் அம்மாவோடு தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயதுக் குழந்தை நடு ராத்தியில் எழுந்து தனியாக ஆள் அரவமற்ற அடர்ந்த கருவேலங்காட்டிற்குள் வருவதற்கும் அங்குள்ள கிணற்றில் தவறி விழுவதற்கும் வாய்ப்பே இல்லை. வீட்டு வாசலிலும் வீட்டுக்குள் ஆள்கள் தூங்கும் போது, `யாரேனும் வெளியாட்கள் வீட்டிற்குள் நுழைந்து  குழந்தையைத் தூக்கிச் செல்வதற்கும் வாய்ப்புகள் குறைவு. வீட்டில் இருந்த நபர்களோ அல்லது அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து செல்லும் நபர்களோதான் குழந்தையைத் தூக்கிச் சென்று இருக்க முடியும். குடும்பப் பிரச்னை காரணமாகக்கூட குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது மிக விரைவில் கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படும் என்றனர்” அதிர்ச்சி விலகாமல்.